Archive

Archive for 22,December, 2012

கேன்களில் காலாவதி குடிநீர் விற்பனை அதிகரிப்பு: தகுதிச்சான்றிதழ் பெறாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை-தினமலர் செய்தி

22,December, 2012 1 comment

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் சுத்திகரிக்கப்பட்டதாக கூறி கேன்களில் வழங்கப்படும் குடிநீர் காலாவதியானதாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. ஆய்வு மற்றும் பணியாளர் உடல் தகுதி சான்றிதழ் இல்லாத குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பாதுகாப்பற்ற குடிநீரை பருகுவதால் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவுகிறது. தற்போது, மக்கள் பெரும்பாலும், கேன்களில் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அதிகமாக பயன்படுத்துவதால், இதன் விற்பனை அமோகமாக உள்ளது.
நேற்று முன்தினம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு கடையில் வாங்கிய குடிநீர் கேனில்(20 லிட்டர்) புழுக்கள் இருந்ததாக புகார் எழுந்தது. குடிநீர் வாங்கியவர் கோர்ட்டில் வழக்கு தொடரபோவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பட்டணம்காத்தான் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கண்ணன் ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது: ஓட்டல்கள், இறைச்சி, மளிகை கடைகள், பேக்கரி, குடிநீர் நிறுவனம், டாஸ்மாக் "பார்’கள் என அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் 2006ன் படி, ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆண்டு வருமானம் 12 லட்சத்திற்கு மேல் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் லைசென்ஸ் அவசியம்.
ஆண்டு வருமானம் குறைவாக உள்ள நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். குடிநீர் மூலம் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால், இங்கு அதிக கவனம் செலுத்துகிறோம்.
சுத்திகரிப்பு குடிநீர் தயாரிப்பவர்கள், குடிநீர் குறித்த ஆய்வு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குடிநீர் கேன்களில் உற்பத்தி, காலாவதி தேதி இல்லாமல் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்.
உச்சிப்புளியில் இருந்து குடிநீர் கொண்டு வரும் லாரிகளும், உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். லைசென்ஸ் பெற, 2013 பிப்.,4ம் தேதி கடைசி நாள். உணவு தொடர்பாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும், உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் மக்கள் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

உணவுபாதுகாப்பு சட்டம் கருத்தரங்கு நாளை (23.12.2012) நடக்கிறது-தினகரன் செய்தி

22,December, 2012 Comments off

கோவை,:இந்திய தொழில்கள் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உணவு பாதுகாப்பு சட்டம் குறித்த கருத்தரங்கு கோவை  புது சித்தாபுதூர் மாநகரட்சி மேல் நிலைப்பள்ளியில் நாளை 23.12.2012 மாலை 5.30 மணி க்கு நடக்கிறது. தமிழக உணவு பாதுகாப்பு கமிஷனர் குமார் ஜெயந்த், உதவி கமிஷனர் டாக்டர் ஜெயக்குமார், கலெக்டர் கருணாகரன், ஸ்ரீகி ருஷ்ணா ஸ்வீட்ஸ்  நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், இந்திய அரசு எஸ்எம்ஓ. டாக்டர்சீனிவாசன், சுகுணா கோழிப்பண்ணை நிர்வாக இயக்குநர் சவுந்திரராஜன், அன்னபூர்ணா ஓட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

Categories: NEWS

உயிருக்கு உலை வைக்கும் "பேட்டரி லைட்" மிட்டாய்- தினமலர் செய்தி

22,December, 2012 1 comment

22_12_2012_007_014

Categories: Dindigul, DISTRICT-NEWS

உணவு விற்பனையாளர்கள் பிப்.4க்குள் பதிவு அவசியம்

22,December, 2012 Comments off

20121222a_014106012