Archive

Archive for 29,June, 2013

FDA collects samples of food, ingredients – The Times Of India

29,June, 2013 Comments off

PANAJI:

Acting swiftly inspectors of the food drugs administration (FDA) collected food samples from the Canacona school and also inspected the kitchen where the food was cooked.

FDA inspectors have drawn five samples, including ingredients used in preparing the dish, by the self help group (SHG) that had a contract with the school to provide the midday meal.

FDA director Salim Veljee told TOI that the samples collected will be sent for microbiological testing on Friday.

"Our inspectors are yet to return from Canacona. Food samples will be sent for laboratory testing tomorrow morning. Overall hygienic condition of the kitchen was OK though there were minor discrepancies but that cannot be attributed to the incident," Veljee said.

The SHG got its water from the PWD supply and provided midday meals to five to six schools in Canacona but there were no reports of students falling sick in any other school after consumption of the food.

Categories: NEWS

FDA to launch drive to check food quality in city hotels – The Times Of India

29,June, 2013 1 comment

NASHIK:

The Food and Drug Administration (FDA) plans to launch a drive from next week to inspect hotels and eateries across the city to monitor food quality. There are around 3,000 hotels and eateries across the city.

The drive will be conducted in view of the Kumbh Mela scheduled in 2015-16. Around one crore people are expected to visit Nashik during the Kumbh.

Chandrakant Pawar, joint commissioner (food), FDA, said: "Lakhs of devotees come to Nashik for the Kumbh Mela. Public health will be a priority for us during the Kumbh. We are, therefore, planning to launch a special drive to inspect the hotels and eateries from the first week of July."

"The major objective behind the drive is to check whether the food is cooked in hygienic conditions. We will serve improvement notices to hoteliers where the food is found to be unhygienic. We will take action against hoteliers or owners of eateries if improvement is not seen even after issuance of notices."

Categories: NEWS

இரும்பாலை: கடைகளில் விற்பனை செய்த குட்கா, புகையிலை பறிமுதல்

29,June, 2013 Comments off

 

தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட்ட இந்த பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா, என்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

இன்று இந்த குழுவினர் இரும்பாலை, சித்தனூர், தளவாய்ப்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, உள்ளிட்ட இடங்களில் உள்ள டீ கடைகள், பேக்கரிகள், மற்றும் மளிகை கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி அனுராதா கூறியதாவது:-

இன்று நடத்திய சோதனையில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை மற்றும் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டது குறித்து மெமோ வழங்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் அடுத்த முறை அவர்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கோர்ட்டு மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Categories: DISTRICT-NEWS, Salem

