Archive

Archive for 23,June, 2013

Samosas destroyed by the thousands in Goa – Daily News

23,June, 2013 Comments off

While most of the seized samosas will be destroyed according to FDA protocol, samples will be sent for scientific examination to establish contamination.

For representational purpose only.

For representational purpose only. – DNA

Here’s a shocker for samosalovers: Thousands of samosaswere seized and are set to be destroyed as Goa’s Food and Drugs Authority (FDA) found them being made in unhygienic conditions.

The FDA conducted raids in Ponda, 30 km from the state capital, Friday.

FDA officials said that the raids at four manufacturing units yielded nearly 4,000 samosasand several hundred more were seized from sweetmeat shops and eateries, where they had been purchased for retail sale to customers.

“We received complaints thatsamosas were being manufactured in unhygienic conditions and were being supplied throughout Ponda. We raided four such places and seized thousands ofsamosas,” Food Safety Officer Rajiv Korde said.

While most of the seized samosas, a potato-stuffed fried snack, will be destroyed according to FDA protocol, samples will be sent for scientific examination to establish contamination.

The raids were conducted at Durga Bhatt, Sapna Park, Vithoba Temple and Jai Singh Nagar, all in the Ponda area.

“They manufacture samosas round-the-clock and supply it every hour or two to small restaurants and sweetmeat and savoury stores. In almost all the places we raided, there was rain water leaking from the roof and the conditions were very, very unhygienic,” Korde said.

Korde said the four manufacturing units had been issued show-cause notices some months ago, after similar complaints were received, and the units had written back saying they had stopped manufacturing samosas.

“They manufactured three to four thousand samosas everyday,” the official said.

Categories: NEWS

Safe street food project: Vada pav by the wayside to get hygienic

23,June, 2013 Comments off

Mumbai among 15 cities chosen by Centre to kick off national project.

Youngsters enjoy pani puri at a stall at Girgaon Chowpatty.

Youngsters enjoy pani puri at a stall at Girgaon Chowpatty.

Vendors wearing gloves while serving up plates of pani puri or donning a chef’s hat while stirring spicy bhel may soon be a regular sighting to Mumbai’s street food culture.

Street food is set to become certifiably safer with the central government kicking off their Safe Street Food project across fifteen cities in India including Mumbai, Delhi, Hyderabad, Bangalore, Ahmadabad, Kolkata, Patna, Lucknow, Varanasi, Dehradun, Bhubaneshwar, Agartala, Jammu, Trivandrum and Chennai. The project will take off in November this year.

Food Safety and Standard Authority of India’s (FSSAI) that launched the Safe Street Food project plans to use officials from the state Food and Drugs Administration (FDA) to narrow down food stalls at Juhu and Girgaon Chowpatty as a part of the pilot project.

Prior to the implementation, a detailed project report has been sought by FSSAI from all states. FDA officials are currently seeking information on 80 food stalls in Juhu and 28 stall in Girgaon about their working practices.

“We are closely studying the cooks to see if they maintain hygiene while cooking. We are also observing how they store food and dispose garbage,” said Kamlesh Sankhe, joint commissioner (food), FDA.

Apart from training the street vendors on handling preparation, storage and presentation of food, the central government has instructed the state and BMC to develop an infrastructure at street food hotspots to make them more tourist-friendly.

“We have repeatedly requested the civic and state authorities to provide sheds as protection from the rain and winds. Toilet facilities, waste disposal and drainage facilities should be provided as well,” said Atul Gupta, treasurer, Girgaon Bhelpuri Khadya Peey Vikreta Industrial Products Co-operative Society Limited.

Categories: NEWS

குட்கா, பான்மசாலாவுக்கு தடை கடைகளில் நாளை முதல் ரெய்டு

23,June, 2013 Comments off

 

கோவை, ஜூன் 23:

பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நேற்று முடிவடைந்தது. தடையை மீறி விற்பனை செய்யும் கடைகளில் நாளை முதல் அதிரடி சோதனையில் இறங்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதும் போதை தரக்கூடிய மற்றும் புற்று நோயை பரப்பக்கூடிய புகை யிலை பொருட்களை விற்பனை செய்ய பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்ட விதிமுறைகளின்படி புகையிலை, நிகோடின் கலந்த பொ ருட்களை உணவு பொரு ளாக விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புகையிலை, நிக்கோடின் கலந்த பொருட்களான பான்மாசாலா, குட்கா, பான்பராக் உள் ளிட்ட பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக் கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து கடந்த 23ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அப்போது, இரு ப்பு இருக்ககூடிய புகையிலை பொருட்களை அழிக்க கால அவகாசம் வழங்குமாறு வியாபாரிகள் தரப்பில் அரசிடம் கோரப்பட்டது. இதன்பேரில் ஒரு மாத கால அவகாசத்தை தமிழக அரசு வழங்கியது. இந்த கால அவகாசம் நேற்றுடன் (22ம்தேதி) முடிவடைந்தது.

