Archive

Archive for 30,June, 2013

பல்லாவரம் நகராட்சி பகுதியில் குட்கா பறிமுதல்

30,June, 2013 Comments off

malaimalar

20130629c_015101008

போதை பாக்கு, குட்கா மட்டுமின்றி வாய் புகையிலை விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் எச்சரிக்கை

30,June, 2013 Comments off

20130629e_013104016

சேலம், ஜூன் 29:

பான் மசாலா, குட்கா மட்டுமின்றி வாய் புகையிலை விற்றாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில், கடந்த மாதம் 23ம் தேதி முதல் பான் மசாலா, குட்கா போன்ற லாகிரி வஸ்துக்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அனைத்து மொத்த, சில்லரை விற்பனை கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் போதை பாக்கு, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் புகையிலை கலந்த பாக்கு பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், வாய் புகையிலை எனச்சொல்லப்படும் தழை புகை யிலைக்கு தடை இல்லை என்றும் தகவல் பரவியது. ஆனால், தழை புகையிலைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வாய் புகையிலை பதுக்கல், விற்பனை செய்வதும் குற்றம் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டி, சித்தனூர், சர்க் கார் கொல்லப்பட்டி ஆகிய இடங்களில் பீடா ஸ்டால், பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், டீக்கடைகள் என 50 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் இந்த சோதனை நடந்தது.

இதுகுறித்து அவர் அனுராதா கூறுகையில், ‘‘சித்தனூர் சுற்றுவட்டாரத்தில் நடந்த சோதனையில், 30 கிலோ வாய் புகையிலை, பொட்டலங்களில் அடைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த புகையிலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. போதை பாக்கு மட்டுமின்றி வாய் புகையிலை விற்பனை செய்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாவட்டம் முழு வதும் கடந்த ஒரு மாதமாக நடந்த சோதனையில்

`1 லட்சம் மதிப்புள்ள போதை பாக்கு, குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன,’’ என்றார்.

Categories: DISTRICT-NEWS, Salem

கள்ள மார்க்கெட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை படுஜோர்

30,June, 2013 Comments off

 

தேனி, ஜூன் 29:

புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளபோதும், தேனி மாவட்டத்தில் கள்ளச் சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளது. அரசின் தடையை பயன்படுத்தி இருமடங்கு கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.

புகையிலை, குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்களை தொடர்ந்து உட்கொண்டால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் புகையிலைப் பொருள்கள் விற்பனையை தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவு கடந்த மே மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டது.

ஏற்கனவே, விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை வாங்கி இருப்பில் வைத்திருந்தவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சலுகை காட்டப்பட்டது. இதற்காக மே 22ம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி வரை விற்றுக்கொள்ள அரசு அனுமதி அளித்தது. ஜூன் 23ம் தேதி முதல் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை விற்கக் கூடாது என கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக புகையிலைப் பொருட்கள் இருப்பில் வைத்திருக்கும் ஸ்டாக்கிஸ்ட்டுகளுக்கு, மாவட்ட உணவுத்துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட ஸ்டாக்கிஸ்ட்டுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், புகையிலை விற்பனையை கண்காணித்து, தீவிர நடவடிக்கை எடுக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், தேனி மாவட்டத்தில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்கிறது. பகுதி வாரியாக குறிப்பிட்ட சில பலசரக்கு கடைகள், பெட்டிக்கடைகளில் மறைமுகமாக பான்மசாலா, குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உண்மையான விலையை காட்டிலும் இருமடங்கு கூடுதல் விலையில் விற்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தகுந்தது. ஆனால் தேனி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனை மறைமுகமாக படுஜோராக நடந்து வருகிறது. அரசு விதித்த தடையை பயன்படுத்தி, முன்பை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே, இந்த விற்பனையை தடுக்க, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Categories: DISTRICT-NEWS, Theni

காரைக்குடி பகுதியில் பான் மசாலா கடைகளில் அதிரடி ரெய்டு

30,June, 2013 Comments off

20130629d_013102008

காரைக்குடி, ஜூன் 29:

