Archive

Archive for 26,June, 2013

கோவை கடைகளில் 2வது நாளாக பான்மசாலா, குட்கா ரெய்டு

26,June, 2013 Comments off

கோவை, ஜூன் 26:

கோவையில் உள்ள கடைகளில் இரண்டாவது நாளாக பான்மசாலா, கு க்ஷ்ட்கா ரெய்டு நடந்தது. ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசு பான் மசலா, குட்கா உள்ளிட்ட வாயில் மெல்லும் புகையி லை பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் உணவு கட்டுப்பாட்டு துறையின்கீழ் இயங்கும், கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரெய்டு துவக்கினர். ஒரே நாளில் 30 ஆயிரம் பாக்கெட்டுகளை பறிமுதல்செய்தனர்.

நேற்று இரண்டாவது நாளாக ரெய்டு நடந்தது. கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கதிரவன் மேற்பார்வையில், ஆய்வாளர்கள் சந்திரன், கோவிந்தராஜ், ஜெரால்டு, ராஜேந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய ஏழு குழுவினர் மாநகர் முழுவதும் ரெய்டு நடத்தினர். ரங்கே கவுடர் வீதி, சரவணம்பட்டி, ரத்தினபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மொத்த வியாபாரிகளின் குடோன் முதல் சில்லரை வியாபாரிகளின் கடைகள் வரை இந்த ரெய்டு நடந்தது. இறுதியில், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 7 ஆயிரம் பான்மசாலா, குட் கா பாக்கெட்டுகளை பறிமுதல்செய்தனர். இச்சோதனை தொடரும் என்றனர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

LICENSE & REGISTRATION CERTIFICATE–NEW MODEL

26,June, 2013 Comments off
Categories: FORMS

வெளிமாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு குட்கா கொண்டு வருவதை தடுக்க சோதனை கலெக்டர் தகவல்-தினத்தந்தி செய்தி

26,June, 2013 Comments off

கிருஷ்ணகிரி,

கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் குட்கா மற்றும் நிகோடின் பொருள்கள் கொண்டு வருவதை தடுக்க மாநிலத்தின் எல்லையோர சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தெரிவித்தார்.

குட்கா

குட்கா, பான்மசலா, புகையிலை மற்றும் நிகோடின் கலந்த உணவு பொருட்கள் தடை செய்யப்பட்டது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட கலெக்டர் ராஜேஷ் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் பொதுமக்கள் நலன்கருதி புகையிலை, நிகோடின் உள்ளிட்ட தீங்கு செய்யும் பொருட்கள் கலந்த உணவுப் பொருட்கள் தயாரிப்பு, சேமிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றை உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம்–2006ன் படி தடை செய்துள்ளார்.

சிறப்புக்குழு

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் அறிவுரையின் பேரில் மாவட்டந்தோறும் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை மற்றும் நிகோடின் கலந்த பொருட்களை கண்காணிக்க எனது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார். மேலும் இந்த குழு தடை சட்டத்தை அமல்படுத்தும் போது சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதவ வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

சோதனை சாவடிகளில் ஆய்வு

மாவட்டத்தின் அண்டையில் உள்ள வெளிமாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கொண்டு வருவதை தடுக்கும் விதமாக மாநிலத்தின் எல்லையோரம் உள்ள சோதனை சாவடியில் தீவிர சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் தவறு செய்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கவும், உரிய அபராதம் விதிக்கும் தீர்ப்பு வழங்கும் அலுவலராகவும், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) தங்கள் கீழ் பணிபுரியும் களப்பணியாளர்களை கொண்டு கண்காணித்து தகவல் தர வேண்டும் எனவும், முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கு அருகில் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனையை கண்காணிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பொருள்கள் பறிமுதல்

நகராட்சி ஆணையாளர்கள் தங்களது பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் குறித்த தகவல்களை தங்களது களப்பணியாளர் மூலம் அறிந்து தகவல் தெரிவிக்க வேண்டும். துணை ஆணையர் (வணிக வரி) சோதனை சாவடியில் அரசால் தடை செய்யப்பட்ட இப்பொருட்கள் பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.

மாவட்ட போக்குவரத்து அலுவலர் சோதனைச்சாவடியில் சோதனை மேற்கொள்ளும் போதும், வாகன சோதனையின் போதும் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பின் அப்பொருட்களை பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள நியமன அலுவலர் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தானபாண்டியன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Krishnagiri

Secret sales of gutka, pan masala flourish – The Hindu

26,June, 2013 Comments off

                                                                                      

Pan masala and gutka may be off the shelves in shops, but the banned tobacco products continue to be sold clandestinely to regular customers.

Despite a government order issued a month ago banning the manufacture, storage, distribution and sale of gutka and pan masala, sales continue unabated across the city.

Proprietors of petty shops and tea stalls in various parts of Chennai, including Perambur, Pulianthope, Royapettah and Kodungaiyur said they had stopped getting gutka and pan masala after the government issued a blanket ban on chewable tobacco in May.

But many of them still secretly stock the products. A few shops in Elephant Gate also sold ‘Hans’, another form of chewable tobacco.

‘Only for regulars’

“I have a stock of various brands of pan masala and gutka but I do not sell it to strangers. Who knows, one of them could be part of an official inspection team,” said a shopkeeper in Vyasarpadi.

He said traders have asked the Food Safety department for time until the existing stock of pan masala and gutka could be sold.

Rise in price

A number of shopkeepers said the cost of both pan masala and gutka had increased over the last few days. Most of these products are manufactured in Uttar Pradesh.

