Archive

Archive for 21,June, 2013

டீத்தூளில் மரத்தூள் கலந்து விற்பனை

21,June, 2013 Comments off

21333_603471246354194_1190571412_n

Categories: DISTRICT-NEWS, Tiruppur

குன்னூர் டீக்கடைகளுக்கு சுகாதாரமற்ற தண்ணீர் விநியோகம்

21,June, 2013 Comments off

946496_603471236354195_1228023161_n1014091_603471273020858_665634156_n

வாட்டர் கம்பெனியில் அதிகாரிகள் ஆய்வு -தினகரன் செய்தி

21,June, 2013 Comments off

20130621e_01510300520130621e_015103006

Categories: Cuddalore, DISTRICT-NEWS

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில், சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணி

21,June, 2013 Comments off

Categories: DISTRICT-NEWS, Salem

புகையிலை பொருட்கள் வைத்து இருந்தால் சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

21,June, 2013 Comments off

குட்கா, பான்மசாலா வைத்து இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

குட்கா, பான்மசாலா, புகையிலை மற்றும் நிக்கோடின் ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கவோ, இருப்பு வைக்கவோ, விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என தமிழக அரசு கடந்த மே மாதம் தடை விதித்து அரசாணை பிறப்பித்து உள்ளது.

இந்த ஆணையின்படி திருச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் புகையிலை பொருட்கள், குட்கா, பான்மசாலா, புகையிலை மற்றும் நிக்கோடின் ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்ட உணவுப் பொருட்களை தயாரித்தல், இருப்பு வைத்தல், விற்பனைக்காக வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, உள்ளாட்சி துறை, (மாநகராட்சி மற்றும் நகராட்சி) வணிகவரித்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றின் மாவட்ட அளவிலான அலுவலர்கள் உறுப்பினர்களாகவும், மாவட்ட நியமன அலுவலர்கள் (உணவு பாதுகாப்பு) அவர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்க அலுவலராக செயல்படுவார்கள்.

இந்த குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

குட்கா, பான்மசாலா, புகையிலை மற்றும் நிக்கோடின் பயன்படுத்துபவர்களுக்கு குறிப்பாக பசியின்மை, மயக்கம், நரம்புத்தளர்ச்சி, மாரடைப்பு ஏற்படுவதோடு புற்றுநோய் அதிகஅளவில் வருவதற்கு வாய்ப்பாக இருக்கின்றது. எனவே. இப்பொருட்களை முற்றிலும் தடைசெய்ய தமிழக அரசு கடந்த மே மாதம் 23ம் தேதி அன்று தடைவிதித்து ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், இப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு ஒரு மாதகாலம் அவகாசம் கொடுத்துள்ளது. அந்த காலக்கெடு 22.06.2013 (நாளையுடன்) முடிவடைகிறது.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட இப்பொருட்களை விற்பனை செய்தல், தயாரித்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல் போன்ற செயல்களை கண்காணிப்புகுழு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு இப்பொருட்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை மூலம் அழிக்கப்படுவதோடு, சம்மந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, துணை கமிஷனர் அபிநவ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, மாவட்ட நியமன அலுவலர்(உணவு பாதுகாப்பு) ராமகிருஷ்ணன், உதவி ஆணையர்(கலால்) மீரா பரமேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தாகம் தீர்க்க ‘அம்மா மினரல் வாட்டர் ’-தினமலர் செய்தி

21,June, 2013 Comments off

Tamil_News_large_740091 சென்னை : தமிழகத்தில் முதல்வர் ஜெ., தலைமையிலான அரசு பல்வேறு மக்களை கவரும் திட்டங்களை அறிவித்து வருகிறது. இதன்படி மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் பொருட்டு குறைந்த விலையில் தரமான மினரல் வாட்டர் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது.

இது தொடர்பாக முதல்வர் ஜெ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களின் நலம் பெறும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. குறைந்த விலையில் அரிசி மற்றும் தானியம் வழங்குதல், அம்மா உணவகம், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என துவக்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் ஏற்பட்டுள்ள விலைவாசி கொடூரத்தில் இருந்து மக்களை காப்பாற்றவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டும் தற்போது அம்மா மினரல் உற்பத்தி நிலையங்கள் துவக்கப்படுகிறது.

ஏழை எளிய மக்களுக்காக இந்த திட்டம் துவக்கப்படுகிறது. அண்ணாத்துரை பிறந்த நாளான வரும் செப்- 15 ம்தேதி இந்த திட்டம் துவக்கப்படும். அன்றைய நாளில் விற்பனை துவங்கும். முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இந்த உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படும். ரயில்வே நிர்வாகம் சார்பில் குடிநீர் பாட்டல் ஒன்றுக்கு 15 ரூபாய்க்கும், தனியார் தரப்பில் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பாட்டல் ரூ. 10 க்கு விற்பனை :