தினகரன் செய்தி எதிரொலியாக காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் பான் மசாலா விற்கும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதியுடன் பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. சிவகங்கை மாவட்ட கலெக் டர் ராஜாராமனும் விற்பனைக்கு தடை விதிக் கக் கோரி கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால் தடையை மீறி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பான் மசாலா விற்பனை படுஜோராக நடந்து வருவதாக கடந்த 25ம் தேதி தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக நேற்று உணவு பாதுகாப்பு நியமன அலு வலர் டாக்டர் அருள்நம்பி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்லத்துரை, முத்தலீப், தியாகராஜன், உதயராஜன், ஜோதிபாசு, ராஜேஷ்குமார் ஆகியோர் காரைக் குடி, அரியக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் ரூ.5,000 மதிப்புள்ள பான் மசாலா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

சோதனை குறித்து அருள்நம்பி கூறுகை யில், பான் மசாலா, புகையிலையை பயன்படுத்துவதால் புற்று நோய், சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டலம், மூளை பாதிப்பு உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. இந்த பொருட்களில் காரியம், சோடியம் கார்பனேட், அமோனியா, அமோனியம் கார்பனேட், நைட்ரஸ் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு பொருட்கள் உள்ளன. நீண்ட காலமாக பயன்படுத்துவோருக்கு பற்கள், ஈறுகள் சிதைந்து போகும். வாயில் புகையிலையை வைப்பதால் அரித்து துளை ஏற்படும். முதல் முறை என்பதால் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை மட்டும் விடப்பட்டது. தொடர்ந்து விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Categories: DISTRICT-NEWS, Sivaganga

கலப்பட தேயிலைத்தூள் போதை பாக்கு பறிமுதல்

30,June, 2013 Comments off

 

குன்னூர்,ஜூன் 29:

குன்னூர் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கலப்பட தேயிலைத்தூள்,போதைபாக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

தமிழக அரசு குட்கா, பான்மசாலா,புகையிலை உள்ளிட்ட போதை பொரு ட்களை தடை செய்துள் ளது. இருப்பினும் நீலகிரி மாவட்டத்தில் இப்பொருட்களின் விற்பனை தொடர்வதால், இதுகுறித்து சோத னை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் களத்தில் இறங்கினர். முதல்கட்டமாக நேற்று குன்னூரில் மவுண்ட்ரோடு, மார்க்கெட், வி.பி.தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார அலுவலர் டாக்டர் ரவி தலைமையில் அதிகாரிகள் சிவர ஜ், சல்வ ராஜ்,சிவகுமார், அரிகோபாலகிருஷணன் ,அருள்குமார் ஆகியோர்அதிரடி சோதனை நடத்தினர். பெ ட்டி கடைகள், மளிகை கடை கள், பலகார கடை கள்,ஓட்டல்கள், பேக்கரி, டீக்கடைகள் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரூ.5ஆ யிரம் மதிப்புள்ள கலப்பட சாயப்பவுடர் மற்றும் தடை செய்யப் பட்ட போதைபொருட்களை பறிமுதல் செய் தனர்.

தேயிலை தொழிலை பிரதானமாக கொண்டு செயல்பட்டு வரும் குன்னூர் நகரில் உள்ள டீக்கடை களில் கலப்பட தேயிலைத்தூள் அதிகளவில் பயன்படுத்துவதை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். போலி குளிர்பானங்களும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ரவி கூறியதாவது:

தமிழகஅரசு உத்தரவுபடி பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை யாரும் விற்பனை செய்யக் கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது, இதை முற்றிலும் ஒழிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. காலக்கெடு நிறைவடைந்ததால் இன்று(நேற்று) முதல் சோதனையை துவக்கி உள்ளோம். குன்னூர் நகரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கலப்பட தேயிலைத்தூளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. முதல் கட்டமாக தடை செய்யப்பட்ட போதைபொருட்கள், கலப்பட தேயிலைத்தூள், போலி குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. சுகாதாரமற்ற ஓட்டல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும். விதிமுறைக்கு புறம்பாக தடை செய்யப்பட்ட பொருட் கள் விற்பனை செய்யப்படும் பட்சத்தில் பொதுமக்கள் 0423 2450088 என்ற தொலைபேசி எண் ணில் தொடர்பு கொ ண்டு புகர் கூறலாம். புகார் தருபவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு டாக்டர் ரவி கூறினார்.