“There has been a steep rise in the prices of different-sized pan masala and gutka sachets. For instance, what was sold for Rs. 4 is now Rs. 10 and what cost Rs. 12 is Rs. 35 now. Wholesale distributors are giving us the stock at different prices each day. For instance, I paid Rs. 400 for a bundle which would have earlier cost me Rs. 100. But I keep buying it as it is more profitable than selling cigarettes,” said a shopkeeper near Pulianthope.

He said a large number of women bought the tobacco products from his shop.

Main users: women

Oncologists said smokeless tobacco products were one of the primary etiological causes of oral cancer and were being sold in large numbers despite the ban.

“According to the global adult tobacco survey India 2009-2010, eight per cent of the Tamil Nadu population uses gutka and pan masala.

Women are the predominant users of smokeless tobacco,” said Arvind Krishnamurthy, additional professor of surgical oncology, Cancer Institute, Adyar.

Officials of the Food Safety and Drug Administration department said the one month given to shopkeepers had come to an end. “Our teams will soon conduct checks at shops and take necessary action,” an official said. The department has a helpline for complaints from the public – 94440 42322.

When this reporter called the helpline, the officer in-charge said the helpline received around 10 complaints daily, including on the sale of the banned tobacco products.

“Earlier, we used to get complaints regarding the poor quality of soft drinks and food at restaurants. Now, we get calls on the sales of gutka and pan masala. We forward the complaints to the respective district-level designated officers,” he said.

Categories: NEWS

Gutka ban: HC Circuit Bench quashes interim plea – Deccan Herald News

26,June, 2013 Comments off

The High Court Circuit Bench, Dharwad upheld the State government’s ban on gutka by quashing an interim plea filed by gutka companies on Tuesday.

An interim plea had been filed by Ghodawat Pan Masala and three other gutka manufacturing companies, which challenged the State government’s order to impose a ban on the sale and manufacture of gutka in State.

The plea had also appealed to the Circuit Bench, asking for a stay on the ban notification issued by the Food Safety Commissioner. The Circuit Bench, which heard the case, had reserved judgement for June 11.

On Tuesday, the single bench headed by Justice B S Patil, in its pronouncement, said that as per the Food Safety and Standards Act, 2006, the State Government has the right to impose a ban on items containing tobacco and nicotine.

This Act is implemented since August 5, 2011, and the ban has been in force since then, he said. Hence, the notification issued by the Food Safety Commissioner is found to be well within the legal framework.

The judge also observed that a few non-governmental organisations (NGOs) had appealed to Circuit Bench, to ban gutka because of its hazardous impact on society — especially the youth. “Thereby, the State government has taken a wise decision of banning gutkha,” the judge added.

The judge also stated that the Supreme Court has directed all 25 states and three union territories to impose a ban on gutka and pan masala products.

Advocate General Raviverma Kumar pleaded in favour of the State government.

Categories: NEWS

பான், குட்காவுக்கு அவகாசம் நீட்டிப்பில்லை : நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுரை

26,June, 2013 Comments off

சென்னை: "பான், குட்கா பொருட்களை காலி செய்ய, மேலும் ஒரு வார அவகாசம் கேட்ட வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது’ என, உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. தடையை மீறி விற்போர் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குட்கா, பான் மசாலா போன்ற, வாயில் வைத்து சுவைக்கும், புகையிலை பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. கிடங்குகளில் உள்ள, இருப்புகளை காலி செய்ய அளிக்கப்பட்ட, ஒரு மாத கால அவகாசமும், ஜூன், 22ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இதனால், மாநிலம் முழுவதும், அதிரடி நடவடிக்கை எடுக்கும் நடவடிக்கை துவங்கியது. இதனிடையே, "இன்னும் ஒரு வாரம், அவகாசம் தர வேண்டும்’ என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். சென்னையில், உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர் குமார் ஜெயந்த் தலைமையில், மாவட்ட நியமன அலுவலர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், "இருப்புக்களை காலி செய்ய, ஒரு மாத அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் அவகாசம் அளிக்க முடியாது. தடையை மீறி பான், குட்கா பொருட்களை விற்றால், கலெக்டர் தலைமையிலான கண்காணிப்புக்குழு மூலம், நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்’ என, மாவட்ட நியமன அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கலெக்டர்கள் தலைமையில், ஆர்.டி.ஓ., – எஸ்.பி., வணிகவரித் துறை, பள்ளிக் கல்வித் துறை, உணவு பாதுகாப்புத் துறை, உள்ளாட்சிகளின் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தை நடத்தி, பான், குட்கா பொருட்கள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என, தெரிகிறது. "தடையை மீறி விற்கப்படும் பான், குட்கா பொருட்களை, பறிமுதல் செய்வதோடு, 5 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும்; தடையை மீறி விற்போர் பற்றி, 94440 42322 என்ற எண்ணில், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்’ என, உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Categories: NEWS

புதுச்சேரியில் குட்கா, பான்மசாலா விற்பனைக்குத் தடை

26,June, 2013 Comments off

புதுச்சேரியில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலைப் பொருள்களுக்கு ஓராண்டுக்காலம் தடைவிதித்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஜி.ராகேஷ்சந்திரா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

இதன்படி, இப்பொருள்களின் விற்பனை, தயாரித்தல் மற்றும் பதுக்குதல் ஆகியவற்றுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 2011-ன் படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புகையிலை, பான்மசாலா பொருள்களுக்கு தமிழகத்தில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories: NEWS