தமிழக அரசு மூலம் லிட்டர் ஒன்றுக்கு பாட்டல் ரூ. 10 க்கு விற்பனை செய்யப்படும். அரசு பஸ் போக்குவரத்து கழகம் மூலம் விற்கப்படும். அரசு பஸ்கள் மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்ட்டுகளில் விற்பனை செய்யப்படும். சென்னை நகர்ப்புற பஸ் ஸ்டாண்டில் இந்த குடி நீர் கிடைக்கும். தொடர்ந்து மேலும் 9 இடங்களில் இந்த உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும். நடுத்தர மக்களின் நிதிச்சுமையை இது குறைக்கும் என ஜெ., நம்புவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜெ., துவக்கிய அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் இட்லி -1 ரூ, சாம்பார் சாதம்- 5 ரூ, தயிர்சாதம்- ரூ. 3 க்கு விற்கப்படுவதால் சாதாரண ஏழை மக்கள் பலர் இந்த உணவகங்களில் மொய்க்கத் துவங்கியுள்ளனர். நீண்ட வரிசையில காத்துக்கிடந்து வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. இதுபோல தண்ணீர் விற்பனையும் அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories: NEWS

போதை வஸ்து எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

21,June, 2013 Comments off

20130621i_013104012 சேலம்: சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில், போதை வஸ்து எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தமிழக அரசு, மே, 23ம் தேதி முதல், மாநிலம் முழுவதும் போதை வஸ்து உற்பத்தி, விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஒரு மாதம் அவகாசத்தில் வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் பான்பராக், பான்மசாலா, புகையிலை, ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வது, இருப்பு வைப்பது போன்றவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான அலுவலர்கள் கடந்த, ஒரு மாதமாக, கடைகளில் அதிரடி ரெய்டு செய்தனர். இதில், ஒரு லட்சம் மதிப்புள்ள போதை வஸ்துக்களை பறிமுதல் செய்து, அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பான்பராக் உள்ளிட்ட போதை வஸ்துகளை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள், டீலர்கள், கடை வியாபாரிகள் இருப்பு வைத்து கொள்ள கூடாது என, 934 பேருக்கு நோட்டீஸ் வினியோகம் செய்துள்ளனர்.
வரும், 26ம் தேதிக்குள் போதை வஸ்துகளை விற்பனை, இருப்பு வைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையிலும், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் விழப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் மகரபூஷணம் விழிப்புணர்வு பேரணியை, கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, திருவள்ளுவர் சிலை வழியாக, மாநகராட்சி மைய அலுவலகம் வந்து, பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் முடிந்தது. என்.எஸ்.எஸ்.,மாணவர்கள், பள்ளி மாணவ, மாணவியர், செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவியர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
போதை வஸ்துகளால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்கும் நோட்டீஸ்களை, பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர். விழிப்புணர்வு பேரணியில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, சி.இ.ஓ.,ஈஸ்வரன், மாநகராட்சி கமிஷனர் அசோகன் முன்னிலை வகித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Salem

தடை செய்யப்பட்ட பொருள்களின் விற்பனையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

21,June, 2013 1 comment

அரியலூரில் பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை உள்ளிட்ட பொருள்களுக்கு எதிராக தமிழக அரசு பிறப்பிக்கப்பட்ட தடையாணையை செயல்படுத்துவது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நகராட்சி பகுதி வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வணிகர் சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செல்வராஜ் பேசியது:
தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த உணவு பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. கையில் இருப்பு உள்ள பொருள்களை ஜூன். 22ம் தேதிக்குள் அப்புறப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. தடையாணை தொடர்பான விளக்கங்களையும், தடை செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட பல்வேறு துறையை சேர்ந்த குழுவினர் புகையிலை மற்றும் பான் மசாலா ஆகியவற்றால் ஏற்படும் பிரச்னைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன். 23ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருள்களை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. உத்தரவை மீறி விற்பனை செய்வது ஆய்வின்போது கண்டறியப்பட்டால், சட்டத்திற்குள்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில் பங்கேற்ற வணிகர்களுக்கு தடையாணை குறித்த துண்டுப் பிரசுரங்கள் அளிக்கப்பட்டு, மற்ற வணிகர்களுக்கு தடையாணை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், ரத்தினம், நைனார் முகமது, வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வணிகர் சங்க நிர்வாகி பாண்டுரங்கன் நன்றி கூறினார்.

Categories: Ariyalur, DISTRICT-NEWS

உளுந்தூர்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட 1 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

21,June, 2013 Comments off

ளுந்தூர்பேட்டை, :

உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் கடைகளில் அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஆறுமுகம் தலைமையில் உணவு பாதுகாப்பு துணை அலுவலர்கள் முருகன், கதிரவன், மற்றொரு முருகன், சமரேசன், ரவிக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பேருந்துநிலையம் பகுதிகளில் உள்ள கடைகள், கடைவீதி, பாண்டூர் ரோடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது கடைகளில் மறைத்து வைத்து விற்பனை செய்த ரூ.1 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் காலாவதி யான உணவு பொருட் களையும் பறிமுதல் செய்து அழித்தனர். ஒரே நேரத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி ரெய்டால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Villupuram