Archive

Archive for 5,June, 2015

நுாடுல்ஸ் விற்பனைக்கு, தமிழக அரசு தடை

5,June, 2015 2 comments

தமிழகத்தில், ‘மேகி’ உட்பட, நான்கு நிறுவனங்களின், நுாடுல்ஸ் விற்பனைக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது; கையிருப்பு சரக்குகளை உடனே திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.

சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும், உணவுப் பொருளில், கிட்டத்தட்ட, 30 ஆண்டு காலமாய் இடம் பிடித்துள்ளது, ‘நெஸ்லே’ நிறுவன தயாரிப்பான, ‘மேகி’ நுாடுல்ஸ். இதனால், இதன் விற்பனை படு வேகமாக அதிகரித்தது .இந்நிலையில், ‘மேகி’ நுாடுல்சில் உள்ள காரீயத்தின் அளவு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட, அதிகம் உள்ளது, சில மாநிலங்களில் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும், நுாடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து, சோதனை செய்து, அவை உணவு மற்றும் தர நிர்ணய சட்டத்தில், வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா என கண்டறியும்படி, உணவு பாதுகாப்பு துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தமிழகம் முழுவதும், 65 நுாடுல்ஸ் உணவு மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பினர். சென்னையில் எடுக்கப்பட்ட, 17 உணவு மாதிரிகளில், ஏழு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன.ஏழு மாதிரிகள் முடிவில், ஆறு மாதிரிகளில், காரீயத்தின் அளவு, உணவு பாதுகாப்பு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, 10 லட்சத்திற்கு, 2.5 பி.பி.எம்., – பார்ட்டிக்கிள் பெர் மில்லியன் – என்ற அளவை விட, அதிகம் இருப்பது தெரிய வந்தது.’நெஸ்லே’ நிறுவனத்தின், ‘மேகி நுாடுல்ஸ், வாய் வாய் எக்ஸ்பிரஸ் நுாடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா நுாடுல்ஸ்’ ஆகியவற்றில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, காரீயத்தின் அளவு, அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட நுாடுல்ஸ் உற்பத்தி நிறுவனங்களின் மீது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006, பிரிவு, 30-2-ஏ கீழ், இந்நிறுவனங்கள், நுாடுல்ஸ் உணவுப் பொருட்களை, தமிழகத்தில் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், முதல்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மேலும், நுாடுல்ஸ் உணவுப் பொருட்களை, விற்பனையில் இருந்து, உடனடியாக திரும்பப் பெறவும், சம்பந்தப்பட்ட நூடுல்ஸ் உற்பத்தி நிறுவனங்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

வணிகர்கள் வரவேற்பு:

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:‘மேகி நுாடுல்ஸ்’ சாப்பிட ஏற்றதல்ல என, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதால், தமிழக அரசு அவற்றை விற்க, தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. மக்கள், 30 ஆண்டுகளாக விளம்பரங்களை நம்பி, இவற்றை வாங்கி உள்ளனர்.இவற்றில் நடித்த நடிகர், நடிகையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின், அனைத்து உணவுப் பொருட்களையும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்வதில்லை.முறையான ஆய்வுக்கு உட்படுத்தினால், பெரும்பாலான நிறுவன தயாரிப்புகள் தடை செய்யும் அளவில் தான் இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேகி நுாடுல்சை, தமிழக அரசு தடை செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோல், லேஸ், குர்குரே, பிங்கோ, சீட்டோஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தடை செய்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆய்வு:

நாடு முழுவதும் மேகி மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க, மத்தியசுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதையடுத்து, சென்னையிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ‘மேகி நுாடுல்ஸ்’ மாதிரிகளை சேகரித்தனர். அபிராமபுரம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம் உள்ளிட்டபகுதிகளில் உள்ள தனியார் கடைகளில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ‘மேகி நுாடுல்ஸ்’ மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

