Archive

Archive for 9,June, 2015

K’taka bans Maggi sale and manufacture at Nanjangud following directive

9,June, 2015 Comments off

Karnataka has now taken the decision to ban the sale and manufacture of Maggi noodles following a communiqué from the Food Safety and Standards Authority of India (FSSAI).
"The FSSAI has now instructed us to temporarily stop Nestle India from manufacturing or selling its noodles, including variants, in the state as a precautionary measure to ensure public health," stated health minister U T Khader.
The ban has been effected though results froma private lab Robust Material Technology found the  Lead content to be 0.05 particles per million (ppm) in three samples that were tested as against the acceptable limit of 2.5 ppm. Robust Materials Technology Ltd at  Nagarabavi and TUV SUD labs in Peenya are two private labs, which are accredited to the National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL).
“Though preliminary results of tests conducted at a private lab here indicated that the levels of Lead in the noodles were below the permissible limit, the state health department advised stakeholders to refrain from marketing, distributing and selling the noodles, and asked the public not to consume it,” the minister said.
"We have now instructed Nestle to withdraw its Maggi stocks from all stores and retail formats across the state. Stringent action will be taken against offenders," Khader said.
“We have also alerted eating joints like restaurants and dabbas to eliminate it from menu offerings," the minister pointed out.
Further, "We will consider action against the company after we get the final test report from the Central Food Laboratory in Kolkata," he stated.
The state health department on June 1 picked up samples of Maggi noodles from its manufacturing units and retail outlets, for tests by the state-run Central Food Technological Research Institute (CFTRI) at Mysuru and two private laboratories in Bengaluru. But CFTRI was not authorised to test the samples because Karnataka did not come under its jurisdiction.
The Swiss food and beverages multinational has four production units to make noodles, including a captive plant at Nanjangud near Mysuru, about 180 km from Bengaluru. In March 2011, Nestle invested Rs 360 crore at Nanjangud for the production of ketchups, pasta and instant noodles. It would also manufacture seasonings and mixed condiments.  The facility already had an existing advanced coffee factory at the location that processes coffee beans for Nescafe.

Categories: NEWS

நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது : பரிசோதிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

9,June, 2015 Comments off

புதுடில்லி : ‘நெஸ்லே’ உட்பட, ஏழு பிரபல நிறுவனங்களின் நுாடுல்ஸ் மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், தேசிய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
‘நெஸ்லே’ நிறுவனம் தயாரிக்கும், ‘மேகி’ நுாடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, ரசாயன உப்பு மற்றும் காரீயம் கலப்பு இருப்பதாக தர பரிசோதனையில் தெரியவந்தது.

சிக்கல்:

இதையடுத்து, மேகி நுாடுல்ஸ் மட்டுமல்லாமல், அந்த நிறுவனத்தின் ஒன்பது வகையான உணவுப் பொருட்களை விற்பனை செய்ய, தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தடை விதித்துள்ளது. கடைகளில் இருப்பு உள்ள மேகி நுாடுல்ஸ் பாக்கெட்டுகளை திரும்பப் பெறும்படியும் அந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் நுாடுல்ஸ் மற்றும் உணவுப் பொருட்களின் விற்பனைக்கும் சிக்கல் வந்துஉள்ளது.

இதுகுறித்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணைய தலைவர் மாலிக் கூறியுள்ளதாவது:
மேகி நுாடுல்சில் ரசாயன கலப்பு அதிகம் இருப்பது தெரியவந்ததால், அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்யும்படி புகார்கள் வந்தன. இதையடுத்து, ருசி இன்டர்நேஷனல், சி.ஜி., புட்ஸ் இந்தியா, ஜி.எஸ்.கே., கன்ஸ்யூமர் ஹெல்த்கேர், ஐ.டி.சி., லிட்., ஏ.ஏ.நியூட்ரிஷியன், இந்தோ நிஷான் புட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனம் தயாரிக்கும் உணவுப் பொருட்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் குறிப்பிட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகளை தர ஆய்வுக்கு உட்படுத்தி, அதுகுறித்த விரிவான அறிக்கையை, வரும், 19ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இந்த தர பரிசோதனையை அதிகாரபூர்வ ஆய்வகத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவது தெரிய வந்தாலும், அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதிரடி :

இந்த உணவுப் பொருட்கள் தயாரிப்பில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதையும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்.
ரசாயனம் அதிகம் கலந்துள்ளதாக ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை, கடைகளில் இருந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது அழிக்க வேண்டும். கேக், மசாலா, டேஸ்ட் மேக்கர் போன்ற உணவுப் பொருட்களை தனியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, இந்த ஏழு நிறுவனங்களின் உணவுப் பொருட்களுக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

எவை எவை?

