Archive

Archive for 8,February, 2015

கோவில்பட்டியில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு

8,February, 2015 Comments off

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திடீர் ஆய்வு

மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில், கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) என்ஜினீயர் முத்து, சுகாதார ஆய்வாளர்கள் சீனிராஜ், காஜா நிஜாமுதீன், முருகன், வள்ளிராஜ், சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துகுமார், மாரிச்சாமி, பொன்னுராஜ் ஆகியோர் கோவில்பட்டியில் உள்ள ஓட்டல்கள், டாஸ்மாக் பார்கள், அங்கன்வாடிகள், பஞ்சர் கடைகள், எண்ணெய் மில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது ஒரு அசைவ ஓட்டலில் இருந்த காலாவதியான ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.3,500 ஆகும்.

வணிக நிறுவனங்களுக்கு நோட்டீசு

பின்னர் டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது காலியான பாட்டில்களை தண்ணீர் தேங்கும் வகையில் வைக்க கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து அங்கன்வாடிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அப்போது தண்ணீர் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும், அங்கன்வாடி வளாகத்தில் தண்ணீர் தேங்க கூடாது என்று அறிவுறுத்தினர். தொடர்ந்து வாகனங்களுக்கு பஞ்சர் பார்க்கும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது தண்ணீர் பாத்திரம், தண்ணீர் தொட்டியை மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

சுகாதாரமான முறையில் செயல்படாத 5 வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர். மேலும் 26 கடைக்காரர்களிடம் சுகாதாரமான முறையில் செயல்படுவோம் என்று உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கினர்.

உப்பின் உவர்ப்பும் அதற்கு வந்த சோதனையும்

8,February, 2015 Comments off

 

     “உப்பிட்டவரை உள்ளளவும் நினை, உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.   இது போன்ற பழமொழிகள் பலவற்றை நீங்கள் கேட்டிருக்கலாம்.   எனினும் உப்புக்கும் அதை உற்பத்தி செய்து விற்பவர்களுக்கும் வந்த சோதனைகளைப் பலர் அறிய வாய்ப்பில்லை.   அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராட மகாத்மா உப்பையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியதை வரலாறு நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.

 

     நாடு விடுதலை அடைந்த பின் உப்புத்தொழில் மிகுந்த வளர்ச்சி கண்டு நாம் தன்னிறைவு பெற்றதோடு அல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவு முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்றால் அது மிகையல்ல.   நாட்டில் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது குஜராத் மாநிலமே.   எப்படி

 

தண்டி யாத்திரை மேற்கொண்டு காந்தியடிகள் வெள்ளையனை எதிர்த்தாரோ அவ்வாறே ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்திலும் உப்பு சத்தியாகிரகம் நடத்தப்பட்டது.   தமிழ்நாட்டில் தூத்துக்குடி உப்பு உற்பத்தியில் முதன்மை பெற்று விளங்குகிறது.   ஆனால் குஜராத்தை ஒப்பிடும்போது பெரிய அளவில் கோடிக்கான முதலீட்டுடன் செய்யப்படாமல் இங்கு சிறு சிறு உப்பளங்களாகப் பாத்திகட்டி விவசாயம் செய்யப்படுவதுபோல் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

 

                இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தி ஆண்டுக்கு இரண்டு கோடி டன்களாகும்.   இதில் குஜராத் மாநிலத்தின் பங்கு ஒரு கோடியே ஐம்பது லட்சம் டன்கள்.   ராஜஸ்தான் மாநில உற்பத்தி இருபது லட்சம் டன்.   தமிழ்நாடு மற்றும் ஆந்திரம் சேர்ந்து தனது கடலோரப்பகுதிகளில் உற்பத்தி செய்யும் உப்பின் அளவு முப்பது லட்சம் டன்களாகும்.   அடுத்து தமிழகத்தின் மிகப்பெரிய உப்பு உற்பத்தி கேந்திரமான தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாகும் முறையைக் கவனிப்போம்.

