Archive

Archive for 30,December, 2012

காந்தி கிராமம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிகள்

30,December, 2012 Comments off

ஞாயிற்றுக்கிழமை 23.12.2012 காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி….. DSCN0053 ஐம்பது ஆண்டுகளாக கடத்து வந்த பாதையில்….. ஐநூறுக்கும் அதிகமானோர்…. அரங்கம் நிறைந்தது……… அமர இடமில்லை…. அவையனர்களுக்கும் ஆச்சர்யம்! அனைவரும் ஆய்வாளர்களாக பயின்றவர்கள் DSCN0052 சில பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு கூட நேரடி மக்கள் சேவையில் வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. எங்களுக்கு வாய்ப்பு அளித்த பல்கலைக்கழகத்திற்கும், மகேஸனுக்கும் நன்றி…. DSCN0036 1982 -1983 ஆண்டு மாணவர்களில் சிலர் …… DSCN0039 1992 -1993 ஆண்டு மாணவர்களில் சிலர்…….

Categories: NEWS

வேலூர்- 50 லிட்டர் கலப்பட பால் கொட்டி அழிப்பு-தினகரன் செய்தி

30,December, 2012 1 comment

224838_286932201429095_2011567308_n181328_286932211429094_1753211184_n

Categories: DISTRICT-NEWS, Vellore

ஆம்பூரில் வீடுகளில் விற்பனை செய்யும் பால் வியாபாரிகளிடம் திடீர் சோதனை: 250 லிட்டர் கலப்பட பால் கொட்டி அழிப்பு-மாலைமலர் செய்தி

30,December, 2012 1 comment

9dd057c5-07ad-4aad-b1a4-c6f6268583e6_S_secvpf.gif

ஆம்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு வீடு வீடாக விற்பனை செய்யப்படும் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தண்டபாணிக்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி அவரது தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆம்பூர் நேத்தாஜி ரோட்டில் திடீர் சோதனை நடத்தினர். 10க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் சோதனை செய்தனர்.
அப்போது கலப்பட பால்விற்றதை கண்டனர். 250 லிட்டர் கலப்பட பாலை கீழே கொட்டி அழித்தனர். பால் விற்க லைசென்சு உள்ளதா பால் வாங்குபவர்களின் முகவரி உள்ளதா என்று கேட்டனர். லைசென்சு இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Thiruvallur

பந்தலூர் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்-தினமலர் செய்தி

30,December, 2012 1 comment

பந்தலூர் : பந்தலூர் பஜாரில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பிரிவு) அலுவலர் டாக்டர் ரவி தலைமையிலான அதிகாரிகள், நேற்று காலை பந்தலூர் பஜாரில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரும்பாலான பேக்கரிகளில் காலாவதியான ஐஸ், பிஸ்கட், மிக்சர், விவரங்கள் இல்லாத
கலப்பட டீதூள் உள்ளிட்டவை விற்கப்பட்டு வந்தது தெரியவந்தது. முறையாக பராமரிப்பில்லாத பிரிட்ஜில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வைத்திருந்தது, ஓட்டல்களில் திறந்த வெளியில், சுகாதாரமற்ற சூழலில் உணவு சமைத்தது, அழுகிய காய்கறிகள், கழுவாத பாத்திரங்களில் உணவு தயாரிக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
டாக்டர் ரவி கூறியதாவது: பிப்ரவரி 4ம்தேதிக்குள், ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் விற்பனை செய்யப்படும் கடை உரிமையாளர்கள், எங்கள் துறை மூலம் உரிமம் பெறுவதும்; 1லட்ச ரூபாய்க்குள் வியாபாரம் செய்வோர் அனுமதி பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பந்தலூர் பகுதியில் வந்த புகாரை அடுத்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டத்தில், காலாவதி பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுப்பண்டங்கள் தயாரிப்பது தெரியவந்தது. முதல்கட்டமாக, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டுள் ளது. மறுமுறை ஆய்வின்போது இதே நிலை நீடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த புகாரை, கூடலூர் பகுதி பொறுப்பாளரிடம் 98659 55719 என்ற எண்ணிலோ, அல்லது 0423-2450088 என்ற எண்ணிலோ தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.