Archive

Archive for May, 2015

Maggi noodles row: Case filed against Nestle, 5 others

31,May, 2015 Comments off
 

 

BARABANKI, MAY 30

A case was lodged on Saturday against Nestle India in a local court here over safety standards of its Maggi product, while actors Amitabh Bachhan, Madhuri Dixit and Preity Zinta have also been separately dragged to the court for promoting the two- minute noodles brand.

While the case against Nestle India and five others was filed by the UP food regulator FSDA ( Food Safety and Drug Administration), a local advocate filed a separate case against the three cine personalities.

"Following FSDA Commissioner P P Singhs permission to file a case against Nestle India, a case has been filed in the court of ACJM (Additional Chief Judicial Magistrate) here," Barabanki Food Safety Officer V K Pandey said. The case has been lodged against the companys Nestle Nagal Kalan Industrial Area unit ( Haroli, Una in HP), Delhibased Nestle India Limited, an Easy Day outlet in Barabanki and the Delhi- based parent firm Easy Day, as also against and their FMCG ( fast moving consumer goods) managers, Mohan Gupta and Shabab Alam, Pandey said.

The FSDA had found monosodium glutamate and lead in excess of the prescribed limit in Maggi samples tested by it.

The FSDA had collected the samples from the Easy Day store in Barabanki and had sent the consignment for testing, which showed that the quantum of lead present was 17 times more than the stipulated limit, which is considered hazardous.

The Union Consumer Affairs Ministry has also asked the Food Safety and Standards Authority of India to look into the matter while Union Minister Ram Vilas Paswan said yesterday that a class action suit can also be initiated in the matter if a complaint is lodged in this regard with the National Consumer Disputes Redressal Commission (NCDRC).

Pantnagar factory under lens

DEHRADUN, 30 MAY

The raging controversy over the alleged high chemicals in Nestle’s Maggi noodles on Saturday reached its Pantnagar facility in Uttarakhand which came under scanner of the state food safety department. The district authorities in Udham Singh Nagar collected samples from Nestle’s Pantnagar factory under the Food Safety and Standards Act 2006.

Categories: NEWS

Despite ban, users still have access to tobacco products

31,May, 2015 Comments off
 

COIMBATORE: Inside the food safety department office are six tonnes of seized tobacco, waiting to be destroyed. Despite repeated raids and seizures by the department since January, chewable tobacco in various forms continues to be sold secretly by small petty and pan shops across the city.

More than two years after the state banned the production, stocking, distribution and sale of tobacco products such as gutkha and pan masala under the Food Safety and Standards of India Act, 2006, the substance continues to be present in godowns and shops across the city. "Large quantities of tobacco are stored in godowns in Variety Hall, Ukkadam, R S Puram and Mettupalayam Road," said a food safety officer in charge of Sukrawarpet. "Once we start raiding godowns in the city, they move the loads overnight to hired godowns in the periphery of the district like Mettupalayam Road, Sulur and Sathy Road," he said.

The godown owners have been issued notices and cases have also been filed against them by the food safety department.

A majority of substance seized from godowns this year has been Hans, a brand of chewable tobacco that claims to be manufactured and based in New Delhi. "The tobacco industry, which is a massive lobby, seems to have split various districts and markets among themselves informally," said the officer. "It is the Hans brand which dominates Coimbatore and Tirupur , this is besides the tobacco concentrates being sold for being used in beedas," said A Karnal, who runs a beeda stall on Government Arts College Road. Hans is a chewable tobacco product which is usually kept below a person’s tongue or between his lips and teeth and suck on the juice it produces. This is believed to give a person an immediate high because the juice contains nicotine which easily mixes with a person’s blood. This substance is available in Rs 5 sachets.

Besides this, there are many tobacco concentrates which are sold by brands like Mangal Singh, Zarda Patta and Amdu which are usually mixed in beedas which are sold in forms called 120 and 420.

