Archive

Archive for 10,February, 2015

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

10,February, 2015 Comments off

10_02_2015_102_011_001

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார். கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. பள்ளி வளாகத்தில் சமைக்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா நேற்று திடீரென ஆய்வு நடத்தினார்.அதில் சமைக்கப்பட்ட உணவில் கலந்திருக்கும் பருப்பு தரமற்றதாக இருந்ததை கண்டு எச்சரிக்கை செய்தார். ஆய்வின்போது, வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நந்தகுமார், நல்லத்தம்பி,செந்தில்ராஜ்குமார்ஆகியோர் உடனிருந்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

மானாமதுரை கடைகளில் அதிகாரிகள் சோதனை காலாவதியான பொருள்கள் பறிமுதல்

10,February, 2015 1 comment

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்களுடன் இணைந்து திங்கள்கிழமை வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தி காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் அருள்நம்பி தலைமையில் உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவலக ஊழியர்களுடன் இணைந்து மானாமதுரை நகரில் வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர். இதில் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மார்க்கண்டன், மருத்துவ அலுவலர் லெட்சுமிகாந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அபுபக்கர், சுகாதார மேற்பார்வையாளர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன் மற்றும் பணியாளர்களும் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வியாபார நிறுவனங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான குளிர் பானங்கள், உணவுப் பொருள்கள் மற்றும் கலப்பட உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இக்குழுவினர் டெங்கு காய்ச்சல் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளையும் ஆய்வு செய்தனர். உணவகங்கள், பேக்கரிகள், பார்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தொட்டிகள் மற்றும் கொதிகலன்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது கொசுப் புழுக்கள் உள்ள தண்ணீர் தொட்டிகளை அப்புறப்படுத்தி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் இந்த இடங்களில் அபேட் மருந்து தெளிக்கப்பட்டு டெங்கு விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.

Categories: NEWS

லைசென்ஸ் பெற அவகாசம்; வர்த்தகர்கள் நிம்மதி

10,February, 2015 Comments off

திருப்பூர் : உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் லைசென்ஸ் பெறும் காலக்கெடு, மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி, மக்களுக்கான உணவு பண்டங்கள் தரமானதாக இருக்க வேண்டும்; உடல் உபாதை ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பொருளின் பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, நிறுவனத்தின் போன் நம்பர், எடை, தயாரிப்பு முறை, சைவம் அல்லது அசைவம் குறித்த விவரம், எம்.ஆர்.பி., உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய விவரங்களுடன் பொருள் தயாரிப்பவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை, தங்களது கடை மற்றும் பொருட்களுக்கு லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்காமல் பொருட்கள் விற்றால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதிப்பர். லைசென்ஸ் பெறுவதற்கான காலக்கெடு, நடப்பு மாத துவக்கத்தில் நிறைவடைந்தது. வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று காலக்கெடுவை, மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டது. கூடுதல் அவகாசம் அளித்துள்ளதால், வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories: NEWS

Supreme Court dismisses SLP filed by FSSAI on Canola Oil “relabelling”

10,February, 2015 Comments off
 

The Supreme Court had recently dismissed the Special Leave Petition (SLP) filed by the Food Safety & Standards Authority of India (FSSAI) against the interim order of the Bombay High Court on Canola Oil labelling.

The High Court had ruled in favour of Dalmia Continental Pvt. Ltd. (DCPL) by issuing a stay order against FSSAI’s labeling guidelines for Canola Oil and ordered release of DCPL’s Canola Oil consignments blocked at port. 

According to sources privy to the hearing held in January, the judges, Justices Jagdish Singh Khehar and Sharad Arvind Bobde did not even entertain the request of FSSAI to be allowed to withdraw their SLP so that they could continue on final arguments in the Bombay High Court. 

After hearing the matter, the Supreme Court ruled that DCPL was in full compliance with existing laws and that FSSAI had no case for mandatory “relabelling” of Canola Oil as ‘Rapeseed Oil – Low Erucic Acid.’ 

