Archive

Archive for 25,June, 2013

Ignou introduces course in food safety, quality

25,June, 2013 Comments off

NEW DELHI: Indira Gandhi National Open University (Ignou) has introduced a post-graduate (PG) diploma course in food safety and quality management from the 2013 academic session, authorities said.
"The programme has been developed together with Agricultural and Processed Food Products Export Development Authority ( Apeda) to meet the increasing human resource requirements for food safety and quality management professionals in the agriculture and food sectors," a statement from Ignou said.
The last date for admission to the course is June 30.
"The PG diploma is intended for graduates in sciences, agriculture, food science or allied disciplines contemplating a career in food safety and quality management. It is also intended for professionals in food processing and quality control for strengthening their proficiency in design," the statement added.
Ignou is the world’s largest open university system with a pan-India and international reach with flexible entry qualifications and a wide range of academic programmes at affordable cost.

Categories: NEWS

FSSAI-Advisory on Outbreak of Salmonellosis in the USA and New Zealand linked to Tahini Sesame Paste from Turkey. (Dated : 25-06-2013).

25,June, 2013 Comments off
Categories: What's New-FSSAI

கோவையில் உணவு பாதுகாப்பு துறை ரெய்டு 30 ஆயிரம் பாக்கெட் பான்மசாலா பறிமுதல்

25,June, 2013 Comments off

dk1

கோவை, ஜூன் 25:

உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய ரெய்டில் சுமார் 30 ஆயிரம் பாக்கெட் பான் மசாலா, குட்கா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசு கடந்த மாதம் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட வாயில் மெல்லும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்திருந்தது. ஒட்டு மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் வாயில் மெல்லும் புகையிலை பொருட்களை கொண்டு செல்ல நேற்று முன் தினம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் கால அவகாசம் கடந்தும் சிலர் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருவதாக புகார் கிடைத்தது.

இதை தொடர்ந்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நேற்று அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் மேற்பார்வையில் 7 குழுவாக ரெய்டு நடந்தது. உணவு ஆய்வாளர் சந்திரன் தலைமையில் காந்திபுரம், பீளமேடு பகுதியில் ரெய்டு நடந்தது. இதில் வியாபார கடைகளில் பண்டல் பண்டலாக பான் மசாலா, குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. 45 கடைகளில் இருந்து 1,500 பாக்கெட் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

உணவு ஆய்வாளர்கள் வெங்கடேஷ், ரங்கராஜ் தலைமையில் ரங்கே கவுடர் வீதியில் ஒட்டு மொத்த குடோன்கள் தொடர்பாக ஆய்வு நடந்தது. இதில் குடோன்களில் பான் மசாலா பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. குடோனில் டன் கணக்கில் பான் மசாலா பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

சில நாட்களுக்கு முன் இந்த பொருட்கள் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரியவந்தது.

ஆர்.எஸ்.புரம், ஒப்பணகார வீதி, குறிச்சி, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதியில் பான் மசாலா, குட்கா பொருட்கள் பண்டல் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. மதியம் முதல் மாலை வரை நடந்த ரெய்டில் 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 30 ஆயிரம் பான்மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ், கணேஷ் உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி நகரிலும் பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பொருட்கள், வெள்ளலூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு மற்றும் பொள்ளாச்சி நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைத்து அழிக்க ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.

நகரில் இன்றும் பான் மசாலா பொருட்கள் ரெய்டு தொடரும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

சேலம் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் 6 குழுவாக பிரிந்து பான் மசாலா, குட்கா ரெய்டு 5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

25,June, 2013 Comments off

 

20130625a_005104010

சேலம், ஜூன் 25:

சேலம் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 6 குழுவாக பிரிந்து அதிரடியாக கடைகளில் சோதனை நடத்தினர். இதில்

தமிழகத்தில் புகையிலை, நிகோடின் கலந்த பொருட்களான பான்மசாலா, குட்கா, பான்பராக் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் அரசு தடை விதித்தது.