Ask any regular beeda user in the city for the place where you get "beedas" which gives you a high, and pat comes the reply — Thomas Street. This street has the dubious distinction of having the most number of beeda stalls which sell tobacco filled pan options. "These beeda stall owners claim that they do not even know that the tobacco filled form of Gulkand is banned," said designated food safety officer, R Kathiravan. "These beedas when consumed for the first few times can make a person feel dizzy, high and even nauseous," he said.

After a spate of raids alerted pan and department stall owners in the city, they have begun offering these products only to their "regular customers". Since there are too many of these small retailers of the banned tobacco products, the food safety department has decided to focus on wholesalers and distributors instead. "Based on these labels stuck on the products and group discussions with other food safety officers we know that these products, especially Hans, are manufactured in New Delhi and its outskirts. The products are then brought to Tamil Nadu by trucks, a small quantity by train and then very small quantities like a couple of boxes by courier," said food safety officer Kathiravan.

"Here the state head distributor, which in Hans’ case is based in Chennai, sends it to district level distributors," said a senior food safety officer. "After tobacco was banned, these distributors use line men to distribute small quantities of products to shops across the city," said Kathiravan. "We have conducted raids by following the movement of the line men closely," he added.

Tobacco products, containing nicotine which acts a strong stimulant, are consumed by people from all economic backgrounds, say doctors. "It is consumed by a lot of shop keepers, construction workers and even small time businessmen," said Dr P Guhan, director, Sri Ramakrishna Institute of Oncology and Research. "These tobacco products contain a lot of impurities besides nicotine, which are carcinogenic," he said.

However, consumption of tobacco has gone down,say officers. "Though we do not have statistics to prove it, tobacco consumption has reduced because we have managed to reduce the availability," said food safety commissioner, Kumar Jayanth. "It is not openly sold anymore or sold only in black at unaffordable rates. That is an indicator," he said.

Categories: NEWS

மளிகை கடைகளில் திடீர் ஆய்வு

31,May, 2015 Comments off

Categories: NEWS

ஜவ்வரிசியில் கலப்படமா? பனமரத்துப்பட்டி பகுதி சேகோ மில்களில் நான்கு துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு

31,May, 2015 Comments off

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், ஜவ்வரிசியில் மக்காச்சோளம் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்படுகிறதா என, சேகோ மில்களில், உணவு பாதுகாப்பு துறை, வணிகவரித்துறை உள்ளிட்ட நான்கு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவுபடி, ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை தடுக்க, உணவு பாதுகாப்புதுறை, வணிகவரித்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், சேகோ சர்வ் ஆகிய துறை நான்கு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா உள்ளிட்ட நான்கு துறை அதிகாரிகள் அடங்கிய குழு, பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், சேகோ மில்களில் ஆய்வு நடத்தினர். பனமரத்துப்பட்டி, சிங்காரதோப்பு, மல்லூர், பொய்மான்கரடு உள்ளிட்ட இடங்களில் சேகோ மில்களில், ஜவ்வரிசி தயாரிக்க மக்காச்சோளம் மாவு பயன்படுத்தப்படுகிறதா, ஜவ்வரிசியை வெண்மையாக மாற்ற கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறதா எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சேகோ கழிவான அழுக்குமாவு, ஈரமாவு ஆகியவை கலப்படம் செய்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறதா, அரசு அனுமதி பெறாமல், ஜவ்வரிசி தயார் செய்து, விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சேகோ மில் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
மரவள்ளி கிழங்கு தோல் உரித்து, அரைக்க வேண்டும். ஆனால், பல மில்களில் தோல் உரிக்காமல் அரைக்கப்படுகிறது. சில மில்களில் ஜவ்வரிசியில், அழுக்கு மாவு, ஈரமாவு மக்காச்சோளம் கலந்து தயார் செய்கின்றனர்.
கலப்படம் செய்த ஜவ்வரிசியை விற்பனை செய்ய, சேலம் சேகோசர்வ் கொண்டு வராமல், வெளிமார்க்கெட்டில் விற்று விடுகின்றனர். இதனால், அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
தற்போது, புது வகையான மாவு ஒன்றை, ஜவ்வரிசியில் கலப்படம் செய்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் உணவு கழிவு மாவு கிலோ, ஆறு ரூபாய்க்கு கிடைக்கிறது. குறைந்த விலைக்கு கிடைக்கும் மாவை வாங்கி ஜவ்வரிசியில் கலப்படம் செய்கின்றனர். ஜவ்வரிசியை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். சேகோசர்வ் மூலம் விற்பனை செய்தால், ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Categories: NEWS

பொதுமக்கள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் பால் வாங்கவேண்டும் உணவு மற்றும் மருந்துத்துறை வேண்டுகோள்

31,May, 2015 Comments off

மும்பை,

அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் இருந்து பால் வாங்குமாறு பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருந்துத்துறை வேண்டுகோள் விடுத்து உள்ளது.

கலப்பட பால் மராட்டியத்தில் பால் கலப்படத்தை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், உணவு மற்றும் மருந்து துறையினர் 16 குழுக்களாக பிரிந்து மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குழுவிற்கு 4 அல்லது 5 உணவுப்பொருள் ஆய்வாளர்கள் இடம் பெற்று உள்ளனர். மும்பையில் மட்டும் கலப்பட பால் விற்பனையை தடுக்க 3 குழுவினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குழுவினர் மும்பையில் மலாடு குடிசைப்பகுதி மற்றும் ஜெடாநகரில் நடத்திய சோதனையில் 935 லிட்டர் கலப்பட பாலை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக பாண்டு வித்யா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேண்டுகோள் இதேப்போல் தானே, சோலாப்பூர், சாங்கிலி, சதாரா ஆகிய 30–க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து பால் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் சாங்கிலி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டுருந்த 1,879 கிலோ பால் கீரிமை கைப்பற்றி அழித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் இருந்து மட்டும் பால் வாங்க வேண்டும். அல்லது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணைய உரிமம் அல்லது பதிவு செய்தவர்களிடம் மட்டுமே பால் வாங்கவேண்டும் என உணவு மற்றும் மருந்துத்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

மேலும் பால் கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் மருந்துத்துறை மாநில கமிஷனர் ஹர்சதீப் காம்ளே கூறினார்.

Categories: NEWS

‘மேகி நூடுல்ஸ்’ விவகாரம்: நடிகர் அமிதாப்பச்சன் மீது உத்தரபிரதேச கோர்ட்டில் வழக்கு நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா மீதும் நடவடிக்கை

31,May, 2015 Comments off

லக்னோ,

‘நெஸ்லே’ இந்தியா நிறுவன தயாரிப்பான ‘மேகி நூடுல்சில்’ அளவுக்கு அதிகமான ரசாயனம் கலந்திருப்பதை உத்தரபிரதேச உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யுமாறு இந்த அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

மேலும் இந்த நூடுல்ஸ் தொடர்பான விளம்பரங்களில் நடித்ததற்காக இந்தி நடிகை மாதுரி தீட்சித்துக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் மேகி நூடுல்சை ஆதரித்து விளம்பரங்களில் நடித்ததற்காக இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது உத்தரபிரதேச வக்கீல் சந்தோஷ் சிங் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். பாரபங்கி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு சத்யதேவ் குப்தா முன்னிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த 3 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 109, 272, 273 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் போலி உணவு பொருட்கள் தொடர்பான 272–வது பிரிவில் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: NEWS

புகைத்தலை கைவிடுங்கள்…

31,May, 2015 Comments off

புகையிலையின் பயன்பாடு மற்றும் புகைத்தலின் பாதிப்புகள் இந்தியாவில்,சிகரெட், சுருட்டு, பீடி, சிம்லி எனப் பல வகைகளில் புகையிலை புகைக்கப்படுகிறது.பான், வெற்றிலையுடன் சேர்த்து புகையிலை சேர்த்து மெல்லப்படுகிறது.இது தவிர, குட்கான, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களில் புகையிலை பயன்படுத்தப்படுகிறது.

