Archive

Archive for May, 2013

World No Tobacco Day, 31 May 2013

31,May, 2013 Comments off

World No Tobacco Day 2013 width=

Ban tobacco advertising, promotion and sponsorship

Every year, on 31 May, WHO and partners everywhere mark World No Tobacco Day, highlighting the health risks associated with tobacco use and advocating for effective policies to reduce tobacco consumption. Tobacco use is the single most preventable cause of death globally and is currently responsible for killing one in 10 adults worldwide.

The theme for World No Tobacco Day 2013 is: ban tobacco advertising, promotion and sponsorship.

A comprehensive ban of all tobacco advertising, promotion and sponsorship is required under the WHO Framework Convention for Tobacco Control (WHO FCTC) for all Parties to this treaty within five years of the entry into force of the Convention for that Party. Evidence shows that comprehensive advertising bans lead to reductions in the numbers of people starting and continuing smoking. Statistics show that banning tobacco advertising and sponsorship is one of the most cost-effective ways to reduce tobacco demand and thus a tobacco control “best buy”.

Goals

The global tobacco epidemic kills nearly six million people each year, of which more than 600 000 are non-smokers dying from breathing second-hand smoke. Unless we act, the epidemic will kill more than eight million people every year by 2030. More than 80% of these preventable deaths will be among people living in low- and middle-income countries.

The ultimate goal of World No Tobacco Day is to contribute to protect present and future generations not only from these devastating health consequences, but also against the social, environmental and economic scourges of tobacco use and exposure to tobacco smoke.

Specific objectives of the 2013 campaign are to:

  • spur countries to implement WHO FCTC Article 13 and its Guidelines to comprehensively ban tobacco advertising, promotion and sponsorship such that fewer people start and continue to use tobacco; and
  • drive local, national and international efforts to counteract tobacco industry efforts to undermine tobacco control, specifically industry efforts to stall or stop comprehensive bans on tobacco advertising, promotion and sponsorship.
Tobacco epidemic

6 millionNearly 6 million people killed by tobacco each year.

Tobacco’s toll

600 000people die each year from exposure to second-hand smoke.

Noncommunicable diseases (NCDs)

63%of all deaths are caused by NCDs, with tobacco as the greatest risk factor.

 

Categories: NEWS

Coimbatore set for drive against pan masala

31,May, 2013 Comments off

With the notification prohibiting the selling or manufacturing of ghutka, pan masala and other products containing tobacco and nicotine having been issued, Food Safety officials in the district are all set to enforce the ban announced by Chief Minister Jayalalithaa in the Assembly on May 8.

Official sources told The Hindu here on Thursday that teams would be constituted to inspect shops and other places where the products were likely to be sold.

To monitor the implementation, sources said that a district level committee would be constituted with Collector as the chairperson. Other members include the Superintendent of Police, District Commercial Tax Officer, Deputy Director of Health Services, Chief Educational Officer, Corporation, and Regional Transport Officer besides the Designated Officer.

During the first meeting of this committee, sources said, the modalities for implementing the ban at the district level must be worked out. The Committee must appraise the Tamil Nadu Food Safety and Drug Administration Commissioner of the proposed course of action in their city.

Further, all the check posts operated by the Departments of Commercial Tax, Motor Vehicles and the police would be immediately alerted to prevent vehicles carrying tobacco products.

In a circular dated May 28, Tamil Nadu Food Safety and Drug Administration Commissioner, Kumar Jayant, has directed the Designated Officers in all districts to immediately notify all food business operators to remove these banned products within a month, failing which the stocks would be seized and destroyed.

Besides educating all local food business operators on this ban and its provisions, the Commissioner had also directed all the Designated Officers of the Administration to prepare a list of all the places were these banned products were manufactured, stored, distributed and sold.

Mr. Jayant also warned the Designated Officers not to harass the food business operators or misuse the provisions of the ban and implement it smoothly.

Categories: NEWS

தமிழ்நாடு முழுவதும் குட்கா, பான்மசாலாவுக்கு தடை அமலுக்கு வந்தது – தினத்தந்தி செய்தி

31,May, 2013 Comments off

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும் என்று கடந்த 8–ந்தேதி சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். பேரவை விதி எண் 110–ன் கீழ் ஓர் அறிக்கையை படித்த முதல்–அமைச்சர், புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களை தடுக்கும் வகையில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்திருப்பதாக அப்போது தெரிவித்தார்.

