சத்துணவு பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
சத்துணவு மைய பணியாளர்களுக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுபுற தூய்மை குறித்த பயிற்சி ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஒன்றிய பள்ளிகளில் உள்ள சத்துணவு மைய பணியாளர்களுக்கான பயிற்சி 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு
தினமும் ஒரு குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சியை ஜயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமொழி தலைமை வகித்து தொடக்கிவைத்தார்.
இதில், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் பி. சிவகுமார், ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லமுத்து,
இளநிலை உதவியாளர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று பாத்திரங்களை தூய்மையாக கையாளுதல், சுற்றுபுற தூய்மை, காலாவதியான உணவுப் பொருட்களை
தவிர்த்தல், சமையல் எரிவாயு உருளை மற்றும் அடுப்புகளை பாதுகாப்பாக பயன்படுத்துதல், உணவு விநியோகம் குறித்து பயிற்சியளித்து வருகின்றனர்.
திங்கள்கிழமை நடைபெற்ற பயிற்சியில் 60 சத்துணவு மைய பணியாளர்கள் பங்கேற்று பயிற்சிபெற்றனர்.
பல்லி பிரச்னை தவிர்க்க பூச்சி தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் .