உலக அளவில் தவிர்கக்கூடிய மரணங்கள் நிகழ்வதற்குப் புகையிலை முன்னணி காரணமாக இருக்கிறது.ஒரு சிகரெட் புகைக்கும்போது, வாழ்வில் தோராயமாக 11 நிமிடங்களை இழக்கின்றனர்.ஒவ்வொரு ஆறு நொடிக்கும் ஒருவர், புகையிலை தொடர்பான பிரச்னை காரணமாக உயிரிழக்கிறார்.புகைப் பழக்கம் இல்லாதவர்களைக் காட்டிலும், புகைப்பவர்களின்  இறப்பு விகிதம் 60- 80 சதவிகிதம் அதிகம்.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இந்தியர்கள் புகையிலை காரணமாக உயிரிழக்கின்றனர். பீடி, சிகரெட் என, எந்த ஒரு புகையிலைப் பழக்கம் உள்ளவர்களும், பழக்கம் இல்லாதவர்களைக் காட்டிலும் 6-10 ஆண்டு முன்னதாகவே உயிரிழக்கின்றனர்.
நிகோடின் புகையிலையில் நிகோடின் என்ற ரசாயனம் உள்ளது. இது போதைக்கு அடிமைப்படுத்தும் தன்மை கொண்டதும், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதுமாகும். சிகரெட் புகைக்கும்போது, அதில் இருந்து வெளிப்படும் நிகோடினை, நம்முடைய நுரையீரல்கள் மிக வேகமாக ஈர்த்துக்கொள்ளும். அது மூளையை மிக வேகமாக 8 விநாடிகளுக்குள் சென்று சேரும்.

நிகோடின் மூளையைச் சென்று அடைந்ததும், அங்கு சில ரசாயனங்களைச் சுரக்கத் தூண்டுகிறது. உடன் மூளையும் அதைச் செய்கிறது. இதனால், மிகவும் அருமையாக இருப்பது போன்ற மனநிலை ஏற்படுகிறது. இந்தச் செயல்பாடானது, நிகோடின் அளவு மூளையில் குறையத் தொடங்கியதுமே குறைந்துவிடும். இதனால், உடனடியாக அடுத்த சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். மூளை எப்போதும், ரம்யமான அல்லது அருமையான மனநிலையைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக, புகைத்தல் பழக்கத்தை ஏற்கிறது.

புகைத்தலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

உடல் முழுவதும் பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படும்.

மூளை: பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

கண்கள்: ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, கண்களில் ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுத்துகிறது. இதனால்,  பார்வை இழப்பு ஏற்படும்.

வாய்: ஈறுகள் நிறம் மாறும். சுவை மற்றும் வாசனை நுகரும்தன்மை குறையும்.

தோல்: சுருக்கங்கள், சருமம் உலருதல், நிறம் மாறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

முடி: முடியின் நிறம் மாறுதல் மற்றும் முடி உதிர்தல்.

கைகள்: சிகரெட் பிடிக்க பயன்படும் விரல்கள், நகங்களின் நிறம் மாறும்.

நுரையீரல்: நுரையீரல் வளர்ச்சி குறையும், சுவாசப் பாதை குறுக ஆரம்பிக்கும். நுரையீரல் புற்றுநோய் ஏற்பட
மிக முக்கிய அல்லது முன்னணி காரணம் சிகரெட் புகைத்தல்தான்.

இதயம்: ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு விகிதம் அதிகரிக்கும். ரத்தக் குழாய்களின் தன்மை கடினமாகும்.
எலும்பு: எலும்பு அடர்த்திக் குறைவு ஏற்படும்.

