Archive

Archive for 10,June, 2013

This is why you got food poisoned: 8 million people in Hyderabad and only 4 food safety officers!

10,June, 2013 2 comments
8-mn-people,-4-food-safety-officers!
If we are poisoned by one of these eateries, then don’t complain, as the City Corporation seems least concerned for food safety and its standards.

This, you many not digest. Four food safety officers of GHMC must conduct the impossible task of ensuring food safety standards of a City of eight million.

The state government does not seem to be too conerned about implementing the Food Safety and Standards Act 2006, says consumer forum office-bearers. Apart from inspecting the samples of raw food items like oil and pulses, these officers also have to obey the orders of the Health Wing under GHMC in dealing with restaurants.

Meanwhile, the monthly samples, which must be checked by the Food Safety Officers, has recently gone up from an average of 8 to 22.

According to one of the Food Safety Officers, there should have been at least 18 such officers in the GHMC covering all the circles. “We used to check eight samples each month, but recently the target was set to 22,” says one of the Officers, under the condition of anonymity.

Besides inspecting samples, these officials are engaged by the GHMC for inspecting food items of hotels and roadside eateries under the guidance of two AMOH, (Assistant Medical Officers of Health) who will either act at their will or on complaints from the Health Wing of Corporation.

Interestingly, the post of the Chief Medical Officer of Health is also vacant for about five months, since Dr D Shalini Devi was transferred.

Even though the GHMC is set to start the process of filling up 2,500 jobs, the process may take at least one or two years. “This particular segment of food safety will be filled with 26 jobs during this process, but in the second phase. Even though the government has given a nod for this, it would not surprise many if the coming government forgets its promise”, laments the official.

According to K R K Murthy, convenor, Consumer Forum of India, if the situation persists in the City, health issues such as Diarrhoea and other food-related health problems will arise. “Higher level officials like Commissioner of Food Safety should make surprise visits to restaurants. Many top restaurants are failing to meet the expected standards. One of the reasons is the fact that these same Food safety officials who are crying foul get their cut from them”, says Murthy. He believes that once the Parliament passes the Bill on Food Safety in this Monsoon Session, all the States will oblige.

Categories: NEWS

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்ற 75 பேர் மீது வழக்கு வாலிபர் கைது

10,June, 2013 Comments off

தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலாவை விற்பனை செய்ததாக ஈரோடு மாவட்டத்தில் 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பான்மசாலா, குட்காவுக்கு தடை

குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து கடைகளில் குட்கா, பான்மசாலாவை விற்பனை செய்யக்கூடாது என்று கடையின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடைகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்படும் கடை உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் கைது

ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செல்லமுத்து மற்றும் போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு கொங்காளம்மன்கோவில் வீதியில் உள்ள ஒரு கடையில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் கடையின் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பகவான்ஜி என்பவரின் மகன் நரியங்காராம் (வயது 26) என்பவரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த சுமார் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

75 பேர் மீது வழக்குப்பதிவு

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் போலீசார் நடத்திய சோதனையில் ஈரோட்டில் 7 பேர், பவானியில் 10 பேர், கோபிசெட்டிபாளையத்தில் 26 பேர், சத்தியமங்கலத்தில் 18 பேர், பெருந்துறையில் 14 பேர் என 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Categories: DISTRICT-NEWS, Erode

Eateries have their way as authorities doze

10,June, 2013 1 comment

 

  • Despite concerns raised about hygiene, the authorities are yet to conduct inspections and raids.

    Despite concerns raised about hygiene, the authorities are yet to conduct inspections and raids.

A few months back, the raids on various eateries in the district by the Food and Safety Department had unearthed some ‘stale’ facts about the  food being served to the people. However, the initial enthusiasm on the part of the Health Department seems to have died down.

Despite the Monsoon triggering ‘hygiene concerns’, the authorities are yet to initiate any step in this regard and according to the sources, no inspection has been conducted in any eatery in the city recently. “As per the Food Safety Standards Act, the eateries must follow some norms. Mainly, the workers in the eateries should have health cards and the entire space, especially kitchen, must be kept clean. The kitchen must be painted  white. Moreover, the eateries should keep certificates that prove the quality of water used. However, many are still functioning under unhygienic condition and the Food and Safety Department are turning a blind eye towards the issue,” sources said.

According to the details collected from the department using a Right to Information Act (RTI), they have not yet taken any action against the hotel  owners who were found to have provided stale and unclean food for customers last year. “The department had conducted raids on as many as 256 eateries in the district. They have also collected the samples of the stale food for tests. However, no concrete action has been taken against the eateries till now. The sample testing are not yet been completed,” the RTI reveals. Meanwhile, the Hotels and Restaurants Association members said the eateries were maintaining hygiene. “We are sticking to all the norms as per the Food Safety Standards Act,” they said.

District Food Safety Officer Ajit Kumar refuted the allegations and said they were conducting inspections at hotels and restaurants.

“Last week, we have conducted inspections at the eateries in the eastern side of the district. We have also suspended the licences of few hotels found flouting norms,” he said.

Categories: NEWS

சேலத்தில் பான்மசாலா, குட்கா பறிமுதல்

10,June, 2013 Comments off

சேலத்தில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பான்மசாலா, புகையிலை, குட்கா ஆகியவற்றை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலை போன்ற பொருள்களை விற்பனைச் செய்வதற்கு தமிழக அரசு மே 23-ஆம் தேதி தடைவிதித்தது. இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைச் செய்வதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

மேலும், புகையிலைப் பொருள்களை இருப்பு வைத்துள்ள மொத்த வியாபாரிகள் ஜூன் 24-ஆம் தேதிக்குள், அவற்றை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சேலம் தாதம்பட்டி அருகே உள்ள குடோன், பெட்டிக் கடை, மளிகைக் கடை உள்ளிட்டவற்றில் சனிக்கிழமை ஆய்வு நடத்தினர். அப்போது, அங்குள்ள குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட குட்கா, பான்மசாலா பொட்டலங்களை அகற்றுமாறு வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், அதே பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட பெட்டிக் கடை, மளிகைக் கடைகளில் ஆய்வு நடத்திய அலுவலர்கள் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

Categories: DISTRICT-NEWS, Salem

திருவாரூர் மாவட்டத்தில் பான்மசாலா விற்பனைக்கு தடை கலெக்டர் நடராசன் தகவல்

10,June, 2013 Comments off

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் பான்மசாலா விற் பனைக்கு தடை செய்யப் பட்டுள்ளது. என்று கலெக்டர் நடராசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள ஒரு அறிக் கையில் கூறியிருப்பதாவது:–

பான்மசாலாவிற்குதடை

புகையிலை, பான்மசாலா, குட்கா தயாரித்தல், சேமித்தல், விற்பனை செய்தல் போன்ற வற்றிக்கு தடை செய்யப் பட்டுள்ளது. வியாபாரிகள் தங்கள் கையிருப்பில் உள்ள பான்மசாலா மற்றும் குட்காவை ஒரு மாத காலத் திற்குள் அகற்றப்பட வேண்டும். பான்மசாலாக்களுக்கான தடை உடனடியாக அமலுக்கு வருவதால் பான்மசாலா மற்றும் குட்கா தயாரிப் பாளர் கள், விற்பனை செய்பவர்கள் இந்த வியா பாரத்தை தொடர்ந்து செய்தால் அவர் களிடம் இருந்து பான்மசாலா மற்றும் குட்கா பறிமுதல் செய்து  அழிக்கப்படும்.

குழுஅமைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் புகையிலை, பான்மசாலா, குட்கா விற்பனை செய்வதை தடை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக மாவட்ட  கலெக்டர் இருப்பார் உறுப்பினர்களாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர், துணை இயக்குனர் சுகாதார பணிகள், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், நகராட்சி ஆணை யர்கள், மாவட்ட வணிகவரி அலுவலர், போக்குவரத்து அலுவலர் மற்றும் அவை கூட்டுனராக நியமன அலுவலர் ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர். இந்த குழு பான்மசாலா பொருட்களை தயாரித்தல், சேமித்தல், விற்பனை செய் வதை மாவட்ட முழுவதும் உரிய ஆய்வு மேற்கொள் கிறது.

வெளிமாநிலங்களில் இருந்து புகையிலை, பான் மசாலா மற்றும் குட்காவினை வாகனங்களில் கொண்டு வருவதை அனைத்து சோதனை சாவடிகளிலும் சோதனை செய்ய சோதனை சாவடிகளில் உள்ள வணிக வரி அலுவலர்கள் மற்றும் காவலர்களைக் கொண்டு சோதனை செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Categories: DISTRICT-NEWS, Thiruvarur