V Giri and Dheeraj Nair appeared for DCPL. The advocates stated that by dismissing the SLP, after hearing the matter at length, the Supreme Court left no recourse for FSSAI to proceed with final arguments on merit in the Bombay High Court. Hence, in appealing an interim order of the Bombay High Court, FSSAI lost the case in totality.

Earlier the Bombay High Court on September 16, had ruled in favour of DCPL and against the FSSAI, by issuing a stay order against FSSAI’s labelling guidelines for Canola Oil and ordering release of all DCPL’s Canola Oil consignments blocked at port.

The writ petition was filed by DCPL in the Bombay High Court against the labelling guidelines issued by FSSAI requiring all Canola Oil to be labelled as ‘Rapeseed Oil – Low Erucic Acid.’ Imported Canola Oil labelled as Canola Oil was blocked at ports by FSSAI if it was not labelled Rapeseed Oil – Low Erucic Acid. 

This latest order of the Supreme Court represents a major victory for the industry which had concertedly resisted “relabelling” of Canola Oil as Rapeseed Oil – Low Erucic Acid, according to DCPL.

Industry take

The requirement to label Canola Oil as ‘Rapeseed Oil – Low Erucic Acid’ is discriminatory since the same labelling requirements are not imposed by FSSAI on other types of oil. In the Standard for Vegetable Oils of the Codex Alimentarius Commission, ‘Rapeseed Oil – Low Erucic Acid’ is the product category and ‘Canola Oil’ is the synonym mentioned in brackets. Several other oils are presented in the same manner in Codex. For example, ‘peanut/groundnut oil’ and ‘corn oil’ are mentioned in brackets alongside their respective product categories ‘Arachis Oil’ and ‘Maize Oil.’ However, both peanut/groundnut oil and corn oil are not labelled and marketed as per these product category names.

Low Erucic Acid Rapeseed Oil has varying definitions the world over. The EU definition requires a maximum of 5% erucic acid in Low Erucic Acid Rapeseed, whereas the limit for Canola Oil is 2%. Therefore, the two oils differ from one another and their names cannot be used interchangeably.

The term ‘Canola’ is widely recognised amongst Indian consumers as one of the healthiest oils in the market. Rapeseed oil, however, is associated in India with its high erucic acid version, which is considered toxic and injurious to health. Canola Oil has been imported into India under this name since 2007 and is also one of the most preferred cooking oils in USA, Canada, Mexico, Australia, Japan, South Korea, China and several other countries. 

This order is the latest in a slew of adverse orders issued by high courts across the country against FSSAI, which has been acting in a rogue, increasingly arbitrary and obstructive manner with regard to food imports, with huge repercussions to consumers, retailers, importers, restaurants, hotels and food service industries. 

Hundreds of containers worth thousands of crores of apples and other fruits, olives, canola oil, beer, wine, spirits, chocolates, fresh meat, seafood, pasta-sauce, mayonnaise, candy, juices, potato chips, spices, soymilk, gluten-free products and gluten, cocoa, compound chocolate and pre-mix for the dairy industry are among the goods blocked at ports due to one or the other objection by FSSAI, according to an industry source.

Categories: NEWS

HRAWI backs FSSAI’s decision to extend deadline for FBO registration

10,February, 2015 Comments off
 

Hotel and Restaurant Association of Western India (HRAWI) on behalf of the hotel industry has welcomed the Food Safety and Standards Authority of India (FSSAI)’s decision to further extend the deadline for obtaining Food Business Operator (FBO)’s license by six months to August 4, 2015. The order has come in the wake of several requests made by the association to the ministry. As per the earlier order all food businesses, from roadside eateries to restaurants, were to comply before February 4, 2015 or face rigorous punishments. The extended deadline is applicable for FBOs seeking conversions and renewals for existing license / registration under repealed order.