புகைத்தல் பழக்கத்தை நிறுத்த வழிகள்…

இன்றைய காலக்கட்டத்தில் புகையிலை புகைப்பதை நிறுத்த ஏராளமான வழிகளும் வாய்ப்புகளும் உள்ளன. இவை, அதிகப்படியான பக்கவிளைவுகள் இன்றி சிகரெட்  பழக்கத்தை நிறுத்தவல்லன என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில், நிகோடின் ரீப்பிளேஸ்மென்ட் தெரப்பி (என்.ஆர்.டி) மற்றும் நான்-நிகோடின் டிரக் தெரப்பியும் அடங்கும்.

நிகோடின் ரீப்பிளேஸ்மென்ட் தெரப்பி (என்.ஆர்.டி)

என்.ஆர்.டி-யில் நிகோடின் இருக்கும். ஆனால், சிகரெட்டில் உள்ள அளவுக்கு  இல்லாமல் மிகக்சிறிய அளவில் இருக்கும். என்.ஆர்.டி- மிகக் குறைந்த அளவிலான நிகோடினை அளிக்கிறது. இது, நிகோடின் அளவு குறைவாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக நிகோடினே இல்லை என்ற நிலையை உடல் அடைய பெரிதும் உதவியாக இருக்கும். இதன்மூலம், ஒரு கட்டத்தில் புகைப்பதை முற்றிலுமாக நிறுத்த முடியும். என்.ஆர்.டி-யானது கம்ஸ், பேட்ச்சஸ், இனிப்பு, மூக்கில் நுகரும் ஸ்பிரே. மாத்திரை, இன்ஹேலர் எனப் பல வடிவங்களில் கிடைக்கிறது. இவைகளில், நிகோடின் கம் அனைவராலும் விரும்பப்படும் வடிவம் ஆகும்.

நிகோடின் கம்

1984-ம் ஆண்டு உலகச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. நிகோடின் கம் தற்போது இந்தியாவில் 2 மி.கி மற்றும் 4 மி.கி அளவுகளில் கிடைக்கிறது. சிகரெட் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போது இதை எடுத்துக்கொண்டால், அந்த உணர்வு மறையும். இதன் வெற்றி விகிதம் 50 – 70 சதவிகிதம்.

2 மி.கி கம்மானது, ஒரு நாளைக்கு 20 அல்லது அதற்கு கீழ் புகையிலை புகைப்பவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. 4 மி.கி ஒரு நாளைக்கு 20  மேல் புகைப்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 4 மி.கி நிகோடின் கம் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நிக்கோடின் இல்லா  மருந்து தெரப்பிஇதில், புப்ரோபியன்  (Bupropion) மற்றும் வாரெனிக்லைன் (Varenicline)  என்ற அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் சிகரெட் புகைப்பதை நிறுத்த புகைப்பவருக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
எப்படிக் கைவிடுவது?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் செய்யும் மிக நல்ல காரியம், புகைப்பதை கைவிடுவதுதான். ஆனால், இதற்கு மிக அதிக அளவில் மன உறுதி தேவைவப்படும். இதற்கு புகைப்பவரும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இணைந்து சரியான பாதையில் பயணிப்பது அவசியம். புகைப்பதைக் கைவிட விரும்புகிறவர்கள், ஒரு வல்லுனரின் ஆலோசனைப் பெற்று அதன்படி செய்யலாம்.

புகைப்பதை நிறுத்தும்போது கவனத்தில்கொள்ள வேண்டியவை:

மன உறுதியுடன் இருக்க வேண்டும். என்னால் புகைப்பதை நிறுத்த முடியும் என்று மனப்பூர்வமாக நம்ப வேண்டும்.

ஏன் கைவிட வேண்டும் என்று முதலில் பட்டியல் தயாரித்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு… நல்ல ஆரோக்கியம், நமக்கு நெருக்கமானவர்களின் நலன் என்று… இதைத் தினமும் படித்துப் பார்க்க வேண்டும். இது, உங்களின் சிகரெட் பழக்கத்தைக் கைவிட தூண்டுதலாக இருக்கும்.