இந்த நிலையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பை தொடர்ந்து, குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவு நேற்று வெளியிடப்பட்டது.

உடல்நலத்திற்கு கேடு

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:– இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் விதிமுறைகளின்படி, புகையிலை மற்றும் நிகோடின் ஆகியவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் அவற்றை எந்த ஒரு உணவு பொருளிலும் சேர்க்கக்கூடாது. குட்காவும், பான் மசாலாவும் புகையிலை மற்றும் நிக்கோடின் சேர்க்கப்படும் உணவு பொருளாக உள்ளன. எனவே, குட்காவுக்கும், பான்மசாலாவுக்கும் உடனடியாக தடை விதிக்க வேண்டியது அவசர அவசியமாகிறது.

அமலுக்கு வந்தது

எனவே, பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை, நிக்கோடின் இடம்பெறும் இதர உணவு பொருட்கள் எந்த பெயரில் சந்தையில் இருந்தாலும் அவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகிக்கவும், விற்பனை செய்யவும் இந்த உத்தரவு வெளியான நாள் முதல் ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

அரசு உத்தரவு நேற்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு ஓராண்டுக்கு அமலில் இருக்கும். இது தொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பான்மசாலா விற்பனைக்கு தடை

முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தபடி, தமிழ்நாட்டில் பான்மசாலா, குட்கா விற்பனை செய்வதற்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவு நேற்று இரவு அரசு பிறப்பித்து உள்ளது. வியாபாரிகள் தங்கள் கையிருப்பில் உள்ள பான்மசாலா, குட்காவை அகற்றுவதற்கு ஒரு மாத காலஅவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் சரக்குகளை அகற்றி விடவேண்டும். அதையும் மீறி கையிருப்பில் வைத்து இருந்தால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். அத்துடன் சம்பந்தப்பட்ட வியாபாரிகள், கடைக்காரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்

Categories: NEWS

தமிழ்நாடு முழுவதும் குட்கா, பான்மசாலாவுக்கு தடை அமலுக்கு வந்தது – தினத்தந்தி செய்தி

31,May, 2013 Comments off

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும் என்று கடந்த 8–ந்தேதி சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். பேரவை விதி எண் 110–ன் கீழ் ஓர் அறிக்கையை படித்த முதல்–அமைச்சர், புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களை தடுக்கும் வகையில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்திருப்பதாக அப்போது தெரிவித்தார்.

இந்த நிலையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பை தொடர்ந்து, குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவு நேற்று வெளியிடப்பட்டது.

உடல்நலத்திற்கு கேடு

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:– இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் விதிமுறைகளின்படி, புகையிலை மற்றும் நிகோடின் ஆகியவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் அவற்றை எந்த ஒரு உணவு பொருளிலும் சேர்க்கக்கூடாது. குட்காவும், பான் மசாலாவும் புகையிலை மற்றும் நிக்கோடின் சேர்க்கப்படும் உணவு பொருளாக உள்ளன. எனவே, குட்காவுக்கும், பான்மசாலாவுக்கும் உடனடியாக தடை விதிக்க வேண்டியது அவசர அவசியமாகிறது.

அமலுக்கு வந்தது

எனவே, பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை, நிக்கோடின் இடம்பெறும் இதர உணவு பொருட்கள் எந்த பெயரில் சந்தையில் இருந்தாலும் அவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகிக்கவும், விற்பனை செய்யவும் இந்த உத்தரவு வெளியான நாள் முதல் ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

அரசு உத்தரவு நேற்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு ஓராண்டுக்கு அமலில் இருக்கும். இது தொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பான்மசாலா விற்பனைக்கு தடை

முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தபடி, தமிழ்நாட்டில் பான்மசாலா, குட்கா விற்பனை செய்வதற்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவு நேற்று இரவு அரசு பிறப்பித்து உள்ளது. வியாபாரிகள் தங்கள் கையிருப்பில் உள்ள பான்மசாலா, குட்காவை அகற்றுவதற்கு ஒரு மாத காலஅவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் சரக்குகளை அகற்றி விடவேண்டும். அதையும் மீறி கையிருப்பில் வைத்து இருந்தால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். அத்துடன் சம்பந்தப்பட்ட வியாபாரிகள், கடைக்காரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்

