Home > NEWS > உரிமம், பதிவு பெறாமல் உணவு வணிகம் செய்தால் கடும் நடவடிக்கை

உரிமம், பதிவு பெறாமல் உணவு வணிகம் செய்தால் கடும் நடவடிக்கை

7,December, 2012

சிவகங்கை, : உரிமம் அல்லது பதிவு பெறாமல் உணவு வணிகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் அறிவுடைநம்பி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:   
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு சட்டம் 2006ன் படி, உரிமம் மற்றும் பதிவு பெற்று வியாபாரம் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி விடுதிகள், திருமண மண்டபங்கள், அரசுத்துறை கேண்டீன், வாரச்சந்தைகளில் உணவுத் தொழில் புரிபவர்கள், சினிமா தியேட்டர் கேண்டீன்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், தெரு வியாபாரிகள் உள்பட உணவு வணிகம் செய்வோர் அனைவரும் உரிமம் மற்றும் பதிவு செய்ய வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் நவம்பர் மாத இறுதி வரை 185 பேர் உரிமம் பெற்றுள்ளனர். இதுதவிர 4,063 பேர் பதிவு செய்துள்ளனர். உணவு வணிகர்கள் அனைவரும் 2013 பிப்ரவரி 4ம் தேதிக்குள் உரிமம் அல்லது பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு உரிமம் அல்லது பதிவு பெறாமல் உணவு வணிகம் செய்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு வட்டார அளவில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். தேவகோட்டை ஜோதிபாசு 9976922549, இளையான்குடி ராஜேந்திரன் 9443465919, காளையார்கோவில் செய்சங்கர் 9442060981, கல்லல் உதயராஜன் 9626293075, கண்ணங்குடி ராஜேஸ்குமார் 9626270324, சிவகங்கை மற்றும் மானாமதுரை முத்துராமலிங்கம் 9894263253, எஸ்.புதூர் கோவிந்தன் 9865988975, சாக்கோட்டை முத்தமிழ் 9442544455, சிங்கம்புணரி தியாகராஜன் 9442215086, திருப்புவனம் காளைப்பாண்டியன் 9443498437, திருப்புத்தூர் சுரேஷ் 9442215504, தேவகோட்டை நகர் ஜோதிபாசு 9789229984, காரைக்குடி நகர் செல்லத்துரை 9842621949, சிவகங்கை நகர் ரமேஷ் 9865429827.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Categories: NEWS
%d bloggers like this: