Archive

Archive for 28,December, 2012

6 Kerala warehouses sealed & 7,000 tonnes of adulterated pepper seized

28,December, 2012 Comments off

 

Six National Commodity and Derivatives Exchange (NCDEX)-accredited warehouses in Kerala were sealed recently, following complaints that the stock of black pepper was adulterated. Food safety authorities, who sent the seized samples to the laboratory for tests, are now awaiting the results.
When FnB News contacted the Commissionerate of Food Safety, Government of Kerala, K Ajith Kumar, designated officer, Ernakulam, confirmed this, and added, “About 7,000 tonnes of black pepper have been seized.” The cost of the stock is approximately Rs 300 crore.
“The warehouses are located in the districts of Ernakulam and Alappuzha,” he added. NCDEX accepts black pepper deposits as per its standard specifications only. The issue of mineral oil – with which the pepper samples were found to be adulterated – was raised for the first time.
Mineral oil is deemed unfit for human consumption, and is not permitted to be used in any edible commodity. It was perhaps used to suppress fungus or moulds and give the spice more weight and its characteristic dark black colour.
NCDEX’s corporate services department is looking into buyers’ complaints for mineral oil content, and is in touch with the Food Safety and Standards Authority of India (FSSAI) for further course of action.

Method to make black pepper

Black pepper is produced by cooking the unripe (green) drupe (fruit) of the pepper plant briefly in hot water. This is done for two reasons – to clean them, and to prepare them for drying. The heat ruptures the cell walls in the pepper, hastening the work of the browning enzymes during drying.
The traditional method is to dry the drupes in the sun for several days, but now machines are also used for the same purpose. At this stage, the pepper around the seed shrinks and darkens into a thin, wrinkled layer, which is black in colour.
The dried spice is called black peppercorn. At some places, the berries are manually separated from the stem and sun-dried, thus eliminating the boiling process. After the peppercorns are dried, the berries can be crushed to extract pepper spirit and oil.
Uses of the derivatives

  • Pepper spirit is used in aerated beverages such as Coca-Cola and a number of medicinal and beauty products
  • Pepper oil is used as an oil in ayurvedic massage, and used in a number of beauty and herbal treatments 
Categories: NEWS

FSSAI–LIC/REG LAST DATE -ADVT

28,December, 2012 Comments off

1h20121228a_00710101701

Categories: What's New-FSSAI

உணவகங்கள், இறைச்சி கடைகளுக்கு உரிமம் தருவது மாற்றம்

28,December, 2012 Comments off

சென்னை : உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளை, சுகாதார துறை கள ஆய்வு செய்யாமலேயே, வருவாய் துறை மூலம், அவற்றுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை மாநகராட்சி கைவிட்டு உள்ளது.""உரிமம் வழங்குதல், நடவடிக்கை எடுத்தல் என, அனைத்தும் வருவாய் துறையிடம் இருந்து, சுகாதார துறைக்கு மாற்றப்பட்டு, முறைப்படுத்தப்படும்,” என, மேயர் சைதை துரைசாமி தெரிவித்து உள்ளார். வெளிமாநிலத்தில் இருந்து சுகாதாரமற்ற இறைச்சி வரத்து அதிகரித்த நிலையில், அதை தடுக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டது. தொடர்ந்து, ஒரு சில இறைச்சி விற்பனை கடைகள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. சுகாதார துறையினர் ஆய்வு செய்தபோது, கால்வாயோரம், சாலையோரங்களில் எந்த சுகாதார ஏற்பாடும் இல்லாமல், இறைச்சி கடைகள் இருந்தன. மாநகராட்சியில், இதுபோன்ற கடைகளுக்கு சுகாதார துறை தான் உரிமம் வழங்க வேண்டும். 2007ம் ஆண்டில் இந்த நடைமுறையை மாநகராட்சி மாற்றி, வருவாய் துறையிடம் அளித்ததால், சுகாதார துறையினரின் ஆய்வு இல்லாமலேயே, பணம் கட்டிய உடன், உரிமம் வழங்கப்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால், சுகாதார துறையினரால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இது தொடர்பாக, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவையும் மாநகராட்சி செயல்படுத்தவில்லை.சுட்டி காட்டிய "தினமலர்’இதில் ஏற்படும் நிர்வாக குளறுபடிகள் குறித்தும், நடைமுறை சிக்கல் குறித்தும், "தினமலர்’ நாளிதழில், கடந்த அக்., 10ம் தேதி, சிறப்பு செய்தி வெளியானது. இது தொடர்பாக, தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டும் வந்தன. இந்த நிலையில், நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காணப் பட்டு உள்ளது. இனியாவது…நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனரமேஷ், இது தொடர்பான கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
கடந்த 2007ம் ஆண்டில், ஓட்டல்கள், சிற்றுண்டி சாலைகள், டீ கடைகள், டிபன் கடைகள் போன்றவற்றுக்கு உரிமம் வழங்குவதை சுகாதார துறையிடம் இருந்து, வருவாய் துறைக்கு மாநகராட்சி மாற்றியது. சுகாதார துறை கள ஆய்வு நடத்தாமலேயே, இஷ்டம் போல் உரிமங்கள் வழங்கப்பட்டன. அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத நிலையில், உரிமங்களை ரத்து செய்ய சுகாதார துறையால் முடியவில்லை. இந்த நடைமுறைக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, முறையான வழிகாட்டுதல்களை வகுத்து, நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், உணவகம், சிற்றுண்டி சாலை, டீக்கடைகள், இறைச்சி கடைகளுக்கு உரிமம் வழங்குதல், நடவடிக்கை எடுத்தல் எல்லாம் இனி, ஒற்றை சாளர முறையில் மேற்கொள்ளப்படும். வருவாய் துறையிடம் உள்ள அனுமதி வழங்கல், நடவடிக்கை எடுத்தல் அதிகாரங்கள் இனி, சுகாதார துறைக்கு மாற்றப்படும். இதனால், விதிமுறைப்படி சுகாதாரமான முறையில் இயங்காத கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சியின் இந்த நல்ல முடிவு, "இனியாவது, சுகாதாரமான உணவு கிடைக்குமா’ என்ற, எதிர்பார்ப்பை சென்னைவாசிகள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. கிடைத்துள்ள புதிய அதிகாரத்தை வைத்து, சுகாதார துறை துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
இறைச்சி கடைகளுக்கான விதிமுறைகள் என்ன? கடையின் தரை மற்றும் சுவர்கள், எளிதில் சுத்தம் செய்யப்படும் வகையில் இருக்க வேண்டும்.கழிவுகளை சேகரிக்க, மூடியுடன் கூடிய குப்பை தொட்டி வைக்கப்பட வேண்டும்.கழிவு நீரை வெளியேற்ற, முறையான இணைப்பு இருக்க வேண்டும்.ஈ, பூச்சி தொல்லை ஏதும் ஏற்படாத வகையில், கடையில் கம்பி வலையுடன் கதவுகள் இருக்க வேண்டும்.பணி செய்வோருக்கு, தொற்று நோய் ஏதும் இல்லை என, மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும்.மாநகராட்சி இறைச்சி கூடத்தில் வெட்டப்பட்ட, இறைச்சியையே விற்க வேண்டும்.இறைச்சி கூடத்திலிருந்து இறைச்சியை எடுத்து செல்ல, மூடியுடன் கூடிய அலுமினிய பெட்டிகளை பயன்படுத்த வேண்டும். திறந்த நிலையில், சைக்கிள் அல்லது வேறு வண்டிகளை பயன்படுத்தல் கூடாது.

Categories: Chennai, DISTRICT-NEWS

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்கீழ் உணவு உற்பத்தி, விற்பனையாளர்கள் உரிமம் பெற பிப்ரவரி 4–ந்தேதி வரை கெடு மாவட்ட நியமன அலுவலர் தகவல்

28,December, 2012 Comments off

தர்மபுரி,

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் உணவு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் வாரச்சந்தை விற்பனையாளர்கள் பதிவு மற்றும் உரிமம் பெற வருகிற பிப்ரவரி மாதம் 4–ந்தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு

தர்மபுரி மாவட்டத்தில் உணவு, சமையல் எண்ணை தயாரிப்பு மற்றும் மூலப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், வியாபாரிகள் வருகிற பிப்ரவரி மாதம் 4–ம்தேதிக்குள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன்கடைகளும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் அனைத்து உணவு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் லைசென்சு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு தனியார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பீடாக்கடைகள், ரேஷன்கடைகள், அரிசி,ஜவ்வரிசி ஆலைகள், குடிநீர் தயாரிப்பு ஆலைகள், சாலையோர கடைகள், சில்லிசிக்கன் கடைகள், பள்ளி,கல்லூரி கேண்டீன்கள், மருத்துவமனை கேண்டீன்கள் சமையல், காண்டிராக்டர்கள், மதுபானக்கடை பார்கள், சமையல் எண்ணை தயாரிப்பாளர்கள் தங்கள் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து மாவட்ட நியமன அலுவலரிடம் உரிமம் பெற வேண்டும்.

ரூ.5 லட்சம் அபராதம்

இதேபோல் பேக்கரி,ஓட்டல், ஸ்வீட் கடைகள், மளிகை, டீக்கடைகாரர்கள், குளிர்பானம் ஐஸ் தயாரிப்பாளர்கள் பால் விற்பயை£ளர்கள் பால்சேகரிப்பு மையங்கள், இறைச்சி வியாபாரிகள் காய்கறி கடை, தெருவில் கூவி விற்பனை செய்பவர்கள் என அனைவரும் தங்கள் நிறுவன விவரத்தினை தங்கள் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து மாவட்ட நியமன அலுவலரிடம் உரிமம் பெற வேண்டும்.பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் சரியான முறையில் லேபிளிங் செய்யப்பட்டு விற்பனை செய்ய வேண்டும். தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி முகவரி, பொருள் உள்ளடக்கம் போன்றவற்றை சரியாக குறிப்பிட வேண்டும்.

காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. பதிவு அல்லது உரிமம் பெறாமல் பொருட்களை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குற்றத்திற்கு குறைந்த பட்சம் 6 மாத கால சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். வரும் 2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4–ந்தேதிக்குள் உரிமம் பதிவு சான்றிதழ் பெற வேண்டும். உரிமம் பெறுவது தொடர்பாக மேலும் விவரங்களை பெற மாவட்ட நியமன அலுவலரை 9443925926 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஒன்றிய வாரியாக நியமிக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களையும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட நியமன அலுவலர் தினேஷ் தெரிவித்து உள்ளார்.

Categories: Dharmapuri, DISTRICT-NEWS