Archive

Archive for 29,December, 2012

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நர்சிங் மாணவிகளுக்கு தரமற்ற உணவு ஒப்பந்ததரர்களுக்கு நோட்டீஸ் -பத்திரிகை செய்திகள்

29,December, 2012 Comments off

002001003

Categories: DISTRICT-NEWS, Madurai

Raid at GRH hostel,shops raise stink-Madurai Food Safety Team–Action taken

29,December, 2012 Comments off

004

005

Categories: DISTRICT-NEWS, Madurai

FSSAI-LICENSING MELA & WORKSHOP – JAN-20 AT MADURAI

29,December, 2012 Comments off
Categories: NEWS

நாகையில் 20 ஆயிரம் மதிப்புள்ள கலப்பட டீ துள் அழிப்பு

29,December, 2012 Comments off

20121229a_006106010_001

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி உரிமம் பெற பிப்ரவரி4 கடைசி தவறினால் 6 மாதம் சிறை, ரூ5 லட்சம் அபராதம்-தினகரன் செய்தி

29,December, 2012 Comments off

தர்மபுரி, : உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் உணவு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வாரச்சந்தை விற்பனையாளர்கள் ஆகியோர் பதிவு மற்றும் உரிமம் பெற வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் அனைத்து உணவு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உரிமம் பெறுவது கட்டாயம்.
இதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பீடாக்கடைகள், ரேஷன்கடைகள், அரிசி, ஜவ்வரிசி ஆலைகள், குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள், சாலையோர கடைகள், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனை உணவகங்கள், சமையல், காண்டிராக்டர்கள், மதுபானக்கடை பார்கள், சமையல் எண்ணை தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரிடம் முறையாக பதிவு செய்து மாவட்ட நியமன அலுவலரிடம் உரிமம் பெற வேண்டும்.
இதே போல் பேக்கரி, ஹோட்டல், ஸ்வீட் கடை கள், மளிகை, டீக்கடைகாரர்கள், குளிர்பானம், ஐஸ் தயாரிப்பாளர்கள், பால் விற்பயைளர்கள், பால்சேகரிப்பு மையங்கள், இறைச்சி வியாபாரிகள், காய்கறி விற்பனை செய்பவர்கள் என அனைவரும் தங்கள் நிறுவன விவரத்தை தங்கள் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து மாவட்ட நியமன அலுவலரிடம் உரிமம் பெற வேண்டும். பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, முகவரி, பொருள் உள்ளடக்கம் போன்றவற்றை சரியாக குறிப்பிட வேண்டும். காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.
பதிவு அல்லது உரிமம் பெறாமல் பொருட்களை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்ற மாகும். இந்த குற்றத்திற்கு குறைந்த பட்சம் 6 மாத கால சிறை தண்டனையும், ரூ5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதிக்குள் உரிமம், பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.
இது தொடர்பாக மேலும் விவரங்களை பெற மாவ ட்ட நியமன அலுவலரை 9443925926 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஒன்றிய வாரியாக நியமிக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களையும் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை மாவட்ட நியமன அலுவலர் தினேஷ் தெரிவித்துள்ளார்.

Categories: Dharmapuri, DISTRICT-NEWS