Categories: NEWS

Authorities act against poor quality food – THE TIMES OF INDIA

30,May, 2013 Comments off

LUDHIANA: A drive has been launched in the city against manufacturers, who are violating norms of the Food and Safety Act. An ice cream parlour in Model Town, Rawat Ice Cream, was recently slapped a fine of Rs 50,000 for not complying with the sub-standards of the Food and Safety Act. Another person from Machhiwara was fined Rs 50,000 as milk powder also did not meet the laid out standards.

Food and Safety Inspector Harpreet Kaur said the parlour was not following the specifications laid in the Act as the ice creams contained 5.35% of milk solids content as against the required 10%.

Neeru Katyal Gupta, Additional Deputy Commissioner-cum-Adjudicating Officer ( Food Safety), has demanded a strict action against shopkeepers and manufacturers who violate the sub-standards for various eatables such as ice creams, cheese and butter among others.

"Maintaining a standard in food items is very important because even little adulteration can lead to greater health hazards. As far as fines and punishments are concerned, the maximum fine that can be imposed on a defaulter is Rs 5 lakh," she said.

Rameshwar Das, owner of Rameshwar Bateesa Factory, Tajpur Road, was handed a fine of Rs 30,000 as three worms were found dead in the sweets prepared at his unit. Another bateesa maker Anil Kumar was also slapped a fine of Rs 30,000 due to presence of a 4-metre long plastic thread in his produce.

Dr Aasheesh Ahuja, a senior medico from Dayanand Medical College and Hospital (DMCH), said, "Casual approach towards food especially milk products can cause some serious health ailments. If a milk product does not have the prescribed amount of milk (calcium) that means it would have an excess amount of carbohydrate or some other mineral which would be very harmful."

The doctor further said that adulteration in food is quite common these days and often hampers children’s mental and physical growth. "Further, it is one of the reasons why kids these days suffer from stomach diseases and allergies," he pointed out.

Categories: NEWS

Tamil Nadu bans gutka and pan masala with immediate effect – THE TIMES OF INDIA

30,May, 2013 Comments off

CHENNAI:

The Tamil Nadu government has banned gutka and pan masala with immediate effect. Chief minister J Jayalalithaa had announced in the assembly on May 8 about the ban but a notification was not issued till now.

It will be illegal to manufacture, store, distribute and sell these tobacco products.

The state food safety department officials said "We will give one month time for the manufactures to stop production. But storage, distribution and sale of gutka and pan masala will be banned. We will seize these products from Thursday" said a senior official in the food safety department.

TOI had recently reported that food safety department officials were clueless because the ban, though announced, did not come into effect and no action could be taken against violators.

Health experts say migrant labourers constituted a huge chunk of pan masala users in Chennai and it causes increasing incidence of mouth cancer.

Categories: NEWS

90% கேன் குடிநீர் குடிக்க உகந்தது இல்லை: இந்திய நுகர்வோர் சங்கம் எச்சரிக்கை – தினமணி செய்தி

30,May, 2013 Comments off

watercan

சந்தையில் விற்கப்படும் குடிநீர் கேன்களில், 90 சதவீத கேன் குடிநீர் குடிக்க உகந்ததில்லை எனஇந்திய நுகர்வோர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தச் சங்கத்தின் சார்பில் பாதுகாப்பான குடிநீர் குறித்த பயிற்சி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் ஆர். தேசிகன் பேசியதாவது:

இந்தியாவில் நுகர்வோர் தொடர்பான சட்டங்கள் போதுமான அளவு இருப்பினும் அவை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. சுகாதாரமான குடிநீர் தர வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசு தவறும்போது நாம் வழக்குத் தொடரலாம்.

நமது குடும்பத்தினரும், உறவினர்களும் சுகாதாரமற்ற குடிநீரைப் பருகுவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டியது மகளிரின் கடமை.