நடிகையருக்கு ‘சம்மன்’ :

மேகி நுாடுல்ஸ்’சை, தடை செய்ய கோரி தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மணவாளன், மதுரை நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.நீதிபதி ஜெ.ஜெயராமன் மற்றும் உறுப்பினர் எம்.முருகேசன் ஆகியோர் அளித்த தீர்ப்பில், ‘மேகி விளம்பர துாதர்களாக நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர், ஜூலை 6ம் தேதி, ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

நுாடுல்ஸ் தயாரிப்பில் கலக்கப்படும் பொருட்கள்:

கோதுமை மாவு, வெங்காயத் துாள், சாதா உப்பு, சுவை கூட்டும் உப்பான மோனோசோடியம் க்ளூட்டாமேட், நுாடுல்சில் பூரிப்பை ஏற்படுத்தக் கூடிய ரசாயனம் ஆகியவை. இது தவிர, காரீயம் தனியாகக் கலக்கப்படுவதில்லை. ஆனால், வெளிக் காரணிகள், காரீயத்தை துகள் வடிவில், நுாடுல்சில் சேர்த்து விடக் கூடும் என, மும்பை இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவன அதிகாரி உதய் அன்னபுரே கூறுகிறார்.அவர் கூறுகையில், ”ஆலைகளின் காரீய கழிவுகள், மோட்டார் வாகனப் புகை ஆகியவை, நுாடுல்ஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் கலந்திருக்கலாம். நுாடுல்ஸ்சை பொட்டலம் கட்டப் பயன்படுத்தப்படும் உலோகக் காகிதங்களிலும், காரீயம் படர்ந்திருந்து, அவை நுாடுல்சுடன் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. நுாடுல்சுக்குப் பயன்படுத்தப்படும் மசாலா பொடியில் கலக்கப்படும் மிளகாய், வெட்ட வெளியில் விளையும்போது, காரீயத் துகள்கள் அதன் மீது படர்ந்து, அது அப்படியே அரைபடும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கலாம்,” என்கிறார்.”எதுவாக இருந்தாலும், இவ்வளவு ஆண்டு காலமாய், விழிப்புணர்வு இல்லாமல் இருந்த, தயாரிப்பாளர்களும், நுகர்வோரும், இந்த நேரத்தில் விழிப்படைந்தது, அனைத்து தரப்பினருக்கும் நல்லதே,” என்கின்றனர் உணவு வல்லுனர்கள்.

நடிகையருக்கு ‘சம்மன்’ :

மேகி நுாடுல்ஸ்’சை, தடை செய்ய கோரி தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மணவாளன், மதுரை நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.நீதிபதி ஜெ.ஜெயராமன் மற்றும் உறுப்பினர் எம்.முருகேசன் ஆகியோர் அளித்த தீர்ப்பில், ‘மேகி விளம்பர துாதர்களாக நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர், ஜூலை 6ம் தேதி, ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

"

நுாடுல்ஸ் தயாரிப்பில் கலக்கப்படும் பொருட்கள்:

கோதுமை மாவு, வெங்காயத் துாள், சாதா உப்பு, சுவை கூட்டும் உப்பான மோனோசோடியம் க்ளூட்டாமேட், நுாடுல்சில் பூரிப்பை ஏற்படுத்தக் கூடிய ரசாயனம் ஆகியவை. இது தவிர, காரீயம் தனியாகக் கலக்கப்படுவதில்லை. ஆனால், வெளிக் காரணிகள், காரீயத்தை துகள் வடிவில், நுாடுல்சில் சேர்த்து விடக் கூடும் என, மும்பை இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவன அதிகாரி உதய் அன்னபுரே கூறுகிறார்.அவர் கூறுகையில், ”ஆலைகளின் காரீய கழிவுகள், மோட்டார் வாகனப் புகை ஆகியவை, நுாடுல்ஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் கலந்திருக்கலாம். நுாடுல்ஸ்சை பொட்டலம் கட்டப் பயன்படுத்தப்படும் உலோகக் காகிதங்களிலும், காரீயம் படர்ந்திருந்து, அவை நுாடுல்சுடன் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. நுாடுல்சுக்குப் பயன்படுத்தப்படும் மசாலா பொடியில் கலக்கப்படும் மிளகாய், வெட்ட வெளியில் விளையும்போது, காரீயத் துகள்கள் அதன் மீது படர்ந்து, அது அப்படியே அரைபடும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கலாம்,” என்கிறார்.”எதுவாக இருந்தாலும், இவ்வளவு ஆண்டு காலமாய், விழிப்புணர்வு இல்லாமல் இருந்த, தயாரிப்பாளர்களும், நுகர்வோரும், இந்த நேரத்தில் விழிப்படைந்தது, அனைத்து தரப்பினருக்கும் நல்லதே,” என்கின்றனர் உணவு வல்லுனர்கள்.

Categories: NEWS

TAMILNADU GOVT–BAN ORDER–4 NOODLES PRODUCTS

5,June, 2015 Comments off
Categories: GO&NOTIFICATION

மேகி நூடுல்ஸ் மூடுவிழா: நடத்திக் காட்டிய நேர்மையான அதிகாரி பாண்டே!

5,June, 2015 Comments off

லக்னோ: இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை கோரி சட்டப் போராட்டம் நடத்தி வென்று காட்டியுள்ளார் ஒரு நேர்மையான  அதிகாரி. இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

அவர் பெயர் வி.கே.பாண்டே. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேந்தவர்.அம்மாநிலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிவரும் வி.கே.பாண்டே,  மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். 

மேகி நூடுல்ஸ் இன்று நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளதால் நெஸ்லே நிறுவனம் முடங்கிக்  கிடக்கிறது.

பல லட்சம் குழந்தைகளின் உடல் நலனோடு விளையாடியதால் தற்போது அதற்கான விளைவை அனுபவித்து வருகிறது.

ஆரோக்கிய கேடு விளைவித்த  மேகி நூடுல்ஸின் அபாயகரமான முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பெருமை வி.கே.பாண்டே என்பவரையே போய்ச் சேரும். டெல்லியில் மேகி முழுமையாகத்  தடை செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு இந்தத் தடை தொடரும். இதே போல கேரளம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை தீ வைத்து எரித்தும் குப்பையில் கொட்டியும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.  மாநிலங்களில் நெஸ்லே இந்தியா நிறுவனமும் மேகியால் பெரும் சட்டச் சிக்கலில் மாட்டியுள்ளது. அநேகமாக இந்தியாவில் மாநிலங்கள் கடந்து ஒரு உணவுப்பொருளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள விகாரம் மேகி நூடுல்ஸ்தான் என்றால் அது உண்மையே.

இந்த விவகாரம் இவ்வளவு பெரிய சிக்கலாக மாற வி.கே.பாண்டேதான் காரணம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று.

வி.கே.பாண்டே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி ஆவார். 40 வயதான பாண்டே, உ.பி. மாநிலம் பாரபங்கியைச் சேர்ந்தவர். இவர்தான் முதல் முறையாக நெஸ்லே மீது வழக்குப் போட்டு நாட்டின் கவனத்தை ஈர்த்தவர்.

சட்டப் போராட்டம் இவருக்கு ஒன்றும் புதியதில்லை. ஏன் எனில் பாண்டே, இதற்கு முன்பு வட இந்தியாவைக் கலங்கடித்த பிரிட்டானியா கேக், வாஹித் பிரியாணி ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்குப் போட்டு திணறடித்தவர். இவர் போட்ட வழக்கால், தனது  விளம்பரத்தில் இது அசைவ கேக் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிலைக்கு பிரிட்டானியா தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்பு இந்த வாசகத்தை அது கண்ணுக்குத் தெரியாத பிரவுன் நிறத்தில்  போட்டு வந்தது. ஆனால் பாண்டே நடத்திய சட்ட போரட்டத்தால்  சிவப்பு நிறத்தில் போட ஆரம்பித்தது.