பான்மசாலா, குட்கா விற்பனை "கனஜோர்’-தினமலர் செய்தி

29,June, 2013 Comments off

பெரம்பலூர்: ""தமிழக அரசினால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் கனஜோராக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதை தடுப்பதற்கான எவ்வித முயற்சியை எடுக்காமல் முதல்வர் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மெத்தனபோக்காக செயல்படுகின்றனர்,” என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த பொருட்களை மக்கள் உட்கொள்வதால் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு இளம் வயதிலேயே மாரடைப்பால் பலர் உயிரிழக்க வாய்ப்பாக அமைகிறது.
சிலர் இப்பொருட்களை தங்களது வாயின் உள்பகுதியில் அடைக்கி வைப்பதால் வாய் உதட்டு பாகம், தாடை, நாக்கு மற்றும் தோல் ஆகிய இடங்களில் புற்று நோய் அதிகம் உண்டாகி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
நிக்கோடின் மற்றும் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் பான்மசாலா, குட்கா, மாணிக்சந்து, பான்பராக், ஹான்ஸ், மாவா, தம்மக், கணேஷ், சாந்தி மற்றும் பீடா போன்றவற்றை விற்பனை செய்ய தடை விதித்து, இந்த தடை சட்டம் கடந்த 2013 மே 23ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் தரேஷ்அஹமது தலைமையில், வருவாய், காவல், நகராட்சி, வட்டார போக்குவரத்து, கல்வி, சமூக நல, சுகாதாரம், வணிக வரி துறை மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய துறையின் அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது.
தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த பொருட்களை விற்பனை செய்யப்படுவதோ, பதுக்கி வைத்திருப்பதோ தெரிய வந்தால், இது தொடர்பான புகார்களை கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலகம் ஃபோன் நம்பர் -04328-224033, பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மக்கள் 94430-4488, பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரத்துக்கு 95783-26454, ஆலத்தூர் வட்டாரத்திற்கு 99449-15341, வேப்பூர் வட்டாரத்திற்கு 98652-32120 ஆகிய ஃபோன் நம்பரை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
இது போன்ற பொருட்களை உற்பத்தி செய்வதோ, விற்பனை செய்வதோ மற்றும் பதுக்கி வைத்து இருப்பதோ தவறாகும். இத்தகைய பொருட்களை வைத்திருப்பவர்கள் ஜூன்., 22ம் தேதிக்குள் தாங்களாகவே முன் வந்து அந்த பொருட்களை அழித்துவிட வேண்டும்.
தவறும் பட்சத்தில் இந்த பொருள்களை மொத்தமாக விற்பனை செய்வோர்கள், வாங்கி விற்பனை செய்வோர்கள் மற்றும் மறைத்து வைத்து விற்பனை செய்வர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதை செயல்படுத்த வேண்டிய பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளோ, இதற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவோ, அரசால் தடை செய்யப்பட்ட நிக்கோடின் மற்றும் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் பான்மசாலா, குட்கா, மாணிச்சந்து பான்பராக், ஹான்ஸ், மாவா, தம்மக், கணேஷ், சாந்தி மற்றும் பீடா ஆகிய பொருட்கள் விற்பனை செய்வதையோ தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசால் தடை செய்யப்பட்ட மேற்கண்ட பொருட்கள் பெரம்பலூர் நகரிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகர, கிராமப்புறங்களில் உள்ள கடைகளிலும் "கனஜோராக’ விற்பனை செய்யப்படுகிறது.
இதை கண்காணிக்க வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கும்பக்கர்ண தூக்கத்தில் உள்ளனர். பெரம்பலூர் நகரில் உள்ள கடைகளில் தரமற்ற தீங்கு விளைவிக்கும் வகையில் அதிகளவில் கேசரி பவுடர் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட கலாவதியான திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. குளிர்பானங்கள் மற்றும் சுகாதாரமற்ற குடிநீர், பாக்கெட்டுகளாகவும், பாட்டில் மற்றும் கேன்களாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
எனவே, அரசால் தடை செய்யப்பட்ட நிக்கோடின் மற்றும் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். தரமற்ற திண்பண்டங்கள், குடிநீர், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்து அவற்றை அழிப்பதுடன், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Categories: DISTRICT-NEWS, Perambalur

காரைக்குடி பகுதி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை – Dinamani Press News

29,June, 2013 Comments off

காரைக்குடி பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை நடத்தி அங்கிருந்து தடை செய்யப்பட்ட பான் பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை கைப்பற்றினர்.

காரைக்குடி, கல்லல், அரியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் அறிவுநம்பி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில் பான்பராக், பான்மசாலா மற்றும் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ. 10 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்று கடைக்காரர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Sivaganga

41 குடிநீர் நிறுவனங்களின் தர பரிசோதனை முடிந்தது: ஜூலை 2ல் அறிக்கை தாக்கல்

29,June, 2013 Comments off

சென்னையில் செயல்படும், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து, விற்பனைக்கு அனுப்பப்படும் குடிநீர், பாதுகாப்பற்றதாக இருப்பது ஆய்வில் தெரிய வந்ததால், தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென் மண்டலம்) தானாக முன் வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், அனுமதியின்றி செயல்பட்ட, 92 குடிநீர் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதில், 85 நிறுவனங்களின் குடிநீர் மாதிரி எடுத்து பரிசோதித்ததில், தர பரிசோதனையில் தேறிய, 51 நிறுவனங்கள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவின்படி, மீதமுள்ள, 41 நிறுவனங்களில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மீண்டும் குடிநீர் மாதிரிகளை எடுத்து, தர பரிசோதனைக்காக, உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைத்தனர். உணவு பாதுகாப்புத் துறையின் ஆய்வகத்தில், இரண்டு வாரமாக பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிக்கப்பட்டு, அது பற்றிய விவரங்களை, உணவு பாதுகாப்புத் துறை, முறைப்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நேற்று அனுப்பப்பட்டது. இதில், எத்தனை நிறுவனங்களின் குடிநீர் தரமாக இருந்தது. எத்தனை நிறுவனங்களின் குடிநீர் தரமில்லாமல் இருந்தது என்ற விவரம், ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "41 நிறுவனங்களில், இரண்டாம் முறை எடுத்த குடிநீர் மாதிரி பரிசோதனை முடிவு கிடைத்துள்ளது. இதை ஒருங்கிணைத்து, அறிக்கை தயாரித்து வருகிறோம். அந்த அறிக்கை, ஜூலை, 2ம் தேதி, பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும்’ என்றார்.
இரண்டு மாதத்திற்கு மேலாக முடங்கியுள்ள, 41 குடிநீர் நிறுவனங்களும் மீண்டும் செயல்படுமா என்பது, ஜூலை, 2ம் தேதி தெரிய வரும்.

Categories: NEWS