Archive

Archive for 16,June, 2013

சென்னையில் 3 டன் தரமற்ற மாட்டு இறைச்சி பறிமுதல்-மாலைமலர் செய்தி

16,June, 2013 1 comment

1e5853be-ba7d-4806-bdab-81ba2e75d48d_S_secvpf.gif

சென்னைக்கு வெளியூர்களில் இருந்து தரமற்ற மாட்டு இறைச்சிகள் கொண்டுவரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இன்று அதிகாலையில் கண்காணித்தனர்.
அப்போது வேப்பேரி ரித்தர்டன்ரோடு, மற்றும் பெரியமேடு ஆகிய இடங்களில் ஏராளமான சாக்கு மூட்டைகளில் மாட்டிறைச்சி இறக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதித்தனர். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட மாட்டிறைச்சியை பாலிதீன் கவர்களில் அடைத்து சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்து இருந்தனர்.
கால்நடை மருத்துவ அதிகாரி பரிசோதித்து தரமற்ற இறைச்சி என்று கூறினார். அந்த இறைச்சிகளை சென்னை ஓட்டல்களுக்கு சப்ளை செய்ய இருந்த தரமற்ற இறைச்சி என்பதையும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் எடுத்து கூறினார்கள்.
3 டன் அளவுள்ள இந்த இறச்சிகள் வாணியம்பாடி பேரணாம்பட்டு, பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது. அவற்றை அதிகாரிகள் எடுத்து சென்று கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.

Categories: Chennai, DISTRICT-NEWS

Food items worth Rs 1.73 crore seized in 2012-13 – The Times Of India

16,June, 2013 1 comment

NASHIK:

The Food and Drug Administration (FDA) has confiscated adulterated and inferior quality food items worth Rs 1.73 crore in the Nashik division during the 2012-13 financial year.

The FDA conducted the inspection drive at shops selling food items. Accordingly, the Nashik divisional office had implemented a food inspection drive during the fiscal year 2012-13 and confiscated items worth Rs 1.73 crore, officials in the FDA said. The seizure included mangoes, vanaspati and dairy products. The Nashik divisional office of FDA comprises Nashik, Ahmednagar, Jalgaon, Dhule and Nandurbar districts.

The FDA confiscated adulterated food items worth Rs 90.44 lakh from Nashik, Rs 17.35 lakh from Jalgaon, Rs 61.42 lakh from Ahmednagar and Rs 4.38 lakh from Dhule and Nandurbar districts.

In the Nashik district, adulterated food items worth Rs 90.44 lakh, including 6,697 kg mangoes of Rs 2.87 lakh being ripened with the use of chemical carbide powder, 12,352 kg of vanaspati products worth Rs 20.29 lakh, around 204 kg milk and dairy products worth Rs 34,750 and other food products worth Rs 66.92 lakh were confiscated.

In Jalgaon, adulterated and sub-standard food items worth Rs 17.35 lakh were confiscated. The seizure included 14,475 kg vanaspati worth Rs 13.66 lakh, around 2,879 kg of milk and dairy products worth Rs 3.33 lakh and other food products worth Rs 35,622.

Categories: NEWS

TRIBUNE IMPACT District officials told to collect samples of supplements promising body growth -Tribune News Service

16,June, 2013 Comments off

Sangrur, June 15
After a news report “Food supplements promising rapid body growth fail test” appeared in these columns on Thursday, the Health Department has directed all district authorities of the state to seize a sizeable number of food supplements (protein powders) samples.

In a letter written on June 13 to all civil surgeons, designated officers (Food Safety) and food safety officers, Dr HS Bali, State Nodal Officer, Food Safety, Punjab, has asked them to submit the action taken report within three weeks.

All six samples of the powdered food supplements taken in Sangrur district in the past two months had failed to meet the Food Safety and Standards Act (FSSA) norms in a test conducted by the Food Analyst, Punjab. The powdered food supplements are very popular among the youth for rapid growth of their body.

“The department is well conversant to regulate the sale of ethical food supplements but keeping in view the present scenario, you are directed that samples of food supplements must be seized in appropriate numbers under the provisions of Food Safety and Standards Act 2006 and Rules 2011, and must be got analysed from the State Food Health Laboratory, Chandigarh,” Dr Bali has directed the district health authorities in his letter.

He has also told the officials that action against the defaulters be initiated under the Act, if any sample is found below the prescribed standards. District Health Officer (DHO)-cum-designated officer, Food Safety, Sangrur, Dr Surinder Singla today said they had already taken a lead in collecting the maximum number of samples of body growth food supplements. He said as all the six samples taken by them had failed to meet the FSSA norms, they would now further intensify their drive against such food supplements.