அதே போல லக்னோவைச் சேர்ந்த பிரபல பிரியாணி நிறுவனமான வாஹித் பிரியாணி மீதும் வழக்குப்  போட்டவர் பாண்டே. உத்தரப் பிரதேசத்தில் பிரபலமான வாகித் பிரியாணியை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். பிரியாணி பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அந்த பிரியாணி நிறுவன முதலாளிகளுக்கும் சட்டத்தின் வழியே பாடத்தைக் கற்பித்தார்.வாஹித் பிரியாணியில் சேர்க்கப்படும்   நிறத்தில் சர்ச்சை இருப்பதாக பிரச்னையை கிளப்பினார் பாண்டே. தற்போது பிரியாணி நிறுவனம் கோர்ட்டுக்கு நடையாய் நடந்துகொண்டு இருக்கிறது.விரைவில் இதிலும் வெற்றியே பெறப்போகிறார் பாண்டே.

அடுத்து மேகி நூடுல்ஸ். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதிதான் மேகிக்கு பிரச்னை கிளம்பியது. சில சாம்பிள் பாக்கெட்களை வாங்கி வந்த பாண்டே,  அதை சோதனை செய்தார். பின்னர் அதை மேல் சோதனைக்கு அனுப்பி வைத்தார்.

தயாரிப்பில், நெஸ்லே உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததைக் கண்டுபிடித்தார். கோரக்பூரில் நடந்த சோதனையின்போது அதிக அளவிலான எம்.எஸ்.ஜி. கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நெஸ்லே இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாண்டே. ஆனால் இந்த நோட்டீஸை எதிர்த்து அப்பீல் செய்தது நெஸ்லே. ஆனாலும் ஓய்ந்துவிடாமல் பாண்டே, மீண்டும் ஒரு நோட்டீஸ் விட்டார். இதனால்  அதிர்ந்தது நெஸ்லே நிறுவனம்.

அதனையடுத்து கொல்கத்தா ஆய்வகத்தில் சோதனை செய்ய அது முன்வந்தது. இதற்காக  1000 ரூபாய் கட்டணத்தையும் கட்டியது. கொல்கத்தா ஆய்வகத்திலும் மேகியின் ரகசியம்  உடைந்தது. மேலும் இந்த சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி சிக்கல் கடுமையானது.

இதன் பிறகுதான் உ.பி. அரசு மேகிக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியது. அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம்,தமிழ்நாடு என்று மேகி தடை விதிக்கும் மாநிலங்கள் வரிசையாக சேர்ந்து கொண்டிருக்கின்றன. இதனையடுத்து இன்று நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.

Categories: NEWS

மேகி நூடுல்ஸின் 9 வகையையும் திறம்பபெற இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரஆணையம் உத்தரவு