எந்தக் குடிநீராக இருந்தாலும் நன்கு காய்ச்சி, ஆற வைத்துப் பருக வேண்டும். சிறிய குடிநீர்ப் பாட்டில்களில் வாங்கும் நீரைப் பயன்படுத்தியதும், அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி எறிந்துவிட வேண்டும். அவற்றை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலக் குறைபாடு வரும். தற்போது கேன் குடிநீர் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம். அதிர்ச்சிதரத்தக்க உண்மை என்னவெனில், 10 நிறுவனங்களின் கேன் குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் 9 குடிநீர் மாதிரிகள் குடிக்க உகந்ததில்லை எனத் தெரியவந்துள்ளது என்றார்.

சென்னை, இந்திய தரக்கட்டுப்பாட்டு வாரிய (பிஐஎஸ்) அதிகாரி (தென் மண்டலம்) எச்.எல். உபேந்திரா பேசியதாவது:

தரத்தைப் பொருத்தவரை சமரசம் செய்து கொள்ளக் கூடாது. தரத்தை மக்கள் கேட்டுப் பெற வேண்டும். எந்தப் பொருளாக இருந்தாலும், அதன் தரம் குறித்து மக்களிடம் திருப்தியற்ற நிலையே காணப்படுகிறது.

குடிநீரைப் பொருத்தவரை சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் என்பது அத்தியாவசியமானது.

மக்கள் தொகை அதிகரிக்கும்போது, நீரின் அளிப்பு குறைந்து விடுகிறது. மழை நீர் சேகரிப்பு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

நீர் நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு, போதிய குடிநீர் வழங்குவதில்லை என அரசைக் குறைகூறக் கூடாது. தனி மனித ஒழுக்கமும் அவசியம்.

மாசுபட்ட நீரை சுத்திகரிப்பதைவிட, நீரை மாசுபடாமல் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். திறந்த வெளியில் மலம் கழிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும். முறையாக கழிப்பிடங்களைப் பயன்படுத்தாததால்தான் நீர் மாசுபாடு அதிகரிக்கிறது. குப்பைகளையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். குழந்தை கழித்த மலம்தானே என அலட்சியமாக வெளியில் வீசி எறியக் கூடாது. கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தினால், பாதுகாப்பான குடிநீர் என்பது பாதியளவுக்கு சாத்தியமாகிவிடும் என்றார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை, ஈரோடு, நீலகிரி, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் 1122 குடிநீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன.

இவற்றில் 44 சதவீத குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட டிடிஎஸ் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைகளில் கிடைக்கும் குடிநீர் மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றில் டிடிஎஸ் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோதும், பாக்டீரியாக்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

மாதிரி பரிசோதனைகளில் ஈடுபட்டவர்களுக்கும், பயிற்சியில் பங்கேற்ற 782 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்திய நுகர்வோர் சங்க இயக்குநர்கள் ஜி.சந்தானராஜன், ஸ்வாதி (நிதி), இணை இயக்குநர் எம்.ஆர். கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Categories: NEWS

அப்பாவி மக்களை காப்பாற்ற – கலப்பட டீத்தூளை ஒழிக்க – சுகாதாரத்துறை ஆணையருக்கு எம்எல்ஏ கோரிக்கை-தினகரன் செய்தி

30,May, 2013 1 comment

கலப்பட டீத்தூளை முற்றிலும் ஒழித்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை ஆணையருக்கு நாகை எம் எல்ஏ மனு அனுப்பியுள்ளார்.

நாகை மாவட்டம் கீழ்வே ளூர் எம்எல்ஏ மாலி, தமிழக அரசின் சுகாதாரத்துறை ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள கிராம புறங்களில் உள்ள டீக்கடைகளில் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடிய கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது கவலை அளிக்க கூடியதாகும். கடந்த காலங்களில் உணவு கலப்பட தடுப்பு சட்டம் அமலில் இருந்தபோது மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் குறிப்பிட்ட சில வட்டாரங்களில் மட்டுமே பொது சுகாதாரத்துறை மூலம் உணவு ஆய்வாளர்கள் தங்கள் பிரதான பணியான சுகாதார துப்புரவு பணியோடு உணவு ஆய்வுப்பணியையும் சேர்த்து உணவு கலப்பட தடுப்பு பணி யை செய்து வந்தனர். ஆனால் 5.8.2011 முதல் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006 இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் சுகாதாரத்துறை கட்டுப் பாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாக துறை மூலம் உணவு பாதுகாப்பு பணி செய்யப்பட்டு வருகிறது. கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் விஷத்திற்கு சமமான கலப்பட டீத்தூள் தயாரிப்பு தங்குதடையின்றி செயல் பட்டு வருவது எப்படி?