 

     பெரும்பாலும் கடற்கரையிலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் ஆழ்குழாய் அமைத்து நீர் இறைத்து பாத்திகளில் தேக்கி சூரிய ஒளியில் உப்பு படிந்து வாரப்படுகிறது.   முழுக்க முழுக்க இயற்கையை நம்பியே இந்த உப்பு விவசாயம் செய்யப்படுகிறது.   எப்படி அறுவடை நேரத்தில் பெருமழை பெய்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டம் அடைவார்களோ அதுபோன்றே உப்பு விளைந்து வாருவதற்குத் தயார் நிலையில் மழை பெய்தால் உப்பு உற்பத்தியாளர்களும் நஷ்டம் அடைவார்கள்.

 

     தமிழகத்தில் உப்பு உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.   நேரடியாக உப்பளங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் 4௦௦௦௦௦௦0000 பேர் ஆவர்.   பொட்டலம் இடுவது மற்றும் வாகனங்களில் ஏற்றி இறக்கும் தொழிலில் ஈடுபட்டோர் 60000 பேர் ஆவார்கள்.

 

     ஆண்டாண்டுகாலமாக இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உப்பை உணவுக்குப் பயன்படுத்தித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்.   அத்தகைய உப்பைப் பயன்படுத்தியதால் அவர்கள் ஆரோக்கியம் கெட்டுவிட்டதாக எந்த சான்றும் இல்லை.   இந்நிலையில் பொதுமக்களின்

 

ஆரோக்கியத்தில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் வகையில் சில சட்டதிட்டங்களை இயற்றி உப்புத்தொழிலை நசிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.   உறுதியாக ஆரோக்கியக்கேட்டிற்கு வழி வகுக்கும் மதுபான விற்பனை, மெல்ல மெல்ல உயிரைக்குடிக்கும் புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடைசெய்ய மறுக்கும் அரசு உப்புக்கு மட்டும் தரநிர்ணயத்தை ஏற்படுத்தி உபயோகிப்பாளர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விந்தையைக் காண்போம்.

 

     உணவுக்கான உப்பில் அயோடின் கலந்துதான் விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றிப் பல ஆண்டுகளாகி விட்டன.   அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்றுவரை நிலுவையில் உள்ளது.   நீதிபதிகள் இந்தச்சட்டப்பிரிவு செல்லாது என்று தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளபோதிலும் இறுதித்தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை.   இதுகுறித்து அஷோக் டி.ஜெய்சிங்கானி என்ற சத்துணவு ஆராய்ச்சியாளர் கூறுவதைச் சுருக்கமாகக் காண்போம்.

 

                இந்தியாவில் அயோடின் உப்பு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து எயிட்ஸ் நோய் மிதமிஞ்சிய அளவிற்கு அதிகரித்துள்ளது.   அதிக அளவு அயோடின் உட்கொள்வது எயிட்ஸ் நோய்க்குக் காரணமாக் அமைகிறது.   அதன் காரணமாக அகால மரணம் சம்பவிக்கிறது.   அயோடினைப் பரிந்துரை செய்துள்ள சத்துணவு அதிகாரிகள் சைவ உணவு உண்பவர்களைக் கண்டிப்பாக அசைவ உணவு உட்கொள்ளசொல்லி வற்புறுத்தக்கூடும்.   சைவ உணவு மட்டும் உண்பவர்களை உடலுக்குச் சத்து அளிக்கக்கூடியது என்று கூறி  சிறிதளவாவது மாமிசம் உண்ணும்படி வற்புறுத்த முடியுமா?   பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு அவர்கள் அன்றாடம் உண்ணும் உணவிலிருந்தே அவர்களுக்குத் தேவையான அயோடின் சத்து கிடைத்துவிடும்.   அதற்கு அயோடின் கலக்காத சாதாரண உப்பே போதுமானது.   லட்சக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் அயோடின் கலந்த உப்பை உண்ணாமலேயே உயிர் வாழ்ந்திருக்கிறார்கள்.   நாட்டின் மிகக்குறைந்த விகிதாசாரம் உள்ள அயோடின் தேவைப்படும் மக்களுக்காக தேவைப்படாத கோடிக்கணக்கான பிறரையும் கட்டாயப்படுத்தித் திணிப்பது என்ன நியாயம்?   உஷ்ணப் பிரதேசமான நமது நாட்டில் தொடர்ந்து அயோடின் கலந்த உப்பை உண்பது, ஹைப்போதைரோயிடிசம், வயிற்றுப்போக்கு, கூடுதல் வியர்வை சுரத்தல், நீர் வற்றிப்போதல், விரைவாக எடை குறைவது, ஆஸ்த்மா போன்ற மூச்சுத் திணறல், சர்க்கரை நோய்,

 

சிறுநீரகக்கல், தோல்புற்றுநோய் போன்ற பல்வேறு வியாதிகளுக்கும் காரணமாகிவிடும்.