இதற்கிடைய கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழு வதும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர், பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி, வியாபாரிகளுக்கு துண்டு பிரசுர விநியோகம், வியாபாரிகள் மற்றும் தயாரிப்பாளர்களுடான விழிப்புணர்வு கூட்டம் போ ன்றவை நடத்தப்பட்டது.

விற்பனையை முழுமையாக தடுக்க 25ம் தேதி முக்கிய முடிவு

குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்பனையை தடுப்பதில் உணவு பாதுகாப்பு பிரிவினர் தீவிரம் காட்ட முடிவு செய்துள்ளனர். வரும் 25ம் தேதி இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் தடை அமலாக்கத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. குட்கா, பான்மசாலா பொருள் விற்பனையை முழுஅளவில் தடுப்பதற்கு மேலும் சில முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடைய கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழு வதும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர், பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி, வியாபாரிகளுக்கு துண்டு பிரசுர விநியோகம், வியாபாரிகள் மற்றும் தயாரிப்பாளர்களுடான விழிப்புணர்வு கூட்டம் போ ன்றவை நடத்தப்பட்டது.

கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான புகையிலை விற்பனை கடைகளுக்கு 22ம் தேதிக்கு பின் குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என நோட் டீஸ் வழங்கப்பட்டது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மட்டும் 2500க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

Categories: Coimbatore, DISTRICT-NEWS

தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்காவை கடைகளில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை-தினத்தந்தி செய்தி

23,June, 2013 Comments off

புதுக்கோட்டை,

தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று கலெக்டர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

பான்மசாலா– குட்காவுக்கு தடை

தமிழக முதல்– அமைச்சர் தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை நிக்கோட்டின் அடங்கிய உணவு பொருட்கள் விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அமல்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் தடை அமலாக்க ஒருங்கினைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் கூட்டம் கலெக்டர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாளை (திங்கட்கிழமை) முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா மற்றும் குட்கா நிக்கோட்டின் அடங்கிய உணவு பொருட்களை கடை களில் விற்பனை செய்தாலோ அல்லது கடைகளில் இருப்பு வைத்திருந்தாலோ, அவை களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைப்பற்றி அழிப்பார்கள்.

கடும் நடவடிக்கை

மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத் தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப் பினர்கள் மாவட்டம் முழு வதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவ ட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) அன்பழகன், வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Pudukkottai

ஆவின் என்ன “இங்கிலீஷ்காரன்’ கம்பெனியா? விவரம் தெரியாமல் மக்கள் புலம்பல்

23,June, 2013 Comments off

ஆவின் நிறுவனம், விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள், பாக்கெட் மீது, அனைத்து விவரங்களும், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதால், ஆங்கிலம் தெரியாதவர்கள், உள்ளே இருப்பது என்ன என்ன பொருள் என்ற விவரம் தெரியாமல், தவிக்கின்றனர்.

தமிழக அரசு, “ஆவின்’ வணிக சின்னத்தின் கீழ், பால், வெண்ணெய், நெய், பால் பவுடர், பாதாம் பவுடர், மைசூர்பா, பால்கோவா, பன்னீர், தயிர், மோர், ஐஸ்கிரீம், “மில்க்’ சாக்லெட், “மில்கி’ மற்றும், “நட்டி’ சாக்லெட், நறுமண பால் உள்ளிட்ட பால் உப பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அரசு அலுவலகங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம், “ஆவின்’ பால் பொருட்கள் விற்கப்படுகின்றன. தமிழகத்தில், அனைத்து உணவுப் பொருட்கள் விற்பனையில், தனியார் கோலோச்சி இருந்தாலும், பால் மற்றும் பால் பொருட்களில்,”ஆவின்’ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கே, பொது மக்களிடம் அமோக வரவேற்பு காணப்படுகிறது. கடந்த ஆண்டு, 10,333 டன் பால் பவுடர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெண்ணெய், 7,100 டன், நெய், 2,250 டன், கோவா, 2.40 லட்சம் கிலோ, ஐஸ்கிரீம், 6,500 லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில் இதன் உற்பத்தி இன்னும் அதிகரிக்கும்என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஆவின் நிறுவனம், விற்பனை செய்யும் உணவு பொருட்கள், பாக்கெட் மீது, அனைத்து விவரங்களும், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதனால், ஆங்கிலம் தெரியாதவர்கள், அது, என்ன பொருள், என்ற விவரம் தெரியாமல், அவற்றை வாங்க தயங்குகின்றனர்.

