Archive

Archive for 2,June, 2013

பான்பராக், பான்மசாலா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை-தினகரன் செய்தி

2,June, 2013 Comments off

ஊட்டி, :பான்பராக், பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை எச்சரித்துள்ளது.
  உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலர் ரவி கூறியதாவது:
பான்பராக், பான்மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பான்பராக், பான்மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் தயாரிப்பு, சேகரித்தல், வினியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவை அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதனை கண்காணிக்க மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்படவுள்ளது. இக்குழுவைக் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப் படும். ஆய்வில் பான்பராக், பான்மசாலா மற்றும் குட்கா போன்றவைகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்து அழிக்கப்படும்.
அரசு உத்தரவை மீறி விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பான்பராக், பான்மசாலா,  குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மற்றும் நுகர்வோர் இடையே புகையிலை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மாவட்டத்தில் உள்ள கடைகளில் பான்பராக், பான்மசாலா, குட்காவை யாரேனும் விற்பனை செய்தால் பொதுமக்கள் மாவட்ட நியமன அலுவலர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, அரசு கலைக்கல்லூரி அருகில், ஸ்டோன் அவுஸ் ஹில் அஞ்சல் என்ற முகவரியிலும், 0423 2450088 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம் என்றார்