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என அனைவரிடமும் உங்கள் திட்டத்தைப் பகிர்ந்துகொண்டு, அனைவரது ஒத்துழைப்பையும் பெறுங்கள்… உங்கள் முயற்சி வெற்றிபெற உங்களை ஊக்குவிக்க அவர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் மருத்துவரிடம் இதுபற்றி பேசுங்கள். அவரது ஆதரவையும் வழிகாட்டுதலையும் பெற்று, மிகவும் ஆரோக்கியமான பாதுகாப்பான முறையில் புகைத்தலை கைவிடுங்கள்.

உங்கள் வீடு, வாகனம், வேலை செய்யும் இடம் என எல்லா இடத்தில் இருந்தும் சிகரெட்டைத் தூக்கிஎறியுங்கள். சிகரெட் புகைக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்திடுங்கள்.

என்.ஆர்.டி உதவியை நாடுங்கள். சிகரெட்டுக்கு மாற்றாக நிகோடின் ரீப்பிளேஸ்மென்ட் தெரப்பி சுயிங்கம்மைப் பயன்படுத்துங்கள்.

சிகரெட் பிடிக்காததால் ஏற்படக்கூடிய எரிச்சல், சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல், ஓய்வீன்மை போன்றவற்றை என்.ஆர்.டி மூலம் தவிர்த்திடுங்கள். இந்த அறிகுறிகள் சிகரெட் நிறுத்திய முதல் இரண்டு வாரங்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக இருங்கள்.

ஏன் நிறுத்த வேண்டும்?

புகைப்பதை நிறுத்துவதன் மூலம் உங்கள் மற்றும் உங்களுக்கு பிரியமானவர்களின் ஆரோக்கியத்தைக் காக்கறீர்கள். புகைப்பதை நிறுத்திய அடுத்த நிமிடத்தில் இருந்தே மாற்றங்கள் நிகழத் தொடங்கிவிடுகின்றன.

உடனடியாக: உங்களைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் உங்களுக்கும் மற்றவர்களுக்கு ஆபத்தில்லாததாக மாறுகிறது.

20 நிமிடங்ககளில்: ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு விகிதம் இயல்பு நிலைலக்குத் திரும்புகிறது. உங்கள் கைகள் மற்றும் பாதங்களின் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

8 மணி நேரத்தில்: ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு இயல்பு நிலைக்குத் திரும்புகிறது48 மணி நேரத்தில்: நரம்புகளின் முடிவு பகுதிகள் மறுவளர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றன. இதனால், சுவைத்தல் மற்றும் வாசனை நுகருதல் தன்மை மீண்டும் அதிகரிக்கிறது.

2-12 வாரங்களில்: சுவாம் மற்றும் ரத்த ஓட்டம் சீராகிறது. நடைப் பயிற்சி எளிமையாகிறது.

1-9 மாதங்களில்: இருமல், சைனஸ் பிரச்னைகள், சுவாசித்தலில் ஏற்பட்ட சிரமம் போன்றவை குறைய ஆரம்பிக்கின்றன.

1 ஆண்டில்: புகைப்பவர்களைக் காட்டிலும் உங்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பாதியாகக் குறைகிறது.

5 ஆண்டுகளில்: பக்கவாதம், வாய், தொண்டை, உணவுக் குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு, புகைக்காதவர்களுக்கு உள்ள நிலையை அடைகிறது.

10 ஆண்டுகளில்: புகைபழக்கமே இல்லாதவர்களுக்கு இணையாக வாழ்நாள் நீட்டிக்ககப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு புகைப்பவர்களைக் காட்டிலும் பாதியாகக் குறைகிறது. உடலில் ஏற்கனவே இருந்த புற்றுநோய் தோற்றுவிக்கும் செல்கள் அகற்றப்படுகின்றன.

வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்… சிகரெட்டை அல்ல!!

Categories: NEWS

புகைப்பதை நிறுத்தினால்…

31,May, 2015 Comments off

Stop-Smoking

Categories: NEWS

NO TOBACCO DAY–31.5.2015

31,May, 2015 Comments off

Categories: NEWS