தர பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களும், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களும்:
1. சி.சி., புட்ஸ்வய் வய் நுாடுல்ஸ், புஜியா சிக்கன்2. ருசி இன்டர்நேஷனல்
கோகா உடனடி நுாடுல்ஸ்
3. ஜி.எஸ்.கே., கன்ஸ்யூமர் ஹெல்த் பூடுல்ஸ்
4. நெஸ்லேமேகி உடனடி நுாடுல்ஸ் மற்றும் ஒன்பது வகையான உணவுப் பொருட்கள்
5. இந்தோ நிஷான்டாப் ராமென் ஆட்டா மசாலா
6.ஐ.டி.சி., மூன்று வகையான உடனடி நுாடுல்ஸ்
7. ஏ.ஏ., நியூட்ரிஷியன் யம்மி சிக்கன் மற்றும் வெஜ் நுாடுல்ஸ்

மிசோரம் பிடிவாதம்:

வட கிழக்கு மாநிலமான மிசோரமில், முதல்வர் லால் தங்க்வாலா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில், ‘மேகி’ நுாடுல்சுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இங்கு, ‘மேகி’ நுாடுல்சுக்கு தடை விதிப்பது குறித்த முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மீள்வது கடினம்:

*’மேகி நுாடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையிலிருந்து மீண்டு வருவது, ‘நெஸ்லே’ நிறுவனத்துக்கு கடினமான விஷயமாகவே இருக்கும்’ என, சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
*மேகி நுாடுல்ஸ் மட்டுமல்லாமல், அந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் விற்பனையில் தேக்கநிலையை சந்தித்துள்ளன.
*’நெஸ்லே’ நிறுவனத்தின் மொத்த விற்பனையில், மேகி நுாடுல்சின் பங்கு மட்டும், 25 சதவீதம்.
*இதன் மூலம், அந்த நிறுவனத்துக்கு, மாதத்துக்கு, 200 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது.
*தர பரிசோதனைக்கான செலவை விட, விளம்பரத்துக்காக, ‘நெஸ்லே’ நிறுவனம் அதிகம் செலவழிக்கிறது.
*பங்குச் சந்தையிலும், ‘நெஸ்லே’ நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Categories: NEWS

நீள்கிறது உணவு பாதுகாப்பு பரிசோதனை பட்டியல்: மசாலா பொடி, பஞ்சாமிர்தமும் கூட தப்பவில்லை

9,June, 2015 Comments off

தமிழகத்தில், ‘மேகி’ உள்ளிட்ட, நான்கு விதமான, நுாடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக, உப்பு, எண்ணெய், மசாலா பொடி, பஞ்சாமிர்தம் என, உணவு பாதுகாப்புத் துறையின் ஆய்வுப் பட்டியல் நீள்கிறது. 20க்கும் மேலான உணவுப் பொருட்கள், மாதிரி எடுக்கப்பட்டு வருவதால், தனியார் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.