இதுகுறித்து, நுகர்வோர் சிலர் கூறியதாவது: தற்போது, உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனால், உள்நாட்டை சேர்ந்த, பல நிறுவனங்கள் அழிந்து போயுள்ளன. தமிழகத்தில், பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். ஆவினில் விற்கப்படும் உணவு பொருட்களின் விவரங்கள் எளிதாக புரியும் வகையில், தமிழில் அச்சடித்து விற்பனை செய்தால், இதன் விற்பனை, கிராமங்களில் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பால் பொருட்களின் தமிழ் பெயர் நீண்டதாக உள்ளது. இதை அச்சிடுவதற்கு இடம் போதவில்லை. எனவே, தான் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது’ என்றார்.

Categories: NEWS

தடையை மீறி பான், குட்கா பொருட்கள் விற்பனை “ஜரூர்’* பிற மாநிலங்களில் இருந்தும் வரத்தும் தொடர்கிறது

23,June, 2013 Comments off

தமிழகத்தில் பான், குட்கா பொருட்களுக்கு மாநில அரசு தடை விதித்தும், இதன் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தடையைக் காரணம் வைத்து, விலை இரண்டு மடங்காகி உள்ளது.புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், தமிழகத்தில், குட்கா, பான் மசாலா போன்ற, வாயில் வைத்து சுவைக்கும் புகையிலைப் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதிக்கப்படும் என, முதல்வர் சட்டசபையில் அறிவித்தார். இதைத் தொடந்து, முறைப்படி அரசாணை வெளியிடப்பட்டு, சென்ற மாதம், 23ம் தேதி முதல், தடை அமலுக்கு வந்துள்ளது.ஆனால் தடையை மீறி, சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பான், குட்கா உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கடைகளில் வெளியில் தெரியும்படி நடந்து வந்த விற்பனை, தற்போது, மறைத்து விற்கப்பட்டு வருகிறது. தடையைக் காரணம் காட்டி, பான், குட்கா வகைகளின் விலையும் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

விலை விவரம்:சில்லறை விலையில், 5 ரூபாய்க்கு விற்ற ஹான்ஸ், சூப்பர் பாக்குகள், 8 ரூபாய்க்கும், 2 ரூபாய்க்கு விற்ற சாந்தி பாக்கு, பான்பராக் வகைகள், 5 – 6 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 6 ரூபாயக்கு விற்ற சைனிகைனி, 10 ரூபாயக்கும், 5 ரூபாய்க்கு விற்ற சிறிய மாணிக்சந்த், 12 ரூபாய்க்கும், பெரிய மாணிக்சந்த் பாக்கெட், 23- 25 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.இதுகுறித்து, மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், “”தடை விதித்தாலும், மறைமுகமாக விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. வேறு பொருட்கள் அனுப்புவதுபோல், புகையிலை, பான் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து வருவது தொடர்கிறது. வழக்கம்போல், கிடங்குகளில் இருப்பு வைத்து தான், எல்லா இடங்களுக்கும் அனுப்புகின்றனர்” என்றார்.
மற்றொரு வியாபாரி கூறுகையில், “”பான், குட்கா பாக்கெட்டுகளின் விலை உயர்வால், சிறார்கள் அதிகம் வாங்குவது குறைந்துள்ளது. நாளொன்றுக்கு, 200 பாக்கு விற்ற கடைகளில், தற்போது, 80 பாக்குகள் வரை விற்கப்படுகின்றன” என்றார்.இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்ட குழுவும், அமைதியாக இருந்து வருகிறது.இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பான், குட்கா பொருட்கள் விற்பனைக்கான தடை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. அதன்பின் விற்பது தவறு. ஆனால், கிடங்குகளில் உள்ள பொருட்களை வெளியேற்ற இன்று, 23ம் தேதி வரை அவகாசம் உள்ளதால், இதை காரணமாக வைத்து, சிலர், திருடுத்தனமாக பதுக்கி வைத்து விற்கின்றனர்.பொருட்களை காலி செய்ய கொடுத்த அவகாசம் முடிந்த பின், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை உணர்ந்து, அத்தகைய பாக்கு வகைகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: NEWS

தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு இரையாகாதீர்

23,June, 2013 Comments off

Categories: NEWS

Tamilnadu FoodSafetyOfficer Service Rules Models-Prepared by some interested Food Safety Officer (Models Only)

23,June, 2013 Comments off

———————————————————————————-

CLICK HERE TO DOWNLOAD SERVICE RULE MODEL -1

————————————————————————————-

CLICK HERE TO DOWNLOAD SERVICE RULE MODEL -2

———————————————————————————-

CLICK HERE TO DOWNLOAD SERVICE RULE MODEL -3

————————————————————————————

CLICK HERE TO DOWNLOAD SERVICE RULE MODEL -4

————————————————————————————

———————————————————————————————

Pages from TamilNaduFoodSafetyDepartmentServiceRULES_model 1APages from TamilNaduFoodSafetyDepartmentServiceRULES_model 1

Categories: DISCUSSIONS