தயாரிக்கப்பட்ட இடத்திலேயே கலப்பட டீத்து�ளை கைப்பற்றி அழிப்பதிலோ அல்லது அந்த தொழிற்சாலைகளை செயல்படாமல் தடுப்பதிலோ என்ன சிரமம் இருக்க முடியும். மரத்தூள், உபயோகித்த டீத்து�ள், பல்வேறு மக்கிய இலைகள், தழைகள், குதிரை கழிவு உட்பட உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய பசியை மறக்க செய்ய கூடிய சிறு நீரக கோளாறுகளை ஏற்படுத்த கூடிய, உயர்ந்த பட்ச மாக புற்றுநோயை ஏற்படுத்த கூடிய ஏதேதோ சாயங்கள் கலந்துதான் கலப்பட டீத்து�ள் தயாரிக்கப்படுகிறது. இந்த விவரம் தெரி யாமலே அப்பாவி மக்கள் டீக்கடைகளில் டீ குடித்து கொண்டு இருக்கின்றனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிகமாக உள்ளனர் என்பது நல்ல அம்சம். தமிழகத்தில் மட்டும் 516க்கு மேற்பட்ட உணவு பாது காப்பு அதிகாரிகள் உள்ளனர். சென்னை மாநகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். ஒன்றியத்திற்கு ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரியும், நகராட்சி பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்பவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். ஆகவே தமிழக அரசின் சுகாதார துறை செயலாள ரும், உணவு பாதுகாப்பு ஆணையரும் விரைந்து செயல்பட்டால் தமிழகத்தில் கலப்பட டீத்து�ளை முற்றிலும் ஒழிக்க முடியும்.

இதன் மூலம் பல லட்சம் அப்பாவி மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Categories: NEWS

கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 10 டன் மாம்பழங்கள் பறிமுதல்-விகடன் நியூஸ்

30,May, 2013 Comments off

விழுப்புரம்: விழுப்புரத்தில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த 10 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் மாம்பழங்களை வாங்கி சாப்பிடவுடன் வயிற்று வலியும், வயிற்று போக்கும் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் பொதுமக்கள் பலர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து புகார்களை அனுப்பியுள்ளனர். அதையடுத்து, இன்று காலை விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள மாம்பழ கடைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

MANGO_2 002_0001

அப்போது, ஆறு கடைகளில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 10 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் மாம்பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்திய ஐந்து கிலே கார்பைட் கல்லையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆறு கடைகளும் பழங்களை மொத்தமாக விற்பனை செய்யும் கடைகள். இந்த கடைகளில் இருந்து தான் சுற்றியுள்ள அனைத்து சில்லரை விற்பனையாளர்களும் மாம்பழங்களை வாங்கி சென்று விற்பனை செய்வது வழக்கம்.

MANGO_2 003_0001

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆறுமுகம் நம்மிடம், தற்போது விழுப்புரத்தில் 6 மொத்த விற்பனை கடைகளில் சோதனை நடத்தி கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்துள்ளோம். அதேபோல் சில்லறையில் பழங்களை விற்பனை செய்யும் பழக் கடைகளிலும் சோதனை செய்ய இருக்கிறோம் என்றார்.

மேலும், ‘‘கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கருப்பாகவும், தோல் சுருங்கியும், தண்ணீர் வடிந்தும் இருக்கும். இப்படிப்பட்ட மாம்பழங்களை பார்த்தவுடன் பொது மக்கள் உஷாராக வேண்டும். மாம்பழங்களை சாப்பிட்டவுடன் வயிறு வலி ஏற்பட்டால் சூடு என்பார்கள். வயிறு வலிக்கு சூடு காரணமில்லை, கார்பைட் கல் தான் காரணம். மாம்பழங்களை ஒரு மணி நேரம் தண்ணீரின் ஊற வைத்துவிட்டு பிறகு சாப்பிட்டால், கார்பைர் கல்லின் பாதிப்பு குறைவாக இருக்கும்’’ என்றார்.

Categories: DISTRICT-NEWS, Villupuram