Archive

Archive for 7,February, 2015

வணிகர்களை அதிகாரிகள் அச்சுறுத்தக்கூடாது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

7,February, 2015 1 comment

திருச்சி: "உணவு பாதுகாப்பு சட்டத்தில் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், வணிகர்களை, அதிகாரிகள் அச்சுறுத்தக்கூடாது’ என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொருளாளர் கோவிந்தராஜூலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி, உணவுத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு வணிகரும், இந்த சட்டத்தில் பதிவு செய்து கொள்வதும், குறிப்பிட்ட தொகைக்கு மேல் விற்பனை செய்யும் வணிகர்கள், உரிமம் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், வணிகர்களால் பின்பற்ற இயலாத ஷரத்துக்களுடனும், பல்வேறு குறைபாட்டுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், இச்சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அல்லது குறைபாடுகளையும், பின்பற்ற இயலாத ஷரத்துக்களையும் நீக்க வேண்டும். அதுவரை பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறுதலுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும், என அகில இந்திய வணிகர் சம்மேளனமும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் வேண்டுகோள் விடுத்தது.

இதை ஏற்று, இதுவரை, மூன்று முறைக்கு மேல் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, 4ம் தேதியுடன் காலக்கெடு நிறைவடையும் நிலையில், இதுவரை எந்த குறைபாடுகளையும் நீக்காததால், பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறுவதற்கான காலக்கெடுவை, மேலும் நீட்டித்துத்தர வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, மேலும், ஆறு மாதத்துக்குகு, ஆகஸ்ட், 4ம் தேதி வரை, காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், என உணவுத்தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறுவதில், அவசரம் காட்ட வேண்டாம். அதே நேரத்தில், பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறும்படி உணவு வணிகர்களை, அதிகாரிகள் யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது. சட்டத்தைக் காரணம் காட்டி, வணிகர்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்ந்தால், உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து, அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Categories: NEWS

Minutes of the Fifteenth Authority meeting held on 20th August, 2014 (Dated: 06.02.2015)

7,February, 2015 Comments off
Categories: MINUTES

FSDA TN seizes 58 bottles of popular powdered health drink, soft drinks

7,February, 2015 Comments off
 

As part of a food safety campaign, Food Safety and Drug Administration (FSDA), Tamil Nadu, conducted several raids and patrols in Coimbatore and Namakkal districts of the state recently, seizing food products past their best before dates, sold in both retail and wholesale shops, and warning outlets maintaining poor hygiene. Most of the confiscated items were beverages, which included powdered health drinks and soft drinks.

While 58 canned bottles of a popular powdered health drink, well past their best before dates, were confiscated from Coimbatore, FSDA raided and seized soft drinks from Namakkal district. During the campaign, some bakery items past their expiry dates were also found.

The FSDA explained it as a continuous process that started after receiving complaints and conducting investigations. According to FSDA, there is a tendency to sell food items past their best before dates at a discount to minimise losses. But under the regulations of FSSAI, selling of any food products past their best before dates can invite fine or punishment.

Hygiene was another problem reported by designated officers from the field. They alerted food business operators, especially, bakeries, to ensure necessary hygiene in the premises.

Kumar Jayant, commissioner of food safety, Tamil Nadu, said, “FSDA of Tamil Nadu is conducting raids and patrols in different parts of the state to check food safety, as part of a continuous process started after consumer complaints and departmental investigations. Every district designated officer is directed to conduct immediate and secret raids, according to the investigation reports and complaints received in each district.”

K Tamil Selvan, FSDA district designated officer, Namakkal, said, “Our team is conducting continuous patrol and raids in different parts of the city as per complaints and investigations. We alerted bakery business operators about the hygiene and products sold from their shops to avoid adulteration and selling expired food products.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

கோவில்பட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை ஓட்டல்கள், பார்களில் சுகாதார துறையினர் அதிரடி சோதனை சுகாதார குறைபாடு நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் கெடு

7,February, 2015 1 comment

கோவில்பட்டி, பிப். 6:

கோவில்பட்டியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் டாஸ்மாக் மதுபான பார்கள், எண்ணெய் நிறுவனங்கள், விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்குள் சுகாதாரத்தை கடைப்பிடிக்காவிட்டால் சீல் வைக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் எச்சரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கலெக்டர் ரவிக்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ், கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) முத்து ஆகியோர் தலைமையில் கோவில்பட்டி நகரில் மெயின்ரோடு பகுதியில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள், டாஸ்மாக் பார்கள், டீக்கடைகள், பெட்டிக் கடைகள், கல்லூரி விடுதிகள், எண்ணெய் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாரிச்சாமி, பொன்ராஜ், முத்துகுமார், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், வள்ளிராஜ், காஜாமுகைதீன், சீனிராஜ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது மதுபான பார்களில் மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டிருந்த காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகளை அப்புறப்படுத்தினர். மேலும் ஓட்டல்களில் உள்ள சமையலறைகள் சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். ஒரு ஓட்டலில் உள்ள குளிர்சாதன பெட்டிக்குள் சிவப்பு கலர் சாயம் பூசப்பட்ட 15 கிலோ சிக்கனை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஓட்டல்களில் உள்ள கழிவுகளை பிளாஸ்டிக் பேரல்களில் மூடாமல் போட்டு வைத்திருப்பதை கண்ட மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ், பேரல்களின் மேற் பகுதியில் மூடி போட வேண்டும் என உத்தரவிட்டார்.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறுகையில், �கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உணவகங்கள், பார்கள், எண்ணெய் நிறுவனங்கள், பெட்டி மற்றும் டீக்கடைகள், கல்லூரி விடுதிகள், டயர் கம்பெனிகள் உள்ளிட்ட 18 நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் தேவையற்ற பொருட்கள் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதில் சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் 5 நிறுவனங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்குள் குறைகளை சரிசெய்யா விடில் சீல் வைக்கப்படும்� என்றார்.

குடிநீர் தயாரிப்பு நிறுவனத்திற்கு சீல் வைப்பு

7,February, 2015 Comments off

Categories: DISTRICT-NEWS, Erode

ஊட்டி மார்க்கெட் வளாக கடைகளில் ஆய்வு

7,February, 2015 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2015/02/861a7-20150206e_015105005.jpg

Categories: NEWS

கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

7,February, 2015 Comments off

மதுரை:மதுரை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகுணா தலைமையில், ஆய்வாளர்கள் ராஜா, சரவணன், முரளிதரன், அம்சத் ஆகியோர் நெல்பேட்டை பகுதியில் உள்ள 48 கடைகளில் ஆய்வு செய்தனர்.4 ஓட்டல்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. 3 ஓட்டல்களில் 20 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Madurai

டெங்குக்கொசு ஒழிப்பு நடவடிக்கை ஓட்டல்களில் அதிரடி சோதனை

7,February, 2015 Comments off

மதுரை, :டெங்கு காய்ச்சாலை தடுக்க உணவு பாதுகாப்பு மற்றும் மருந்தியல் துறை அதிகாரிகள் மதுரை நகரில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் திடீர் சோதனையிட்டனர். இதில் 20 கிலோ பழைய ஆட்டுக்கறி பறிமுதல் செய்யப்பட்டது.   மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்தியல் துறை டாக்டர் சுகுணா தலைமை யில் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசுக்கள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 குழுக்களாக சென்ற அவர்கள் கடந்த 10 நாட்களாக ஓட்டல்கள், வியாபார தளங்களில் கொசுக்கள் உருவாகும் இடங்களை கண்டறிந்து மருந்துகளை தெளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நெல்பேட்டை பகுதியில் உள்ள 23 ஓட்டல்கள் உள்பட 48 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் 3 ஓட்டல்களில் 20 கிலோ பழைய ஆட்டுக்கறியை வைத்து பயன்படுத்துவதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்து அழித்தனர். இதுபோன்று தொடர்ந்து பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.      இந்த சோதனைகளில் பாதுகாப்பு அலுவலர்கள் ராஜா, சரவணன், முரளிதரன், மனோகரன், அம்ஜத் இப்ராகீம் கான் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Categories: DISTRICT-NEWS, Madurai

Stale food seized

7,February, 2015 Comments off

Food Safety officials seized stale chicken, meat, and fried rice stored in refrigerators in three restaurants in Nelpettai on Friday.

Designated Officer for Food Safety J. Suguna said that 20 kilos of meat and fried rice were seized. The raids were conducted in restaurants and marriage halls on East and West Veli streets, as instructed by the Collector to check mosquito-breeding sources in view of dengue threat. “We inspected 48 buildings. In four places in Nelpettai, our team found mosquito breeding sources,” Dr.Suguna said.

Categories: DISTRICT-NEWS, Madurai