இதையடுத்து, இருப்பு இருக்கக்கூடிய புகையிலை பொருட்களை அழிக்க கால அவகாசம் வழங்குமாறு வியாபாரிகள் தரப்பில் அரசிடம் கோரப்பட்டது. இதன் பேரில் ஒரு மாத கால அவகாசத்தை அரசு வழங்கியது. இந்த கால அவகாசம் கடந்த 22ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த காலக்கெடு முடிவடைந்தையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் 6 குழுவாக பிரிந்து ஆத்தூர், தலைவாசல், மேட்டூர், இடைப்பாடி, ஓமலூர், சேலம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளிலும், மளிகைக்கடைகளிலும், சேமிப்பு குடோன்களிலும் அதிரடியாக நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், சேலத்தில் செவ்வாய்பேட்டை, பொன்னம்மாபேட்டை, வாய்க்கால்பட்டறை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், பெட்டிக்கடைகள், 2 சேமிப்பு குடோன்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பாலு, ஜெகன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நடத்திய சோதனையில்,

கி5ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போதை பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்க கூடாது என கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதை தடுக்க கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், சிக்கும் போதை பொருட்களை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றனர்.

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் பாலு தலைமையிலான குழுவினர் நேற்று சோதனை செய்தனர். அப்போது தடையை மீறி விற்பனை செய்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Categories: DISTRICT-NEWS, Salem

பொள்ளாச்சி நகரில் 25 கடைகளில் அதிரடி சோதனை 25 லட்சம் புகையிலை போதை பொருட்கள் அழிப்பு

25,June, 2013 Comments off

dk4

dk2

 

பொள்ளாச்சி, ஜூன் 25:

பொள்ளாச்சி நகரில், உணவு பாதுகாப்புதுறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மொத்தம் ரூ.1.25லட்சம் மதிப்புள்ள போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

தமிழகம் முழுவதும் பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. குட்கா, பான்மசாலா விற்பனை செய்யும் கடைகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி விற்பனை செய்யும் கடைகளில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் முழுவதும், உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் நேரில் ஆய்வுசெய்து, கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இதில் பொள்ளாச்சி நகரில் நியூஸ்கீம்ரோடு, கடைவீதி, ராஜாமில்ரோடு, மார்க்கெட்ரோடு, கூட்செட்ரோடு, தேர்நிலை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கடைகளில், நேற்று உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் சுப்புராஜ், கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

சுமார் 25க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.25லட்சம் மதிப்புள்ள, 450 கிலோ புகையிலை போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்களை, சாக்குமூட்டையில் கட்டி அதை, உணவு பாதுகாப்புதுறையினர், நல்லூரில் உள்ள நகராட்சி குப்பைகிடங்கில் கொண்டு கொட்டி அழித்தனர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

வேலூர் மாவட்டத்தில் பான்மசாலா , குட்கா தடையை அமல்படுத்த குழுக்கள் அமைப்பு

25,June, 2013 Comments off

20130625c_01310b022

Categories: DISTRICT-NEWS, Vellore

காரைக்குடி பகுதியில் பான்மசாலா விற்பனை படுஜோர்

25,June, 2013 Comments off

20130625d_015102008

Categories: DISTRICT-NEWS, Sivaganga

புதுக்கோட்டையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை

25,June, 2013 Comments off

20130625h_01910601220130625h_019106019

Categories: DISTRICT-NEWS, Pudukkottai

பான் மசாலா, குட்காவை காலிசெய்ய கடைக்காரர்களுக்கு 1 வாரம் அவகாசம்-தினகரன் செய்தி

25,June, 2013 Comments off

சென்னை : தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும் என்று கடந்த மே 8ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு ஆணை யர் குமார் ஜெயந்த், தமிழகத்தில் ஓராண்டுக்கு குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை விற்க தடை விதித்தார். கிடங்குகளில் உள்ள இருப்புகளை காலி செய்ய ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த அவகாசம் 22ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி பான்மசாலா, குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவற்றின் பதுக்கலை கண்காணிக்க கலெக்டர், உணவு பாதுகாப்பு துறை, வணிக வரித்துறை, உள்ளாட்சி அமைப்புகளை கொண்டு மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் நேற்று முதல் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்திருந்தனர்.
ஆனால் வணிகர்கள் கிடங்கில் உள்ள இருப்புகளை காலி செய்ய மேலும் 1 ஒரு வாரம் கால அவகாசம் கேட்டனர். இது குறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் குமார் ஜெயந்த் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு பான்மசாலா, குட்கா போன்றவற்றை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொருட்களுக்கு ஏற்ப, அதாவது அதிகபட்சம் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=53385

Categories: NEWS