5,June, 2015 Comments off

புதுடெல்லி,
மேகி நூடுல்ஸின் 9 வகையையும் திறம்பபெற இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
சுவிஸ் நாட்டை சேர்ந்த ‘நெஸ்லே’ நிறுவனம் தயாரித்து, இந்தியாவில் விற்பனை செய்யும் மேகி நூடுல்ஸ் துரித உணவுப் பொருளில், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன உப்பு அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைதொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவின்படி, டெல்லி, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், தமிழ்நாடு மற்றும் பீகார் மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிங்கப்பூரிலும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது. மேகி நூடுல்ஸை திரும்பபெற ‘நெஸ்லே’ நிறுவனம் முடிவு செய்தது.
இந்நிலையில் மேகி நூடுல்ஸின் 9 வகையையும் திறம்பபெற இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவில் மேகி நூடுல்ஸின் 9 வகையான உணவுகள் சாப்பிட பாதுகாப்பற்ற உணவுகள், உடனடியாக இவற்றை தயாரிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தயாரிப்பு, ஏற்றுமதி, பங்களிப்பு மற்றும் விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. நெஸ்லே நிறுவனம் மேகி ஓட்ஸ் மசாலா நூடுல்ஸை எந்தஒரு அனுமதியும் இல்லாமல் அறிமுகம் செய்து உள்ளது என்று கூறியுள்ள இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரஆணையம் அதனை உடனடியாக திரும்பபெற உத்தரவிட்டு உள்ளது. தயாரிப்பின் இடர் மற்றும் பாதுகாப்பை மதிப்பீடு செய்யவில்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.
நெஸ்லே மேகி நூடுல்ஸில் சுவை அதிகரிக்கும் எம்.எஸ்.ஜி., எனப்படும் அனினோமோட்டோ உப்பை அதிகமான அளவுசேர்த்து விதிமுறைகளை மீறிஉள்ளது, இதுதொடர்பாக மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

Categories: NEWS

How did the Health Ministry give approval to Maggi in 2011?

5,June, 2015 Comments off
 

Companies have to seek approval from the Food Safety and Standards Authority of India (FSSAI) controlled by the MoHFW before manufacture and sale of any food product. Of 11,000 food brands that seek approval under the FSSAI regulations, which were introduced in 2011, only 50% have got clearance from the central authority, said sources in the health ministry.

As the row over Maggi noodles deepens, it has come to light that Nestle IndiaLimited had received approval from the Ministry of Health and Family Welfare (MoHFW) to manufacture the product, less than two years ago. Eyebrows are now being raised on how packaged food items are being given safety approvals by nodal agencies.

Companies have to seek approval from the Food Safety and Standards Authority of India (FSSAI) controlled by the MoHFW before manufacture and sale of any food product. Of 11,000 food brands that seek approval under the FSSAI regulations, which were introduced in 2011, only 50% have got clearance from the central authority, said sources in the health ministry.

Nestle India received product approval certification from FSSAI on July 4, 2013 for nine variants of instant noodles with tastemaker, including Maggi 2-minute Masala Noodles (dna has a copy of the certificate).

In order to acquire a product approval, a food company has to submit reports on toxicology, shelf life and nutritional label to FSSAI. The FSSAI approval signed by Pradip Chakraborty, director (product Approval) states, "The Instant Noodles have been granted product approval based on the safety of the ingredients and additives."

Maggi is currently at the centre of a storm after tests on samples by the Food and Drug Administration (FDA) officials in Uttar Pradesh revealed high levels of lead and presence of ‘added,’ monosodium glutamate (MSG).

Food safety experts said that the process of product approval was carried out based on the documents submitted by the company. The scientific panel of FSSAI does not carry out its own checks and balances before certifying if a product is safe for consumption, the allege.

"In such a case, the enforcement wing of FSSAI at the state level should be robust to make sure that food companies comply with norms," said Ashwin Bhadri, CEO, Equinox Labs.

For a population of 1.19 crore, Mumbai has only 16 food safety officers appointed under the FSSAI Act as against the sanctioned strength of 41. Of the existing staff, two are currently on maternity leave. Across Maharashtra, 188 out of 256 FSO posts are filled.

"For popular packaged snacks, oil, milk, tea, more and more checks should be conducted by local authorities. The responsibility of randomly testing the products lies with them. Due to staff crunch, enforcement testing takes a huge hit," said Bhadri.

FDA joint commissioner (food) Suresh Annapure said FSOs in Mumbai are overburdened. They work for over ten hours a day in sample collection, licensing and registration activities, vigilance and investigations. We are working in our limited capacity."

Categories: NEWS

Order to M/s Nestle India Ltd.(Uploaded on: 05.06.2015).

5,June, 2015 Comments off
Categories: GO&NOTIFICATION