Archive

Archive for 2,June, 2015

Draft Food Safety and Standards (Food Recall Procedure) Regulations, 2015. (Uploaded on: 29-05-2015)

2,June, 2015 Comments off

The objections or suggestions, if any, may be addressed as per the attached format to the Chief Executive Officer, Food Safety and Standards Authority of India, 03rd Floor, Food and Drug Administration Bhawan, Kotla road, New Delhi. 110002. The objections or suggestions may also be mailed to regulation@fssai.gov.in on or before 01.08.2015.

Categories: DRAFT

ஊக்க தொகை வழங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரி

2,June, 2015 Comments off

unnamed

Categories: Cuddalore, DISTRICT-NEWS

உடலுக்கு கேடு விளைவிக்கும் புகையிலை பழக்கத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி வேண்டுகோள்

2,June, 2015 Comments off

கடலூர்,

புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் எம்.பி.ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

உடலுக்கு கேடு விளைவிக்கும் பீடி, சிகரெட் ஆகியவற்றை புகைப்பது, புகையிலை மற்றும் பாக்குகள் போடும் பழக்கத்துக்கு இளைஞர்கள் ஆளாகி வருவது வேதனையாக இருக்கிறது. பீடி, சிகரெட் போன்ற புகைபிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் சம்பந்தமான புற்று நோயும், புகையிலை மற்றும் பாக்குகளை சுவைப்பதால் வயிறு மற்றும் வாய் சம்பந்தமான புற்றுநோய்களும் ஏற்படுகிறது. எனவே இளைஞர்கள் தங்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு புகைபிடித்தல், புகையிலை மற்றும் பாக்குகளை போடும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை மற்றும் பாக்குகளை விற்பனை செய்ய அரசு தடை விதித்தது. இந்த தடை மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனவே தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பாக்குகளை யாரும் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த இறைச்சி கடைக்கு "சீல்’

2,June, 2015 Comments off

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டினத்தில், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த ஆட்டிறைச்சிக் கடைக்கு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர்.
கலெக்டர் ராஜேஸ் உத்தரவின்படி, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் துளசிராமன் ஆகியோர், காவேரிப்பட்டினம் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த ஆடு அடிக்கும் தொட்டி மற்றும் இறைச்சிக் கடைகளை நேற்று திடீரென ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள இறைச்சிக்கடையில், சுகாதாரமற்ற முறையில் திறந்த வெளியில் ஆட்டினை அறுத்துக் கொண்டிருந்தனர். அறுத்த ஆடு மற்றும் அந்தக்கடையில் ஆட்டினை அறுத்து சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் தொங்க விட பயன்படுத்தப்படும் கொக்கிகள் அகற்றப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
டவுன் பஞ்சாயத்து ஊழியர்களை கொண்டு அந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அங்கு கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டும் அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்தத் தெருவில் ஆய்வு செய்தபோது, அங்கு இயங்கி வந்த இறைச்சிக்கடைகளின் உரிமையாளர்கள் அவர்களாகவே கடையை மூடி அடைத்து விட்டனர். சுற்றியுள்ள உபகரணங்களையும் அவர்களாகவே அகற்றிக்கொண்டனர்.
சுகாதாரமற்ற முறையில், திறந்த வெளியில் ஆடுகளை அறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் டவுன் பஞ்சாயத்தில் இதற்காக கட்டப்பட்டுள்ள நவீன இறைச்சி வெட்டும் மற்றும் விற்பனை செய்யும் இடத்திற்கு செல்லுமாறு, மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி அறிவுறுத்தினார்.

Categories: Dharmapuri, DISTRICT-NEWS