Bharat Malkani, president, HRAWI said, “The changes required in obtaining the licenses for FBOs as per the regulations are yet to be fully understood. Awareness on procedures and protocols is still lacking. It is a herculean task in itself and with the sheer number of FBOs the job is doubly cumbersome. Hence, we sought this extension from the government and hope to meet the deadline in August.”

“As an association, representing members of the hotel industry, we will work in the best interests of the industry. We understand and realise the basic premise or the intent of the Food Safety and Standards Act is to ensure international standards of hygiene. On this we are in full concurrence with the Government and extended our co-operation. However, hoteliers will take some more time to be fully compliant. We will take full efforts towards achieving standards that are at par, if not better, with the world,” added Malkani.

Categories: NEWS

Testing and tasting, the way ahead for food safety

10,February, 2015 Comments off
 

Kochi:

Hotels, Malls, Bakers Sign Up With Labs For Quality Checks

Believe it or not, food safety and hygiene are the prime concern of star hotels, popular malls and bakeries.Thanks to a series of raids by the food safety department last year, they are regularly sending samples of water, food and packaged snacks to private labs to ensure quality .

Earlier, labs only used to get weekly and monthly samples of drinking water and the one used in bathrooms. Over the past 12 months, many hotels have signed up with labs to continuously test samples.

“We get all kinds of food including burgers, doughnuts, chips, murukku, appams and several other locally-made products that are sold fresh. Most of the food is locally outsourced and hence the hotels and malls don’t want to take a chance,“ said a quality assurance manager at a private lab.

“Public awareness on hygiene and health has increased. Different associations have lined up initiatives to publicize the standards of different food items. Some stopped artificial colours and flavours, but it hasn’t gone down well with the people,“ said assistant commissioner of food safety intelligence (central region) Beena V K, adding that Food Safety Standards of India (FSSAI) has made it mandatory for companies to provide nutritional facts for packaged foods.

Quality Control analyst Shivadas B Menon termed it a good trend. “Microbiological tests will reveal the level of hygiene in kitchen staff. Since many hotels are manned by migrants, it is important to iron out basic hand wash techniques,“ he said, adding that the government should choose a PPP model to ensure cleanliness.

District food safety officer K Ajith Kumar said that officials are looking at food adulteration and the practice of reusing old oils that may prove toxic for some consumers.“We are yet to conduct any fresh raids this year because of National Games,“ he said.Junior health inspector M M Sakkeer, who is a part of the team that conducts raids, said: “We do not permit toilets in the kitchen. We look at the quality of chicken and meat and its quality .“

The president of Kerala Bakers Association admitted that most bakers have chosen the outsourcing route. “The `vada’ and `ada’ are made at home and we draw a line to ensure quality . Bakers are being trained on what should not be added in food,“ he said.

After being on the receiving end of raids and bad publicity, Kerala Hotels and Restaurants Association (KHRA) has activated its health monitoring forum that organizes talks by food safety officials. “We do check that the lessons taught are being implemented by our members. We point out flaws in sanitation, food preparation and preservation,“ said district president M P Shiju.

Even star hotels are collecting kitchen staff swabs for tests to prevent the spread of infection. Taj Gateway executive chef Jaffer Ali said surprise checks are part of internal audit. “Twice a month, we collect hand and utensil swabs to check microbial presence. Most of the checks are random and all reports go directly to the top management as it is mandatory under ISO certification,“ he said.

Categories: NEWS

NATIONAL GAMES – Squad ensures safe food for athletes

10,February, 2015 Comments off
 

Kochi:

Three squads of the food safety department are monitoring the food being supplied to athletes and officials participating in the National Games.Food safety officials said that they have cleared the Games menu for all days and are collecting samples twice a day from each venue. “We have not received any complaint on the quality so far. But, there have been some complaints regarding taste. It is quiet natural as people are coming from different parts of the country. Every day the menu is fixed,“ said senior food inspector of the mobile vigilance squad in Ernakulam Abdul Majeed T A, adding that all raw ma terials were purchased earlier and random sampling was done to screen items.