Categories: NEWS

பான்மசாலா, குட்கா பொருள்களை 22-க்குள் அப்புறப்படுத்த உத்தரவு

16,June, 2013 Comments off

தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ள பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்களை வரும் 22-ஆம் தேதிக்குள் அப்புறப்படுத்த வேண்டுமென செஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வணிகர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் வி.ஆறுமுகம் எச்சரித்துள்ளார்.

பான்மசாலா, பான்குட்கா போன்ற புகையிலை மற்றும் நிகோடின் கலந்த உணவுப்பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு விநியோகம் மற்றும் விற்பனை குறித்த வணிகர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம், செஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் டாக்டர் வி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பான்மசாலா மற்றும் குட்கா போன்ற பொருட்களால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்பொருள்களின் விற்பனை அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, 22.6.2013-ம் தேதிக்குள் அப்பொருள்களின் இருப்பை அப்புறப்படுத்த வேண்டும். இத் தடையை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நியமன அலுவலர் எச்சரித்தார்.

கூட்டத்தில், செஞ்சி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் எஸ்.கதிரவன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவிகுமார், பாரதிபன்னீர்செல்வம், முருகன் மற்றும் வணிகர் சங்க தலைவர் சையதுமொய்தீன்பாஷா, மாவட்டச் செயலர் கண்ணன், மாவட்டத் தலைவர் ஆர்.செல்வராஜ், செயலர் வெங்கட், இணை செயலர் அசோகன், ஆலோசகர் ஷமீத் உள்ளிட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram

புகையிலை பொருள் விற்பனையை தடை செய்ய குழு

16,June, 2013 Comments off

தேனி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடை செய்வதற்கு குழு அமைக்கப்பட்டு, கடைகளில் உள்ள புகையிலை பொருள்களை ஜூன் 22-க்குள் அப்புறப்படுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்களை விற்பனை செய்ய, கடந்த மே 23-ம் தேதி முதல் அரசு தடை விதித்துள்ளது. இதை  செயல்படுத்தும் வகையில், மாவட்டத்தில் புகையிலை பொருள் விற்பனையை தடை செய்வதற்கு, ஆட்சியரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட இந்தக் குழுவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர், பொது சுகாதாரத் துணை இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர், சமூகநல அலுவலர், வணிகவரி அலுவலர், மண்டல போக்குவரத்து அலுவலர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

கால அவகாசம்: தேனியில் ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமையில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி நடைபெற்ற புகையிலை பொருள் தடை அமலாக்கக் குழு கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள புகையிலை பொருள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு தங்களிடம் உள்ள புகையிலை பொருள்களை ஜூன் 22-ம் தேதிக்குள் கிட்டங்கி மற்றும் கடைகளில் இருந்து அப்புறப்படுத்த கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் புகையிலை பொருள் விற்பனையை தடை செய்ய, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு மூலம் சோதனை மேற்கொள்வது, பஸ் நிலையம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள பெட்டிக் கடைகளை தீவிரமாகக் கண்காணிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories: DISTRICT-NEWS, Theni

புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

16,June, 2013 Comments off

விழுப்புரத்தில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தமிழகத்தில், ஒரு மாத காலத்திற்குள் புகையிலை சார்ந்த உணவு பொருட்களை அப்புறப்படுத்த வணிகர்களுக்கு, கால அவகாசம் அளிக்கப்பட்டது.புகையிலை சார்ந்த உணவுப் பொருட்கள் விற்பனையை தடை செய்யும் பொருட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வணிகர் சங்க நிர்வாகிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் அவர் பேசுகையில், புகையிலை சார்ந்த உணவுப் பொருட்கள் விற்பனையை நிறுத்த வேண்டும். சேமித்து வைத்துள்ள புகையிலை கலந்த பொருட்களை தமிழக எல்லையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.புகையிலை கலந்த உணவுப் பொருட்கள் தடை உத்தரவு குறித்து, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட உணவு அலுவலர் டாக்டர் ஆறுமுகம் விளக்கப் பேசினார். மாவட்ட திட்ட இயக்குனர் முத்துமீனாள், மாவட்ட வணிகர் சங்க பேரவைத் தலைவர் ராமலிங்கம், ஓட்டல்கள் உரிமையாளர் சங்க தலைவர் சுப்புராமன், கள்ளக்குறிச்சி பகுதி வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வகுமார் மற்றும் சேம்பர் ஆப் காமர்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram