Archive

Archive for 7,June, 2015

வரி போடுவதாக மிரட்டும் வசூல் ராஜாக்கள்! அதிகாரிகள் மீது பாயும் வணிகர்கள்

7,June, 2015 Comments off

 

பொதுப்பணித் துறையில் டாப் 10 லஞ்ச அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டவுடன் பல்வேறு துறைகளில் லஞ்ச அதிகாரிகள் பட்டியல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வணிகர்களைப் பாதுகாக்க, ‘லஞ்ச ஒழிப்பு வணிகப் பாதுகாப்பு குழுக்கள்’ அமைத்துள்ளது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.

அதன் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அதற்கான காரணங்களை விவரித்தார். ‘‘வணிக வரித்துறை, உணவு பாதுகாப்புத் துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகளின் லஞ்ச வேட்டையால் வணிகர்கள் நிம்மதியை இழந்து விரக்தியோடு தொழில் செய்கின்றனர். உதாரணமாக ஒன்றை சொல்ல வேண்டும் என்றால், சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் ஒரு கடையில் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அபராதம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என்றனர். ஆனால், அபராதம் விதிக்கும் பில்லில் 25 ஆயிரம் ரூபாய் என்று மட்டுமே உள்ளது. ஏன் என்று அந்த வியாபாரி கேட்டதற்கு, ‘அபராதத் தொகையை 1 லட்சத்து 25 ஆயிரம் என்று காட்டினால் இனிமேல், வணிக வரித் துறையினர் அடிக்கடி ஆய்வு செய்ய வருவார்கள். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. எங்களை அட்ஜெஸ்ட் செய்து நடந்துகொள். உனக்கு நல்லது செய்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

அதேபோல, வணிக வரி அதிகாரிகளுக்கு உத்தேச வரி விதிப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனையும் அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்கின்றனர். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் ஏதாவது காரணத்தை வைத்து லட்சக்கணக்கில் வரிகட்ட நோட்டீஸ் அனுப்புகிறார்கள். அவர்களைச் சரிகட்டினால் நோட்டீஸ் அளவோடு பிரச்னை முடிந்து போகும். இல்லை என்றால் வரிவிதிப்பு ஆணை பிறப்பிக்கின்றனர். சட்டப் போராட்டத்துக்குத் தயாரானால், வரிவிதிப்பு ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வரி விதிக்கப்பட்ட தொகையில் 25 சதவிகிதம் செலுத்திவிட்டுத்தான் மேல்முறையீடு செய்ய முடியும். நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கணக்குகள் சரியில்லை என்றும் வரிவிதிப்பு ஆணை பிறப்பிக்கின்றனர். இதனால், அதிகாரிகளை வணிகர்கள் சரிகட்டும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மேல்முறையீட்டுக்கு 25 சதவிகிதம் என்பதை ரத்துசெய்ய தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனை நிறைவேற்றினால் மட்டுமே வணிக வரித்துறையில் லஞ்சம் குறையும்.

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், தமிழகத்தில் 1.11.14-ம் தேதியில் இருந்து சிகரெட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை தமிழக அரசு 20 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக உயர்த்தியது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் 20 சதவிகித வரியே உள்ளது. இந்தியாவில் சிகரெட்டுக்கு மட்டும் ஒற்றை வரி விதிப்பு முறைதான் அமலில் இருக்கிறது. வாங்கும் ஒவ்வொரு இடத்திலும் வரிகட்ட வேண்டும் என்ற பலமுனை வரி கிடையாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வாங்கிக்கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்யலாம்.

வரிவிகிதம் உயர்த்தப்பட்டும் தமிழகத்தில் சிகரெட் விற்பனை மூலம் வரி வருவாய் குறைவு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வணிகவரித்துறை அதிகாரிகள் லஞ்ச வேட்டை நடத்தினர். வெளிமாநிலத்தில்  இருந்து வரும் சிகரெட் வகைகளை தடுக்க வணிக வரித்துறை முயற்சி எடுக்கவில்லை. எந்தெந்த செக்போஸ்ட்கள் மூலம் சரக்குகள் வருகின்றன என்று அதிகாரிகளுக்குத் தெரியும். அங்கே மாமூல் வாங்கிக் கொண்டு விட்டுவிடுகின்றனர். ஆனால், சில்லறை வியாபாரிகள், இருசக்கர வண்டிகளில் சென்று கடைகடையாய் சிகரெட் போடும் மிகச்சிறு வியாபாரிகளிடம் சோதனை செய்தனர். வரி ஏய்ப்பாளர்களிடம் இருந்து 1 கோடி ரூபாய் வசூலானது என்று வணிக வரித்துறை கமிஷனர் அறிக்கை வெளியிட்டார். ஆனால், இதனை வசூலித்த அதிகாரிகள், வணிகர்களிடம் இருந்து நான்கு மடங்கு லஞ்சமாகப் பெற்றதை யார் அறிவார்?

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் லஞ்ச வேட்டையாடி வருகின்றனர். சாம்பிள் எடுப்பது, வழக்குகள் போடுவது என்று அதிகார துஷ்பிரயோகம் செய்வதில் சிறிதளவுகூட கூச்சமில்லாமல் அடாவடியாக நடந்துகொள்கிறார்கள். எனவே, பயந்து லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு வணிகர்கள் தள்ளப்படுகிறார்கள். சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு, கடைகளுக்கு லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரம் இருப்பதால் இந்தத்துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது என்று கடையை சீல் வைப்பதாக மிரட்டுகிறார்கள்.

எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் வணிகவரித் துறை அதிகாரிகள் லஞ்சம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றனர். எனவேதான், லஞ்சத்தை ஒழிக்க தனிக் குழுக்கள் அமைத்து வணிகர்களை பாதுகாப்பது என்று முடிவு செய்துள்ளோம். இந்தக்குழுவில் சட்ட வல்லுநர்கள், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளைப் பயன்படுத்த இருக்கிறோம். அரசுக்கு வரி செலுத்தலாம். ஆனால், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கக் கூடாது என்று ஒவ்வொரு கூட்டங்களிலும் வலியுறுத்தி வருகிறோம். அரசுக்கு வர வேண்டிய வரியை புறவாசல் வழியாக வீட்டுக்கு எடுத்துச் செல்லும் லஞ்ச அதிகாரவர்க்கத்தை வேரறுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

வரி வசூல் லஞ்ச வசூலாக மாறுவதைத் தடுக்க வேண்டும்.

Categories: NEWS

உணவு சர்ச்சை: 2 நிமிஷம் யோசிக்கலாமே!

7,June, 2015 Comments off
 

கையடக்க வாக்மேனிலிருந்து அதிவேகப் புல்லட் ரயில்வரை உலகுக்கு ஜப்பான் அளித்த கொடைகள் ஏராளம். ஜப்பான் மக்களிடம் 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் ஜப்பான் கண்டுபிடித்த பொருட்களிலேயே சிறப்பான பொருள் ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’தான் என்று அந்தக் கருத்துக்கணிப்பில் பெரும்பாலானவர்கள் வாக்களித்திருந்தனர். ஜப்பான் மக்கள் மட்டுமல்ல, உலகைக் கவர்ந்த உடனடி உணவு வகைகளில் நூடுல்ஸுக்குத் தனியிடம் உண்டு.

ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு

இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு ஜப்பானில் உணவுப் பற்றாக்குறை நிலவியது. அப்போது அவர்களுக்கு அந்நியமான பிரெட்டை சாப்பிட ஜப்பானிய மக்கள் வலியுறுத்தப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் உடனடியாகத் தயாரிக்கக்கூடிய, சுவையான, சீக்கிரம் கெட்டுப்போகாத, அதற்கெல்லாம் மேலாக ஜப்பானிய மக்கள் பாரம்பரியத்திலிருந்து விலகாத உணவு ஒன்று தேவை என்று உணர்ந்தார் மோமோஃபுகு அண்டோ. அப்போது அவர் கண்டறிந்ததுதான் உடனடி நூடுல்ஸ். இப்படியாக ஜப்பானில் அறிமுகமாகி, உலகம் முழுவதும் அவசரத்துக்குக் கைகொடுக்கும் உணவாக உடனடி நூடுல்ஸ் மாறிவிட்டது.

‘இரண்டே நிமிடங்களில் சமைத்துவிடலாம்’ என்ற அடையாளத்துடன் எளிதான மாலை சிற்றுண்டியாக நெஸ்லே நிறுவனம் ‘மேகி’ என்ற உடனடி நூடுல்ஸை 1980-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகக் குழந்தைகளை இலக்காகக்கொண்டு உடனடி நூடுல்ஸ் விளம்பரங்கள் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன. அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களும் சமீபகாலமாக இதை விளம்பரப்படுத்தினர்.

காரீயம், எம்.எஸ்.ஜி. ஆபத்து

இன்றுவரை அதிகபட்ச வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நூடுல்ஸ் பிராண்டான மேகியின் டேஸ்ட் மேக்கரில் காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். காரீயம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது என்பதால், கற்றல் குறைபாடுகள், நடத்தை குறைபாடுகளை அது உருவாக்கலாம். மேலும் பல உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.

உடனடி நூடுல்ஸின் டேஸ்ட் மேக்கரில் காரீயம் மட்டுமல்லாமல் மோனோ சோடியம் குளூட்டமேட் (எம்.எஸ்.ஜி.) என்ற உப்பும் அதிகப்படியாக இருப்பது தெரியவந்துள்ளது. உணவுப்பொருட்கள் தரம் மற்றும் உணவு கூட்டுப்பொருட்கள் ஒழுங்குமுறைச் சட்டம் (2011)-ன்படி செறிவூட்டப்பட்ட உணவு வகைகளில் மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்படக்கூடாது. அஜினோமோட்டோ என்ற வணிகப் பெயரிலும், இந்த மோனோ சோடியம் குளூட்டமேட் தனியாக விற்பனை செய்யப்படுகிறது.

வந்தது தடை

மேகி நூடுல்ஸில் காரீயம், எம்.எஸ்.ஜி. அளவுக்கு அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளதால் உத்தரப் பிரதேசம், குஜராத், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது, டெல்லி, கேரள மாநிலங்களில் அரசு விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களில் மேகி நூடுல்ஸை பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளன அம்மாநில அரசுகள்.

டெல்லியில் உள்ள அறிவியல், சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) 2012-ல் நடத்திய பரிசோதனையில், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான மேகி நூடுல்ஸில் கூடுதலான உப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு பாக்கெட் நூடுல்ஸில் 3 கிராம் உப்பு இருக்கிறது. ஒரு நாள் முழுவதும் நமக்குத் தேவையான உப்பின் அளவே ஆறு கிராம்தான்.

“ஒரு பாக்கெட் நூடுல்ஸை ஒருவர் சாப்பிட்டால், முழு நாளும் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். செறிவூட்டப்பட்ட உணவு வகைகளில் இருக்கும் அதிகபட்ச உப்பால் உடல் பருமன், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அவை தரும் சத்தில்லாத கலோரிகளும் உடலைப் பாதிக்கக்கூடியவை" என்கிறார் அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் திட்ட மேலாளர் அமித் குரானா.

இந்தியச் சந்தையில் விற்கப்படும் உடனடி நூடுல்ஸில் வைட்டமின் சத்துகள் உள்ளதாகவும் விளம்பரங்கள் வருகின்றன. சிறிதளவுகூட நார்ச்சத்து இல்லாத உணவால் மற்ற எந்தச் சத்தையும் தர முடியாது. 70 சதவீதம் மாவுச்சத்தைக் கொண்ட நூடுல்ஸை ஆரோக்கியமான உணவு என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார் அமித்.

சாப்பிடுவதில் என்ன இருக்கிறது?

ஒரு டின்னிலோ, பாக்கெட்டிலோ, குப்பியிலோ அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட-செறிவூட்டப்பட்ட உணவில் கலந்திருக்கும் பொருட்கள் குறித்தும், அவற்றில் அடங்கியுள்ள சத்துகள் குறித்தும் லேபிளில் சரியான தகவல்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். அத்துடன் தவிர்க்கப்பட வேண்டிய உப்பு, கொழுப்பு போன்றவற்றை ஒரு வாடிக்கையாளர் தினசரி எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பது போன்ற பரிந்துரைகளும் லேபிளில் இருந்தாக வேண்டும்.

நாடு விடுதலை பெற்று 68 ஆண்டுகள் ஆகியும், தான் வாங்கும் ஒரு உணவுப் பொருளைப் பற்றி ஒரு வாடிக்கையாளர் முழுமையாகத் தெரிந்துகொண்டு தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் எதையும் அரசு வகுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

குழந்தைகளே இலக்கு

உடனடி நூடுல்ஸ் தொடங்கி அனைத்து உடனடி உணவு வகைகளுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களும் குழந்தைகளையே இலக்காகக் கொண்டிருக்கின்றன. தங்களுக்கு எது ஆரோக்கியமான உணவு என்பதை முடிவுசெய்யும் முதிர்ச்சியற்றவர்கள் குழந்தைகள். அவர்களை முதன்மை வாடிக்கையாளர்களாகக்கொண்டு செய்யப்படும் விளம்பரங்கள் சார்ந்து, அரசு சில கட்டுப்பாடுகளை விதிப்பது தற்போதைய அவசர, அவசியத் தேவை.

நாம் சாப்பிடும் உணவின் ஆரோக்கியம் தொடர்பாக அரசு மற்றும் உணவு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருப்பது இப்பிரச்சினைக்குத் தீர்வளிக்கப் போவது இல்லை. வண்ணமயமான விளம்பரங்களைப் பார்த்துப் பாக்கெட் பாக்கெட்டாகச் சமையலறையை நிறைக்கும் பெரியவர்களும் பெற்றோர்களும் இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது உடனடி நூடுல்ஸ் சர்ச்சை.

Categories: NEWS

Un- noodling the Maggi controversy: What is the truth?

7,June, 2015 1 comment
THE Swiss food giant, Nestlé, considered one of the bestknown multinational corporations with an admirable reputation for quality control and standards enforcement, finds itself in a potentially brand- damaging controversy that has snowballed ever since a laboratory in Uttar Pradesh claimed tests had revealed the presence of unacceptable levels of lead and monosodium glutamate, or MSG, in its most popular product, Maggi noodles.

State after state prohibited the sale of Maggi instant noodles while officials issued statements questioning the quality of the product and the credibility of Nestlé. On Friday,

the Food Safety and Standards Authority of India claimed to have found nine variants of Maggi noodles “ unsafe and hazardous” for human consumption.

Based on its ‘ findings’, the FSSAI, India’s national food regulator ( yes, it does exist), has ordered Nestlé to “ withdraw and recall all the nine approved variants of its Maggi instant noodles from the market … and stop further production, processing, import, distribution and sale of the said product with immediate effect.” The firman follows Nestlé voluntarily recalling Maggi noodles to calm what its chief called “ confused consumers”. Meanwhile, Singapore has prohibited the sale of ‘ Made in India’ Maggi noodles while Britain has ordered random samples to be tested. Needless to say, all this has impacted Nestlé negatively in more ways than one; its stocks have already taken a knocking, losing 10 per cent of their value.

Three points need to be made before we proceed any further on the kerfuffle over Maggi. First, I have not seen any ( but I am willing to be corrected on this) comprehensive data- driven report on what exactly has been found wrong with Maggi instant noodles.

How many samples were tested? What were the lead and MSG levels? What are the permissible limits? While MSG is an added taste enhancer, what are the possible sources of lead? Second, Maggi is not the only brand of instant noodles sold across India. The market is now flooded with boil- and- eat noodles- in- a- cup. Most of them are imported from South- East Asian countries; some of them are bulk- produced in China ( where human hair is known to be used for making packaged instant soup, don’t ask me how) and repackaged in South- East Asia. There are desi knockoffs too. Are all these products being tested and investigated for ingredients and standards compliance? Third, if Nestlé has indeed been up to mischief, then it cannot be a recent breach of rules and violation of consumer trust. What were food inspectors and the FSSAI doing all this while? What prompted the UP test? Was it entirely out of the blue without being prompted by considerations other than concerns for food safety? Nestlé’s chief executive, Paul Bulcke, has contradicted the FSSAI’s alarming ( or should it be alarmist?) claims.

“ Our studies showed no lead or MSG in 1,035 tests … We have been carrying out tests on Maggi noodles on multiple batches. All results that came out indicate that Maggi noodles are safe for consumption,” Bulcke said in New Delhi during a globally televised media briefing.

The product, which contributes 25 per cent of Nestlé India’s revenues, had been recalled because the firm “ found the customer confused and distressed”. Bulcke clarified, “ So as a precautionary measure, as a responsible company, we have withdrawn so that our conclusive tests are shared with authorities. Once the authorities are convinced and customers are convinced, we will put back the stocks.” Given the patchy record of FSSAI and State FDAs, not to mention rampant malpractice in the departments and the lack of ethics among inspectors whose remit it is to ensure food and drug safety, it is entirely possible Nestlé, which would be averse to the idea of ‘ grease of doing business’, is bearing the brunt of unfounded allegations.

If that is proved to be true, heads must roll, officials jailed and the Government of India

made to pay damages even if they run into billions of dollars.

Nothing less would suffice.

And if the charges stick, an example should be made of Nestlé. More important, every such product should be subjected to similar scrutiny and severe penalties imposed on producers. Nothing less than this would do justice.

Till then, let’s stay calm and not start burning packaged food producers at the stake.

Trial by media is what happens in a banana republic. India is believed to be a law- abiding republic.

Categories: NEWS

Maggi banned but what about oil, eggs, vegetables and pulses?

7,June, 2015 1 comment
 

Data shows that we are surrounded by food that is contaminated, adulterated and does not meet Indian safety and packaging standards

  • 64% of the loose edible oil sold in Mumbai is adulterated, according to a study conducted last year by the Consumer Guidance Society of India. The study tested 291 samples of sesame oil, coconut oil, groundnut oil, mustard oil, sunflower oil, cottonseed oil and soybean oil.
  • Arsenic above “critical limits” was found in cereals, pulses, vegetables, roots and tubers; cadmium above similar criticality was found in cereals, fruits and curd, in a 2013 M.S. University of Baroda study. Both heavy metals are toxic to human beings.
  • 28% of eggs sampled in Uttar Pradesh’s Bareilly, Dehradun and Izatnagar towns were contaminated with E. coli (effects include diarrhoea, urinary and respiratory infections and pneumonia) and 5% with multi-drug resistant salmonella bacteria (effects: diarrhoea, fever, cramps), according to this 2013 study by the Indian Veterinary Research Institute.
  • More than half of all duck eggs–a local staple in Kerala–sampled in the prosperous town of Kottayam were contaminated with salmonella, according to this 2011 study.
  • Nearly 69% of 1,791 milk samples in a nationwide study did not conform to Indian standards (though they weren’t necessarily unsafe). Milk, as IndiaSpend reported earlier, is one of the most-commonly adulterated food items in India, followed by oil and eggs.

Percentage of Common Foodstuff Samples Found AdulteratedMilk 68.4

Loose Edible Oil 64

Eggs (ducks) 51.30

Egg (hens) 0.1

(Source: Source: FSSAI, Consumer Guidance Society of India, research)

As you can see, we are surrounded by food that is contaminated, adulterated and does not meet Indian safety and packaging standards. What we have presented to you is only a sampling of recent studies on Indian foodstuff.

Why Maggi hit the headlines

Maggi two-minute noodles are only the latest to be found violative of food-safety standards. Maggi’s case–given its popularity–is playing out in a blaze of publicity, as more states ban the noodles and has now been withdrawn from the Indian market by its manufacturer Nestle India.

“The trust of our consumers and the safety of our products is our first priority. Unfortunately, recent developments and unfounded concerns about the product have led to an environment of confusion for the consumer, to such an extent that we have decided to withdraw the product off the shelves, despite the product being safe,” said an official statement by Nestle India.

“This is a very serious issue as it concerns the safety of consumers. Therefore, for the first time, the government has suo motu complained to the Consumer Commission to take cognisance of the matter on behalf of a class of consumers,” Consumer Affairs Minister Ram Vilas Paswan said.

The move comes after product samples analysed by Food Safety and Drug Administration (FDA), Uttar Pradesh were found three times above safe limits.

The permissible limit of lead in food items like Maggi is 2.5 parts per million (ppm), according to Food Safety and Standards (Contaminants, Toxins and Residues) Regulations, 2011. Maggi samples analysed by UP FDA were found to have lead concentration nearly seven times higher at 17.2 ppm, raising fears of possible lead poisoning among consumers.

Lead poisoning clearly poses serious health risks, and can lead to insomnia, anaemia, constipation and brain damage.

The findings of the Uttar Pradesh FDA prompted several states to similarly conduct tests on Maggi; Delhi, Uttarakhand, Gujarat, Jammu and Kashmir and Tamil Nadu have also temporarily banned Maggi sales. Other brands, such as Wai Wai Xpress Noodles, Reliance Select Instant Noodles, Smith and Jones Chicken Masala Noodles and Leong Hakka noodles have also now been banned in different states.

Since health is a state subject, states have their own FDAs to test if foodstuff adhere to safety regulations laid down by Food Safety and Standards Authority of India (FSSAI).

Lead isn’t only in food

But foodstuff isn’t the only thing that violates safety standards. The air you breathe, the water you drink, even your walls could hold the main toxin that Maggi noodles are suspected to contain.

Lead is also present in household paint.

A third of enamel paints analysed had lead concentration above 10,000 ppm, 111 times more than Bureau of Indian Standards (BIS) standards of 90 ppm, according to a recent study by Toxics Link, “Lead in Enamel Household Paints in India in 2015”.

The study tested 101 enamel paints, of which 32 paints revealed high lead concentrations. All 32 paints were made by small and medium enterprises.

Lead (and other carcinogenic heavy metals) has also been commonly found in everything from spinach in Delhi and Nagpur to brinjal, tomato and beans in West Bengal. Indeed, there are fewvegetables that do not display lead contamination, primarily deposited from vehicular exhaust, as this 2013 study of carrot, radish, beet, cabbage and other vegetables in West Bengal revealed.

Unclear how MSG crept into Maggi

Besides lead, high levels of added monosodium glutamate (MSG), a taste enhancer, was also found in Maggi. MSG is widely used in what is called “Indian-Chinese” food.

MSG should not be added to “pastas and noodles (only dried products)”, according to Food Safety and Standards Rules, 2011.

Glutamate is one of the most common, naturally occurring non-essential amino acids, which is found in tomatoes, parmesan cheese, potatoes, mushrooms, and other vegetables and fruits.

MSG is “generally recognised as safe” by U.S Food and Drug Administration, though it is considered harmful in India.

Major complaints arising from MSG use include burning sensations of the mouth, head and neck, headaches, weakness of the arms or legs, upset stomach and hives or other allergic-type reactions with the skin.

Maggi is the most recognisable instant noodle brands in India, commanding a 70% share. This could justify the nationwide uproar against revelations of adulteration. This also raises fear of several other food items being adulterated.

Bottom line: India cannot keep pace with its toxins

Detection is crucial to counter the growing problem of food adulteration, but the country has not established enough testing laboratories.

India, as this IndiaSpend report shows, has only 148 food-testing laboratories.

This means, each laboratory serves 88 million people. China, by contrast, has one laboratory for every 0.2 million people.

The percentage of food samples found not conforming to FSSAI regulations increased from 12.77% in 2011-12 to 18.80% in 2013-14, a 6% increase over three years.

Food Sample Test ResultsYear Samples Examined Samples found non-conforming %age of non-conforming samples

2011-12 64,593 8,247 12.77

2012-13 69,949 10,380 14.84

2013-14 72,200 13,571 18.8

2014-15 49,290 8,469 17.18

(Source: FSSAI; Note: Data for FY 2012 to FY 2014 for 14 states/UTs only, data for FY 2015 is for first 6 months for all states/UTs)

So, while products are violating safety norms, government agencies have cracked down on violators. The number of convictions in food-adulteration cases increased from 764 in 2011-12 to 3,845 in 2013-14, a 403% rise.

Action Taken For Non-Conforming Food SamplesYear Prosecutions Launched No. of Convictions/Penalties

2011-12 6,845 764

2012-13 5,840 3,1753

2013-14 10,235 3,845

2014-15 7.098 2,701

As the data show, it isn’t close to adequate.

Posted by ADMN at 2:38 PM No comments:

Categories: NEWS

மேகியில் காரீயம் இருப்பதன் காரணம் மண்: உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்

7,June, 2015 Comments off
 

நூடுல்ஸ் போன்ற உணவுப்பொருட்களில் காரீயம் அதிகம் இருப்பதற்கு மண் காரணமாக இருக்கலாம் என்று உணவுப்பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது.

மேகி உள்ளிட்ட நூடுல்ஸ் வகையறாக்களில் காரீயம் அதிக அளவில் இருப்பதற்கு காரணம் மண் என்று விசாரணை செய்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெஸ்லேயின் மேகி உள்ளிட்ட நூடுல்ஸ் வகைகளில் வெங்காயம் உள்ளது. மேகியில் பயன்படுத்தப்படும் வெங்காயம் விளையும் மண் காரணமாக காரீயம் அதில் அதிகமாகியிருக்கலாம் என்கின்றனர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்.

இது குறித்து இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஒய்.எஸ்.மாலிக் தி இந்து (ஆங்கிலம்) இதழில் கூறும் போது, இவ்வகை நூடுல்ஸ்களின் டேஸ்ட் மேக்கர்களில் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. இதனால் வெங்காயம் விளையும் மண் தன்மையினால் காரீயம் அதிகமாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது” என்றார்.

அரிதாகவே உணவுப்பொருள் பரிசோதனை:

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் 2014-15 அறிக்கையில் பெரும்பாலும் பால் மற்றும் பால்பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் நீர், மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதே இடம்பெற்றுள்ளன. அரசு சோதனை மையங்களில் பாக்கெட் உணவுப்பொருட்கள் சோதனை செய்யப்படுவதில்லை. இவ்வாறு உணவுப்பொருட்களை சுதந்திரமாக சந்தைகளில் விற்க அனுமதிப்பது நுகர்வோரை அறியாமையில் ஆழ்த்தும் செயல் அல்லவா? என்று கேட்ட போது,

“2006-ம் ஆண்டு உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 4 ஆண்டுகளாக மட்டுமே செயலில் உள்ளது. இச்சட்டத்தின் பிரிவு 26-ன் படி உணவு வர்த்தக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. எனவே அமலாக்கம் தொடர்பாக தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அதிரடி சோதனைகளில் இறங்கினால் இன்னொரு சோதனை ராஜ்ஜியம் நடப்பதாக புகார்கள் எழும்” என்றார் ஒய்.எஸ்.மாலிக்.

உணவுப்பொருட்களில் காரீயம் பற்றி மண் கலப்படம் மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய நெட்வொர்க் அமைப்பின் பொதுச்செயலரும், டெல்லி பல்கலைக் கழகத்தின் மூலக்கூறு உயிரியல் பேராசிரியருமான ரூப் பால் கூறும்போது, "உணவுச்சங்கிலியில் காரீயம் போன்ற கடின உலோகக்கூறுகள் கலப்பதற்கு முதன்மைக் காரணம் நீர்நிலைகளில் தொழிற்சாலை கழிவு மற்றும் நச்சுப் பொருட்கள் கலக்காமல் பாதுகாக்கும் போதிய சுற்றுசூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு ஒழுங்கு முறை இல்லாததே" என்றார்.

பனாரஸ் இந்துப் பல்கலைக் கழக பேராசிரியர் பி.டி.திரிபாதி கூறும்போது, சுற்றுச்சூழல் அறிவியில் மற்றும் தொழில்நுட்ப மையம் மேற்கொண்ட ஆய்வில் வாரணாசியில் உருவாகும் கழிவுகளில் அதிக அளவு காரீயம், குரோமியம் மற்றும் நிக்கல் கலந்துள்ளன. காரணம் இங்குள்ள ஆயிரக்கணக்கான சிறு தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுப்பொருட்களே. கழிவுநீர் சுத்திகரிக்கப்படும் போது கூட இத்தகைய உலோகக்கூறுகள் அதிலிருந்து அகற்றப்படுவதில்லை. இதுதான் பிற்பாடு கோதுமை, மற்றும் காய்கனிகள் விளைச்சலிலும் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

இந்த ஆய்வுக் கழகத்தின் முடிவுகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

“இத்தகைய கடின உலோகக் கூறுகள் மாசடைந்த நதிநீர் வாயிலாக விளை நிலங்களிலும் சென்றடையும் போது அதன் மண் இதனை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் பிறகு உணவுச்சங்கிலிக்குள் நச்சுப்பொருட்கள் செல்லும் போது, உயிரியல் பெருக்கமடைகிறது” என்கிறார் பேராசிரியர் திரிபாதி.

இவர், தற்போது மேகியினால் எழுந்த சர்ச்சைகளை கோககோலா சர்ச்சையுடன் ஒப்பிடுகிறார். “எந்த நீர் குளிர்பானம் தயாரிக்கப் பயன்படுகிறதோ, அந்த நீர் இத்தகைய உலோகக் கூறுகளை உறிஞ்சிக் கொண்ட நீர், இதனால் பூச்சிக்கொல்லி மருந்து அதில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது” என்றார்.

எனினும் குறைந்த அளவில் இத்தகைய உணவுப்பொருட்களை எடுத்துக் கொண்டால் உடல் அதற்கு வளைந்து கொடுக்கும், அளவுக்கு மீறி காரீயம் போன்ற கூறுகள் இருக்கும் போது உடலுக்கு அது போதுமான கேட்டை விளைவிக்கும் என்று இவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக காரீயம் உடலுக்குள் சுவாசம் வழியாகவோ, உணவுக்குழல் வழியாகவோ செல்லும் போது மூளை மற்றும் கிட்னியை பாதிக்கிறது. பெரியவர்களுக்கு இத்தகைய நோய்களை ஏற்படுத்தும் காரீயம், வளரும் நிலையில் உள்ள குழந்தைகளின் நரம்பு அமைப்பை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Categories: NEWS

மதுரை ஐராவதநல்லூரில் மேகி நூடுல்ஸ் குடோனில் அதிகாரிகள் ஆய்வு

7,June, 2015 Comments off

மதுரை, ஜூன் 6-
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதி பொருட்கள் மேகி நூடுல்சில் அதிக அளவு கலக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் விற்கக்கூடாது எனவும், கடைகளில் அவை இருந்தால் அவற்றை பறிமுதல் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மதுரை ஐராவதநல்லூரில் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. அங்கு இன்று காலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் சுகுணா தலைமையில் அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர். அங்கு ஒரு பகுதியில் விற்பனைக்கு அல்ல என்ற வாசகங்களுடன் ஒரு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தது. அந்த அறையில் மேகி நூடுல்ஸ் வைக்கப்பட்டுள்ளதாக குடோன் ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதனை திறந்து பார்வையிட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எந்தெந்த கடைகளுக்கு மேகி நூடுல்ஸ் அனுப்பப்பட்டது. அவை அனைத்தும் திரும்ப பெறப்பட்டனவா? என்பதை பட்டியல்படி ஆய்வு செய்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்ட மேகி நூடுல்சை திரும்ப பெற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். இது குறித்து குடோன் ஊழியர்கள் கூறும்போது, தங்களது ஏஜென்சிகளுக்கு ஏற்கனவே தகவல் அனுப்பியுள்ளதாகவும், மேகி நூடுல்ஸ் திரும்ப பெறப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். சுமார் 1 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

Categories: NEWS

மதுரையில் தொடருது ‘மேகி’ நூடுல்ஸ் ஆய்வு

7,June, 2015 Comments off

மதுரை:மதுரையில் உணவு பாதுகாப்பு துறை மூலம் ‘மேகி’ நூடுல்ஸ் கடைகளில் விற்கப்படுகிறதா என, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.உணவு பாதுகாப்பு அதிகாரி சுகுணா கூறியதாவது: நான்கு மெயின் ஸ்டாக்கிஸ்ட் கடைகளில் உள்ள ‘மேகி’ நூடுல்சை, நெஸ்லே நிர்வாகத்திடம் கொடுக்கும் பணியை செய்துள்ளோம். வினியோகஸ்தர் மற்றும் சில்லரை கடைகளில் உள்ள பாக்கெட்களை ‘விற்பனைக்கு அல்ல’ என ‘பேக்கிங்’ செய்து வருகிறோம். அனைத்து கடைகளிலும் அந்த பாக்கெட்களை திரும்பப் பெறும் வரை ஆய்வுகள் தொடரும் என்றார்.

Categories: DISTRICT-NEWS, Madurai

ரூ. 15 லட்சம் மதிப்புள்ள நூடுல்ஸ் பொட்டலம் திருப்பி அனுப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரி

7,June, 2015 Comments off

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூடுல்ஸ் பொட்டலங்களை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பினர்.
தமிழக அரசு "மேகி’ நூடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் நூடுல்ஸ், சி.ஜி. வாய் நூடுல்ஸ் மற்றும் ஸ்பித் ஜோன்ஸ் நூடுல்ஸ் ஆகியவற்றை, பொதுமக்களின் பொதுசுகாதார நலனை முன்னிட்டு, கடந்த, 4ம் தேதி முதல், மூன்று மாதங்களுக்கு விற்பனைக்கு தடைசெய்து உத்தரவிட்டது.
இவ்வகை நூடுல்ஸ் உணவுப்பொருட்களை, விற்பனை செய்யும் உணவு வணிகர், தங்கள் வசமுள்ள நூடுல்ஸ் பொட்டலங்களை, உடனடியாக சம்பந்தப்பட்ட ஏஜன்டிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஏஜன்டு, சம்பந்தப்பட்ட கடைகளில் இருந்து உடனடியாக திரும்ப பெற்று, தயாரிப்பு நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் உணவு பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்வது தெரியவந்தால் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என, அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள "மேகி’ நூடுல்ஸ் மொத்த விற்பனையாளர் கிடங்கில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களில் இருந்து திரும்ப சேகரிக்கப்பட்ட, 1,000 அட்டைபெட்டிகளில் அடைக்கப்பட்ட, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் உணவு பொட்டலங்களை, மொத்த விற்பனை முகவர் திருப்பி அனுப்பியுள்ளார்.
இன்னும், 500க்கும் மேற்பட்ட அட்டைபெட்டிகள் வந்து சேர வேண்டியுள்ளது. அவற்றையும் விரைவில் திரும்ப பெற்று தயாரிப்பு நிறுவனத்துக்கு, திருப்பி அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில்லரை விற்பனை கடைகளில், "மேகி’ நூடுல்ஸ் விற்பனை செய்யப்படுகிறதா, என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
சில்லரை விற்பனை கடைகளில் எத்தனை நாட்களுக்குள் "மேகி’ நூடுல்ஸ் பொட்டலங்களை திரும்பபெற வேண்டும் என்ற உத்தரவு வரவில்லை. இருப்பினும் விரைவில் அதனை திரும்பபெற வேண்டும் என, மொத்த விற்பனை ஏஜண்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Namakkal