 

     இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ஏன் நமது அரசு விரைந்து முடிக்கத் தயக்கம் காட்டுகிறது என்று விளங்கவில்லை.

 

உப்பில் கலப்படமா?:

     முன்பிருந்த கலப்படத் தடைச் சட்டத்திலும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006 லும் உப்பிற்காகக் குறிப்பிட்ட தரம் இல்லையெனில் அது கலப்படம் செய்யப்பட்டதாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும்.   ஆற்றுமணலை விட விலை குறைந்த பொருள் பருமணி என்று கூறப்படும் கல்லுப்பு அல்லது ஸ்படிக உப்பு.   இதில் கலப்பதற்கு அதன் உற்பத்தியாளரோ அல்லது விற்பனையாளரோ எந்தப்பொருளைத் தேடமுடியும்?   இயற்கையாக விளையும் உப்பில் அரசு நிர்ணயித்த தரம் இல்லையெனில் யாரைக் குற்றம் சொல்வது?   சட்டப்படி உணவுக்கான சாதாரண உப்பில் சோடியம் குளோரைடு என்ற வேதிப்பொருள் 96 விழுக்காடு இருக்கவேண்டும்.   ஆனால் தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பில் பெரும்பாலும் 92 விழுக்காடுக்கு மேல் இருப்பதில்லை.   அதிலும் வடக்கு அளத்தில் ஒரு விகிதமும் தெற்கு அளத்தில் ஒரு விகிதமும் இருப்பதைக் காணலாம்.   இந்த வேறுபாட்டுக்கு அங்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் அடர்த்தியும் பாத்தியில் உள்ள மண்ணின் தன்மையுமே காரணமாகும்.   சோடியம் குளோரைடு 96 விழுக்காட்டுக்குக் குறைவாக உள்ள உப்பை விற்பனை செய்யும் வணிகர்மீது கலப்படம்செய்த கிரிமினல் குற்ற வழக்கு தொடரப்படும்.   ஒரு விவசாயிபோல் இயற்கையை நம்பி உற்பத்திசெய்யும் உப்பைக் கலப்படம் செய்ததாகக் கூறி வழக்குத்தொடர்வது நியாயமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.   சரி. அவ்வாறு 96 விழுக்காடுக்குக் குறைவாக இருந்தால் அதை உட்கொள்ளும் நபர் எவ்வாறு பாதிக்கப்படுவார் என்ற வினா எழுப்பினால் அதற்குப் பதில் கிடையாது.   பின் எதற்காக அவ்வாறு தரம் நிர்ணயிக்கப்பட்டது என்றால் அங்குதான் குஜராத் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய உற்பத்தியாளர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டித் தமிழக உப்பு உற்பத்தியாளர்களைத் தொழிலை விட்டு விரட்டச் செய்யும் திறமை புலனாகும்.    

 

 

சத்துக்குறைவால் மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டால் நெல் விளைவிக்கும் விவசாயிக்கு கூட ஒரு இடத்தில் விளையும் நெல்லில் உள்ள சத்து பிறிதொரு இடத்தில் விளையும் நெல்லில் இல்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.   மண்ணின் தன்மையினால் மாறுபடும் அத்தகைய சத்துக் குறைந்த நெல்லை விளைவித்த விவசாயியை என்ன செய்வது?

 

     இதில் விந்தை என்னவென்றால் தென்கொரியாவிலிருந்து 85 விழுக்காடு சோடியம் குளோரைடு மட்டுமே உள்ள உப்பு வேண்டும் என்று ஆர்டர் வந்தும் நமது நாட்டுச் சட்டப்படி 96 விழுக்காடுக்குக் குறைந்த உப்பு ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற தடையிருப்பதால் நமது ஏற்றுமதி வணிகம் பாதிக்கப்பட்டது.