‘நெஸ்லே’ நிறுவன தயாரிப்பான, ‘மேகி நுாடுல்ஸ்’சில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும், காரீயத்தின் அளவு அதிகம் உள்ளதாகவும், அவை சாப்பிட லாயக்கற்றது எனவும், உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு முடிவுகளில் தெளிவானது. இதனால், நாடு முழுவதும், இந்த நுாடுல்ஸ் விற்பனைக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பரிசோதனைக்கு அரசு உத்தரவு:

இந்நிலையில், சந்தையில் விற்பனையில் உள்ள, மேலும், 23 வகையான, ‘நுாடுல்ஸ்’களின் மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இது போன்று, மற்ற பாக்கெட் உணவுப் பொருட்களிலும், வேதிப்பொருட்களின் அளவும்
பரிசோதிக்க, அரசு உத்தரவிட்டது.இதன்படி, மாவட்டந்தோறும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தங்கள் மாவட்ட சந்தையில் விற்பனையில் உள்ள, முக்கிய பாக்கெட் உணவு மாதிரிகளை எடுத்து வருகின்றனர்.சிப்ஸ் வகைகள், மசாலா பவுடர், பால் பவுடர், சமையல் எண்ணெய், நெய், ரெடிமேட் சப்பாத்தி – புரோட்டா, பழங்கள், பதப்படுத்திய காய்கறிகள், உப்பு, குளிர்
பானங்கள், பாட்டில் – கேன் குடிநீர், ஊறுகாய், பஞ்சாமிர்தம், வத்தல் குழம்பு, கறிவேப்பிலை பொடி பேஸ்ட், சில்லி – சாஸ் வகைகள் உட்பட, உணவு பாதுகாப்புத் துறையினரால், 20க்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை:

இதன் மாதிரிகள் அனைத்தும், ஆறு இடங்களில் உள்ள, உணவு பாதுகாப்பு பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உணவு பாதுகாப்புத் துறை தானாகவும், புகாரின்படியும், மாநிலம் முழுவதும், 20க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன; அந்த மாதிரிகள், பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மாதிரிகள் அதிகம் எடுக்கப்பட்டு உள்ளதால், முடிவுகள் கிடைக்க, சற்று தாமதம் ஆகலாம். முடிவுகள் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். உணவுப் பொருட்களின் மாதிரி ஆய்வுகள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

இவற்றில் பெரும்பாலும், பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளே அதிகம் உள்ளன. மாதிரிகள் முடிவில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்.

பள்ளி விடுதிகள், ‘கேன்டீன்’களில் தடை:

தனியார் பள்ளிகளின் கேன்டீன்கள் மற்றும் மாணவ, மாணவியர் விடுதிகள், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான மாணவர், மாணவியர் விடுதிகளில், தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று, மாவட்ட வாரியாக உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ‘அரசு விடுதிகளில், அரசின், ‘மெனு’ உணவுப் பட்டியலில் நுாடுல்ஸ் கிடையாது. ஆனாலும், பல மாணவ, மாணவியர் தாமாக விரும்பி நுாடுல்ஸ் வாங்கி, சமையல் ஊழியர்களிடம் செய்து கேட்பது வழக்கம். ‘இனி இந்த விடுதிகளில் தானாக விரும்பியும் நுாடுல்ஸ் சாப்பிட அனுமதியில்லை. இதேபோல், பல உண்டு உறைவிட பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’ என்றனர்.

Categories: NEWS

மேகி நூடுல்சை தொடர்ந்து மேலும் 6 நிறுவனங்களின் உணவுப் பொருட்களுக்கு சிக்கல் சோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

9,June, 2015 Comments off

புதுடெல்லி,

மேலும் 6 நிறுவனங்களின் நூடுல்ஸ், உணவுப் பொருட்களை ஆய்வு செய்து 19–ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

கோர்ட்டில் வழக்கு

மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதைச் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி உத்தரபிரதேசம், பீகார் மாநில கோர்ட்டுகளிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மேகி நூடுல்சுக்கு தடை

இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன. அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை என்று கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் தடை செய்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.

சந்தேகம்

இந்த நிலையில் நெஸ்லே இந்தியாவின் மேகி நூடுல்ஸ் போலவே மேலும் 6 நிறுவனங்களின் தயாரிப்புகளான நூடுல்ஸ், பாஸ்தா, மக்ரோனி போன்ற உணவுப் பொருட்களிலும் ரசாயன கலப்பு அதிகம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இதையடுத்து இந்த நிறுவனங்களின் நூடுல்ஸ் மற்றும் அவை தொடர்பான உணவுப் பொருட்களையும் ஆய்வுக்கு உட்படுத்த மத்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் முடிவு செய்து இருக்கிறது.

இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு பாதுகாப்பு ஆணையர்களுக்கு மத்திய உணவு பாதுகாப்பு ஆணையம் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஆய்வுக்கு உட்படுத்துங்கள்

ஐ.டி.சி., இந்தோ நிஸ்ஸான் புட், ஜி.எஸ்.கே. கன்ஸ்யூமர் ஹெல்த்கேர், சி.ஜி. புட்ஸ் இண்டியா, ருச்சி இண்டர்நேஷனல் மற்றும் ஏ.ஏ நியுட்ரிஷன் ஆகிய 6 நிறுவனங்கள் தயாரிக்கும் பல்வேறு வகையான நூடுல்ஸ், பாஸ்தா, மக்ரோனி, ஆட்டா மசாலா, பூடில்ஸ், வை வை நூடுல்ஸ், கோகா இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், யும்மி சிக்கன் மற்றும் சைவ நூடுல்ஸ் உள்ளிட்ட 32 உணவுப் பொருட்களையும் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தவேண்டும்.

இதேபோல், நெஸ்லேயின் சுவையூட்டியுடன் கூடிய மேகி நூடிலிசியஸ் பாஸ்தாவின் 4 வித உணவுப் பொருட்கள் ஆகியவற்றையும் ஆய்வக சோதனை செய்யவேண்டும்.

அண்மையில் மேகி நூடுல்ஸ் மற்றும் இதேபோல் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன கலப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது, கவலைக்குரியதாக இருக்கிறது.

தனித்தனி சோதனை

இதனைக் கருத்தில் கொண்டு மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய இந்த உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வகத்தில் மாதிரி சோதனைக்கு உட்படுத்துவது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கண்ட 7 நிறுவனங்களின் நூடுல்ஸ் ரக உணவுப் பொருட்களையும் மாநில அரசுகளின் ஆணையர்கள் விரிவான ஆய்வக சோதனைக்கு உட்படுத்தவேண்டும். தவிர கேக், மசாலா, சுவையூட்டிகள் மீது தனித் தனியாக ஆய்வக சோதனை நடத்தவேண்டும்.

இதேபோல் உணவை பாதுகாத்து வைக்க பயன்படுத்தும் பொருட்கள், சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்யவேண்டும். காரீயம், தாமிரம், ஆர்செனிக் மற்றும் காட்மியம் போன்றவற்றின் கலப்பு இவற்றில் இருக்கிறதா? என்பதையும் உறுதிப்படுத்தவேண்டும்.

19–ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்

இந்த ஆய்வக சோதனைகளின் மீதான அறிக்கையை வருகிற 19–ந்தேதிக்குள் மத்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்திடம் தாக்கல் செய்யவேண்டும்.

இந்த மாதிரிகளில் இந்திய தர நிர்ணய சட்டப்படி உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு உள்ளனவா? என்பதையும், இதில் தக்க சட்ட விதிகள் பின்பற்றப்பட்டு உள்ளனவா? என்பதையும் கண்டறிந்து தகுந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் அதற்கு தகுந்தவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றியிருக்காவிட்டால் அந்த உணவுப் பொருட்கள் சட்டப்பூர்வமானவை அல்ல, நுகர்வோர் சாப்பிடத் தகுந்தவையும் கிடையாது என்று அறிவித்து அவற்றின் விற்பனையை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Categories: NEWS

மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகம் திறப்பு விழா

9,June, 2015 Comments off

imggallery

கடலூர்:கடலூரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகம் திறப்பு விழா நடந்தது.கடலூர் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி நிலையம் பகுதியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 2ம் தேதி முதல் ஜெ., காணொளி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மேஜை, நாற்காலி, பீரோ என அனைத்து பொருட்களும் மாற்றப்பட்டு புதிய அலுவலகம் செயல்படத் துவங்கியது.புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தை மாவட்ட அதிகாரி ராஜா முன்னிலையில் ஆனந்தபவன் நாராயணன் நேற்று குத்து விளக்கேற்றி அலுவலக செயல்பாட்டைத் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஓட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் ரங்கராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS