Archive

Archive for 14,June, 2013

Monitoring committee set up to enforce ban on gutka – The Hindu

14,June, 2013 Comments off

Gearing up to implement the State government’s ban on gutka, pan masala, and tobacco, the district administration has constituted a separate monitoring committee here.

Headed by Collector T. Munusamy, the committee would include the Superintendent of Police, District Revenue Officer, District Social Welfare Officer, Chief Education Officer, Deputy Director (Health), Excise Officer, and the Regional Transport Officer.

The committee is empowered to conduct surprise raids and checks and curb movement of gutka from other districts at district checkpoints.

Convening a consultative meeting here at the collectorate recently, Collector T. Munusamy said that vigilance had to be in place to monitor sales, hoarding or illegal movement of consumables containing ghutka, pan, and tobacco, in any form.

The committee shall have such consumables seized and destroyed and bring to book the violators under the Food Safety and Standards Act, 2006.

Addressing the consultations, Mr. Munusamy said the World Health Organisation’s statistics placed the number of tobacco-related deaths at 2.5 million to 3 million annually.

In India, 53.5 percent of the population used gutka and tobacco. This included 66.2 per cent men and 40 per cent women. Over 10 lakh people die of tobacco-induced cancer in the country, Mr. Munusamy said.

In a bid to create awareness among the youth, special focus would be on schools and colleges by way of awareness rallies on the ills of tobacco. The ban has been in implementation in the State since May 23, this year.

Asiya Mariam, District Revenue Officer; and V. Manikandan, Revenue Divisional Officer; were present.

New Additives: FSSAI proposes amendment to FSS Act; licensing clarified

14,June, 2013 Comments off

The Food Safety and Standards Authority of India (FSSAI) has notified Draft Regulations to amend the FSS (Food Products Standards and Food Additives) Regulations, 2011.

In the said Draft Regulations, certain food additives have been proposed to be used in certain food products / ingredients in the quantity specified for those food products / ingredients.

The food additives proposed in the Draft Regulations to be used in certain food products are as under:

Polydextrose @ GMP in “Carbonated and Non-Carbonated Beverages”

Methyl Cellulose
max. 3% in “Salad Dressing / Mayonnaise”;
max. 2% in “Biscuits”;
max. 2% in “Preserved Chapatis”;
max. 3% in “Cakes”

Carboxymethyl Cellulose
@ GMP in “Dressing and Sauces”;
@ GMP in “Chocolates”;
@ GMP in “Sauces”

Potassium Iodate – max. 50 mg / kg in “Bread”
Gellan gum @ GMP in “Sterilised and UHT dairy-based drinks.”

These additives were not in use for the said products earlier. But now the food authority has included these additives and invited objections or suggestions from the food and beverage industry on the use of these additives.

D V Malhan, executive secretary, All India Food Processors’ Association (AIFPA), told FnB News that the industry was looking into the draft amendment as it was recently made public. He added that these additives were there in the market but not allowed to be used for the said products.

“The authority must have done some study and documentation on the issue of these additives and we’d asked our members to comment on the issue. After getting comments we’ll discuss it and present suggestions before FSSAI,” he stated.

Meanwhile, FSSAI has also issued a clarification note as per suggestions received from various stakeholders and discussion during the meeting held on June 04, 2013, at FSSAI for issuing of state / central registration and licensing.

A revised table has been prepared clarifying the items covered under Central / state licensing & registration, and the earlier criteria of storage capacity have been replaced by ‘Annual Turnover.’

Dr D S Yadav, deputy director enforcement, stated that there were suggestions from the stakeholders that the earlier criteria were a bit confusing because it set different benchmarks on storage capacity and annual turnover.

“So therefore, the food authority has decided to replace the storage capacity by annual turnover for the food business operators and rest of the criteria remains unchanged,” said Dr Yadav.

Categories: NEWS

நாகைமாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் முனுசாமி எச்சரிக்கை

14,June, 2013 Comments off

நாகை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முனுசாமி தெரிவித்தார்.

நச்சுப்பொருட்கள்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குட்கா, பான்மசாலா விற்பனை தடைசெய்யப்பட்டதை அமல்படுத்துவது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முனுசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புகையிலையில் கார்பன்–டை ஆக்சைடு, நைட்ரஜன்–டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்பட 700–க்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்கள் உள்ளன. குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை உபயோகிப்பதால் உலகளவில் ஆண்டுக்கு 2.5 முதல் 3 மில்லியன் இறப்புகள் நிகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 53.5 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் புற்றுநோய்க்கு பலியாகின்றனர். குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை சுவைத்தல், நுகர்தல் மற்றும் புகைத்தல் ஆகிய 3 வழிகளில் மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது. ஆதனால் ரத்த தமனிகளில் அடைப்பு, நரம்பு தளர்ச்சி, மாரடைப்பு, பக்கவாதம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு என நம் உடலில் அனைத்து உறுப்புகளையும் சேதப்படுத்துகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இவற்றை பயன்படுத்தக் கூடாது. அது கருவில் வளரும் குழந்தையை பாதிக்கச் செய்யும்.

தடை உத்தரவு

மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய குட்கா, பான்மசாலா உள்ளிட்ட நிக்கோடின் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு முதல்–அமைச்சர் தடைவிதித்துள்ளார். இந்த தடை உத்தரவு கடந்த 23–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் தடை ஆணையினை அமுல்படுத்துவதற்கு மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர், மாவட்ட வணிகவரித்துறை அலுவலர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தடைச் செய்யப்பட்ட இப்பொருட்கள் வருவதை சோதனை சாவடிகளில் கண்காணிக்கப்படும்.

கடும் நடவடிக்கை

உயிர் கொல்லிகளான குட்கா, பான்மசாலா, புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த உணவுப் பொருட்களை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, எடுத்துச் செல்லவோ, விற்பனை செய்யவோக் கூடாது. மீறினால் அப்பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006–ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எங்கேனும் இந்த தடைச் செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை விற்பனை செய்யப்பட்டால் உணவு பாதுகாப்பு நியமன அலுவலரை 04365–247060, 9442628185 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆசியாமரியம், உதவி கலெக்டர் மணிகண்டன், மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் செந்தில்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புகையிலை கலந்த பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் வணிகர்களுக்கு கலெக்டர் சம்பத் உத்தரவு

14,June, 2013 Comments off

புகையிலை கலந்த பொருட்களை தமிழக எல்லையில் இருந்து அப் புறப்படுத்த வேண்டும் என்று வணிகர்களுக்கு கலெக் டர் சம்பத் உத்தரவிட் டுள்ளார்

விழிப்புணர்வுகூட்டம்

புகையிலை சார்ந்த உணவுப்பொருட்கள் விற் பனையை தடை செய்யும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வணிகர் சங்க நிர்வாகிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார்.

புகையிலை கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்தும் படியும், இப்பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுப்பதற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் சேமித்து வைத்துள்ள புகையிலை கலந்த பொருட்களை தமிழக எல்லையில் இருந்து அப்புறப்படுத்துமாறும் வணி கர்களை கலெக்டர் சம்பத் கேட்டுக் கொண்டார். அதற்கு புகையிலை கலந்த உணவுப்பொருட்களுக்கு தடை குறித்து முழு ஒத்துழைப்பு அளிப்பதாக வணிகர் சங்க நிர்வாகிகள், கலெக்டரிடம் உறுதியளித்தனர். முன்னதாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆறுமுகம், அனைவரையும் வரவேற்று புகையிலை கலந்த உணவுப்பொருட்கள் தடை செய்வது குறித்து விளக்கி கூறினார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முத்துமீனாள், மாவட்ட வணிக சங்க பேரவை தலைவர் ராமலிங்கம், ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சுப்புராமன், கள்ளக்குறிச்சி பகுதி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வக்குமார் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், உணவு பாதுகாப்பு அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram

பான் மசாலா விற்க 22ம் தேதி வரை கெடு-தினகரன் செய்தி

14,June, 2013 Comments off

கும்பகோணத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை 22ம் தேதிக் குள் விற்றுவிட வேண்டும் என்று ஆர்டிஓ தெரிவித்தார்.

கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், வணிகர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் வணிக வரித்துறையினர் கலந்துகொண்ட விழிப்புணர்வு மற் றும் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி, துணை வணிக வரி அலுவ லர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.

ஆர்டிஓ(பொ) சண்முகநாதன் பேசியதாவது:

�உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்படி எந்த உணவிலும் உடல் நலத்தை பாதிக்கும் பொருள் இருக்கக்கூடாது. இந்தியாவில் 24 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் பான்மசாலா, குட்கா, புகையிலைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியா வில் புகையிலை பொருட் களால் பொதுமக்களுக்கு 25 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மே 23ம் தேதி குட்கா, புகையிலை பொருட்களுக்கு தடை விதித்தது. இதற்காக ஒரு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதிக்குள் இந்த பொருட் களை வைத்திருக்கும் வியாபாரிகள் விற்பனை செய்து விட வேண்டும். அதற்கு பின்னர் குட்கா பொருட் களை எக்காரணம் கொண் டும் விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு வைத்திருப்பது தெரியவந்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும்.

மேலும் பீடா ஸ்டால், பான்மசலா, புகையிலை, குட்கா வியாபாரம் செய்பவர்கள் 22ம் தேதியோடு முடித்து கொள்ளவேண்டும். இந்த பொருட்களுக்கு ஒரு ஆண்டு காலம் தடை யாணை உள்ளது. இந்த காலத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்திருந்தால் போலீசார், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், வருவாய்த் துறை, வணிகவரி துறையினர் ஆகியோர் கொண்ட குழுவி னர் நடவடிக்கையை மேற்கொள்வர். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக வணிகர்கள் உறுதியளித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Thanjavur