 

     தூத்துக்குடி பகுதியில் பத்து ஏக்கருக்குக் குறைவான அளம் வைத்து உப்பு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் 50% உள்ளனர்.   அவர்கள் மொத்தம் சுமார் 7000 ஏக்கர் பரப்பில் ஆண்டுக்கு 888300 டன் உற்பத்தி செய்கின்றனர்.   அவர்களால் கண்டிப்பாக 96 விழுக்காடு சோடியம் குளோரைடு உள்ள உப்பை உற்பத்தி செய்ய இயலாது என்று புதுடில்லி உப்புக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர் திரு மைக்கேல் மோத்தா அவர்கள் கூறுகிறார்.

 

என்று தணியும் இந்த உப்புக்கு வந்த சோதனை என்று இறைவன் தான் பதில் கூற வேண்டும்.

 

கே.ராமச்சந்திரன், முன்னாள் பொருளாளர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் லிட்., மதுரை.

ஆலோசகர், தமழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு, சென்னை.

244, கிரேட் காட்டன் ரோடு,

தூத்துக்குடி-628 001

அலைபேசி:98422 37502

Categories: NEWS

Plea to protect salt industry

8,February, 2015 Comments off
 

The Tamil Nadu Foodgrains Merchants Association has appealed to the Food Safety Commissioner, Kumar Jayant, to protect the Tuticorin salt industry by instructing Food Safety and Standards Act officials not to initiate action against salt manufacturers till the standards are revised as per Tamil Nadu’s climatic and environmental conditions.

In a memorandum submitted to the Commissioner, the president of the association, S. P. Jeyapragasam, pointed out that salt producers followed different procedures in Gujarat and Tamil Nadu. In Gujarat, salt was produced directly from seawater whereas producers used seawater pumped from borewells in Tamil Nadu. Sodium chloride content in Gujarat salt was 96 per cent and it was 92 per cent in Tuticorin salt. As the Act specified 96 per cent as sodium chloride content in salt, Food Safety and Standards Act officials initiated action against Tuticorin producers for ‘substandard’ salt. Mr. Jeyapragasam said that around 50,000 families were dependent on the Tuticorin salt industry, which was spread over an area of 25,000 acres.

The association also drew the attention of Mr. Jayant to the difficulties faced in processing coriander. Traditionally, traders fumigated coriander using sulphur to remove insects. As a result of this, sulphur content would be high in coriander immediately after fumigation. But coriander powder was used for cooking only after it was pulverised. As officials did not allow the use of sulphur, the coriander trade in Tamil Nadu and Kerala was affected with the entry of the commodity from Maharashtra and Karnataka. It appealed to the Commissioner to allow fumigation of coriander using sulphur till such time an alternative was found for fumigation.

Categories: NEWS

FDA busts milk adulteration racket in Mira Rd, 2 held

8,February, 2015 Comments off
 

The Thane unit of the Food and Drug Administration (FDA) busted a gang involved in milk adulteration at two places in Mira Road early on Friday morning.

While two people identified as Ramana Papakpoli Shetty and Majgiri Kobal were caught red handed, the FDA team seized 131 litres of adulterated milk.

Acting on a tip-off, a FDA team led by Food Safety Officers Manek Jadhav and Gopal Mahore carried out simultaneous raids at two residential apartments in Nutan Complex and Shanti Nagar area of Mira Road at about 6 a.m. on Friday.

According to FDA officials the accused would buy branded milk packets from distributors. They would then remove about 100 to 200 ml milk from each packet and then refill it with tap water before sealing it using hot wax.

"The drive to flush out the unscrupulous elements from the region will continue, however citizens too should check the seal of milk packets before consuming,” appealed FDA officials.

The duo who are presently in the custody of the Mira Road police have been booked under the regulations of the Food Safety and Standards Act,(FSSA) 2006, and relevant sections of the IPC.

The samples of the adulterated milk has been sent for lab testing.

Categories: NEWS