There are four members in each squad and officials are available 24 hours a day. “We have been on duty since January 28 and will be there till the Games conclude,“ said Beena V K, assistant commissioner, food safety intelligence, central region.

The squad is also checking the 13 hotels where participants and other officials are accommodated.

“These hotels, as well as two places, where the catering agency prepares food are under our observation. Earlier, we had finished pre-inspection procedures,“ said K Ajith Kumar, assistant food safety commissioner, Ernakulam.

Categories: NEWS

காரமான செங்கல்தூள்?

10,February, 2015 1 comment

சந்தானராஜன் இயக்குனர் கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா

டைகளில் வாங்கும் மிளகாய்ப் பொடியில் செங்கல் பொடி இருப்பது தெரியுமா?  இன்னும் அதிரவைக்கும் பல கலப்படங்களும் மிளகாயில் சேர்க்கப்பட்டு, தினம் தினம் நம் தட்டுகளில் பரிமாறப்படுகின்றன.

மிளகாயை அளவோடு சேர்த்துக்கொண்டால், நல்ல செரிமானத்தைக் கொடுக்கும்.  மிளகாயில் உள்ள ‘கேப்சைசின்’ என்ற வேதிப்பொருள் மூளையைத் தூண்டி, ‘எண்டோர்பின்ஸ்’             (Endorphins)என்னும் வலி நிவாரணியை உருவாக்குகிறது. ஆனால்,  இதை அதிக அளவில் உண்ணும்போது, வியர்வை ஏற்படுதல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத்திணறல் மற்றும் விக்கல் போன்ற பிரச்னைகளைத் தருகிறது. மிளகாய்ப் பொடியில் கலப்படம் செய்வதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

 

எப்படிக் கண்டறிவது?

குழம்பு கொதிக்கும்போது சிவப்பான நிறத்தில் எண்ணெய் மிதந்தால், மிளகாயில் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளன என அர்த்தம்.  ‘சிந்தடிக் டைகள்’ நிறத்துக்காகச் சேர்க்கப்படுவதால், புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. உணவு பாதுகாப்புச் சட்டப்படி, மிளகாய்த் தூள் பாக்கெட்களில் அடைத்தே விற்கப்பட வேண்டும். எனவே, திறந்தபடி விற்கப்படும் மிளகாய்த்தூளை வாங்க வேண்டாம்.

மிளகாய் விலை அதிகம் என்பதால், அரைக்கும்போது மிளகாய்க்காம்பு, இதழ்கள் சேர்த்து அரைக்கப்படுகின்றன. பொதுவாக, 2 சதவிகிதம் தாவர எண்ணெயை மிளகாய்த் தூளில் கலக்க அனுமதி இருக்கிறது. மிளகாய்த் தூளில் இயற்கை வண்ணமும் காரமும் நீடிக்க இது உதவும். ஆனால், தாவர எண்ணெய்க்குப் பதிலாக மினரல் எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்தால், அது புற்றுநோய் செல்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும். தோற்றத்தில் ஒரேமாதிரி இருப்பதால், செங்கல் தூளும் அதிக அளவு மிளகாய்த் தூளில் கலப்படம் செய்யப்படுகிறது. கவனமாக இருங்கள்!

எப்படி வாங்குவது?

நிறுவனத்தின் பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, அக்மார்க் முத்திரை, ISO 9000, லைசென்ஸ் எண் ஆகியவை லேபிளில் அச்சிட்டுள்ளதா எனப் பார்த்து வாங்கவும்.

மிளகாயை வாங்கி காயவைத்து, நாமே அரைத்துப் பயன்படுத்துவது நல்லது.

நிறம், காரம், விளம்பரம் இவற்றைக் கருத்தில்கொண்டு மட்டுமே மிளகாய்த் தூளை வாங்கக் கூடாது.

Categories: NEWS