Archive

Archive for 12,December, 2012

FOOD SAFETY AND STANDARDS ACT: WORKSHOP AND LICENSING MELA-FSSAI

12,December, 2012 Comments off

CLICK HERE FOR DOWNLOAD PDF FILE

WORKSHOP LICENSING MELA_Page_1 WORKSHOP LICENSING MELA_Page_2 WORKSHOP LICENSING MELA_Page_3 WORKSHOP LICENSING MELA_Page_4 WORKSHOP LICENSING MELA_Page_5

Categories: What's New-FSSAI

புதுக்கோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை -கல்லூரி வகுப்பறைகளில் கொசு மருந்து அடிப்பு துப்புரவு பணி தீவிரம்-தினகரன் செய்தி

12,December, 2012 Comments off

புதுக்கோட்டை, : டெங்கு தடுப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வகுப்பறைகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி வளாகத்தினை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. நகராட்சி சுகாதார பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் கப்புகள், தேங்கி கிடந்த நீர் ஆகியவற்றை அகற்றினர். மேலும் குடிநீர் தொட்டியினை சுத்தம் செய்து கொசு மருந்து அடித்தனர். அனைத்து வகுப்புகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.
இந்த பணியின் போது மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மகாமணி, துப்புரவு அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் கல்லூரி கேண்டினில் தரமாக, தூய்மையாக உணவு தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர். மேலும் 3 நாட்களுக்கு மேல் குடிநீரை பாத்திரங்களில் வைத்திருந்தால் கொசு புழு உருவாக வாய்ப்பிருப்பதாக அறிவுரை வழங்கினர்.
முன்னதாக இந்த பணிகளை புதுக்கோட்டை தொற்றுநோய் தடுப்பு ஆய்வாளர் டாக்டர் ராம்கணேஷ் தொடங்கி வைத்தார்.
ஏற்பாடுகளை அரசு மகளிர் கலைக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் காயத்ரிதேவி, வெள்ளையம்மாள், விஜயா ஆகியோர் செய்திருந்தனர். துப்புரவு மேற்பார்வையாளர் செல்லையா, மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Pudukkottai

ஓட்டல்களில் ரேஷன் பாமாயில் !-தினமலர் செய்தி

12,December, 2012 Comments off

image

ஊட்டி: நீலகிரியில், தரமற்ற உணவு பண்டங்களின் விற்பனை குறித்த, உணவு பாதுகாப்பு துறையினரின் "ரெய்டு’ தொடர்கிறது. ஓட்டல்களில் பயன்படுத்தி வந்த, ரேஷன் பாமாயிலும் பறிமுதல் செய்யப்பட்டன.நீலகிரியில், தரமற்ற உணவு பண்டங்களின் விற்பனை குறித்து, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் டாக்டர் ரவி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வராஜ், ஆதி கோபாலகிருஷ்ணன், அருண் உட்பட குழுவினர் சில நாட்களாக "ரெய்டு’ நடத்தி வருகின்றனர்.

எல்லநள்ளியில் ஏகப்பட்ட பிரச்னை: நேற்று காலை, ஊட்டி அருகே எல்லநள்ளி, கேத்தியில் உள்ள ஓட்டல், மளிகை கடைகளில் "ரெய்டு’ நடத்தப்பட்டது. இதற்கு பின், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரவி கூறுகையில், ""கேத்தியில் உள்ள தனியார் கல்லூரி கேன்டினில் நடத்தப்பட்ட ஆய்வில், சாயம் கலந்த கலப்பட தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

சுகாதாரமான முறையில் உணவுப் பண்டங்களை தயாரிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது."ரேஷன் கடைகளில் விற்கப்படும் பாமாயில், வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது,’ என்ற நிலையில், எல்லநள்ளியில் உள்ள ஒரு ஓட்டலில், அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டது.

"செயற்கை’ தட்டுப்பாடு :


இதன் மூலம் ரேஷன் கடைகளில் இருந்து, பாமாயில் "பிளாக்’ மார்க்கெட்டில் விற்பனை செய்வது ஊர்ஜிதமாகி உள் ளது. இதனை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், மக்களுக்கு பாமாயில் கிடைக்காத "செயற்கை’ தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. மற்றொரு ஓட்டலில், சமையலுக்கு தயாராக இருந்த அழுகிய காய்கறிகள், திறந்த நிலையில் பாதுகாப்பற்ற சூழலில் வைக்கப்பட்டிருந்த மீன்கள் அகற்றப்பட்டன.

பல உணவுப் பொருட்களை தயாரிக்க, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மறு சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய உணவை உண்பதால் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஒரு வார காலத்திற்குள் இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள் ளது,” என்றார்.

உணவு பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது

12,December, 2012 Comments off

திண்டுக்கல், : உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கிருபாகரன், அமைச்சர் விசுவநாதனிடம் மனு கொடுத்தார்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பாராளுமன்றத்தில் இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று இந்திய வணிகர்களுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவிற்கும், தமிழகதத்தில் அனுமதிக்கமாட்டோம் என்ற முடிவிற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டம் 2006ஐ தமிழகத்தில் அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  உடன் சங்க தொடர்பு அலுவலர் நசீர்சேட் உடனிருந்தார்.

Categories: Dindigul, DISTRICT-NEWS