Archive

Archive for 15,June, 2015

Order dated 05.06.2015 regarding detailed lists of FSSAI Notified NABL Accrediated Food Testing Laboratories. (Uploaded on: 15.06.2015).

15,June, 2015 Comments off

Pages from Order_Lab_Lists_Page_1Pages from Order_Lab_Lists_Page_2

READ MORE PAGES DOWNLOAD PDF FILE

Categories: What's New-FSSAI

சிதம்பரம் பஸ் நிலைய கடைகளில்உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

15,June, 2015 Comments off

imggallery

சிதம்பரம்:சிதம்பரம் பஸ் நிலைய டீ கடைகளில் பயன்படுத்திய போலி டீத்தூள்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மாவட்ட <உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, ஆய்வாளர்கள் கீரப்பாளையம் குணசேகரன், பரங்கிப்பேட்டை ஏழுமலை ஆகியோர் கொண்ட குழுவினர் சிதம்பரம் பஸ் நிலைய கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குளிர்பானம், திண்பண்டங்கள் மற்றும் டீ கடைகளில் வைத்திருந்த டீத்தூளை சோதனை செய்தனர். 10 கடைகளில் 8 கடைகளில் கேன்சர் உருவாக்கம் போலி டீத்தூளை பயன்படுத்துவதை கண்டறிந்து, அதனை பறிமுதல் செய்தனர். மேலும், ஸ்விட் ஸ்டால்களில் கலர் பயன்படுத்திய இனிப்புகளை கொட்டி அழித்தனர். அதனைக் கண்ட பிற ஸ்விட் ஸ்டால் உரிமையாளர்கள், கலர் சேர்த்த ஸ்விட்களை பதுக்கினர். இதனால், பெரும்பாலான ஸ்விட் ஸ்டால்களில் ரேக்குகள் காலியாக இருந்தன.

திண்பண்டங்கள் தேதி மற்றும் தயாரிப்பு கம்பெனி பெயர் குறிப்பிடாமல் விற்பனை செய்தவர்களை எச்சரிக்கப்பட்டனர். மேலும், கலப்பட டீத்தூள் பயன்படுத்தியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட <<உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தெரிவித்தார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?: விளக்கம் அளிக்க காம்ப்ளானுக்கு நோட்டீஸ்

15,June, 2015 Comments off

லக்னோ : மேகி நூடுல்சை தொடர்ந்து காம்ப்ளானும் சிக்கலில் சிக்கி உள்ளது. காம்ப்ளான் பவுடரில் புழுக்கள் மிதந்ததாக வந்த புகாரை அடுத்து, ஹச்.ஜெ.ஹெயின்ஸ் கம்பெனிக்கு உத்தர பிரதேச உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நெஸ்லே இந்தியா நிறுவனம் தயாரித்த மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயம் (லெட்) மற்றும் மோனோசோடியம் குளோடாமேட்(எம்.எஸ்.ஜி.,) ஆகியவை சேர்க்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல என நிரூபிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாநிலங்கள் மேகி நூடுல்சிற்கு தடை விதித்தன.

மேகி நூடுல்ஸ் தயாரிப்புக்களை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசும் நெஸ்லே நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக பல்வேறு உணவுப் பொருட்களையும் சோதிக்கும் பணியில் உணவு பாதுகாப்புத்துறை இறங்கி உள்ளது. மேகி சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது காம்ப்ளானுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

லக்னோவைச் சேர்ந்த தணிஷ் ராய் சிங்கானியா என்பவர் வாங்கிச் சென்ற காம்ப்ளான் பாக்கெட்டில் உயிருடன் புழுக்கள் நெளிந்தன. இது தொடர்பாக அவர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். உணவு பாதுகாப்பு கழக தலைவர் ஜெ.பி.சிங் கூறுகையில், புகாரை அடுத்து காம்ப்ளான் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே சமயம், இது தொடர்பாக விளக்கம் அளிக்க அந்நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். புழுக்கள் இருந்ததாக கூறப்படும் காம்ப்ளான் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு துறையின் நோட்டீசிற்கு இமெயில் மூலம் காம்ப்ளான் தயாரிப்பு நிறுவனமான ஹச்.ஜெ.ஹெயின்ஸ் பதிலளித்துள்ளது. அதில், காம்ப்ளான் ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த பானம். அதில் புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்கள், வைட்டமின் -பி உள்ளிட்ட 26 வகை வைட்டமின்கள், மினரல்கள் சேர்க்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேகி நூடுல்ஸ், காம்ப்ளான் போன்ற உணவுப் பொருட்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் சில வலி நிவாரண மாத்திரைகளிலும் இந்த குளறுபடி நடப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 2016ல் தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் என 10 மாதங்களுக்கு முந்தைய தேதியிட்டு இந்த மாத்திரைகள் விற்கப்படுகின்றன. இவற்றில் காலாவதியாகும் காலம் மார்ச் 2018 என குறிப்பிடப்பட்டுள்ளன. காலாவதியாகும் தேதியை மட்டுமே மக்கள் பார்ப்பதால் இந்த மாத்திரைகள் விற்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனடியாக திரும்பப் பெற அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories: NEWS

In the process of destroying Maggi worth Rs 320 crore: Nestle

15,June, 2015 Comments off
 

Nestle India on Monday said it is in the process of destroying Maggi noodles worth Rs 320 crore after it was banned by central food safety regulator FSSAI due to presence of lead and taste enhancer monosodium glutamate (MSG) beyond permissible limits.

The company said it is in the process of withdrawing the stock of Maggi noodles from markets, factories and distribution and destroying it.

"The estimated sales value of the stock in the market, including those with our trade partners is around Rs 210 crore. In addition, there was Maggi noodles and related materials in our factories and distribution centres when the withdrawal was announced and the estimated value of these is around Rs 110 crore," Nestle India informed the BSE.

It, however, added that it was only a broad estimate "as it is impossible to calculate the final figure while the withdrawal is taking place".

"There will be additional costs to take into account for example bringing stock from the market, transporting the stock to the destruction points, destruction costs. The final figure will have to be confirmed at a later date," it said.

That unforeseen costs on withdrawal "will be dealt with in line with the applicable accounting standards at the time of announcing the financial results on due dates".

Shares of Nestle India on Monday closed at Rs 5,948.65 apiece on the BSE, down 2.14 per cent from previous close.

Traders body Confederation of All India Traders (CAIT) has sought government intervention to direct Nestle to make immediate refunds for recalled stocks of its Maggi noodles as the company has "blocked capital of wholesalers and retailers for nearly two months".

On June 5, the Food Safety and Standards Authority of India (FSSAI) banned Maggi directing Nestle to immediately withdraw and recall all nine variants of Maggi instant noodles from market. Nestle India has also recalled the product from the market.

Nestle India has challenged the ban order before the Bombay High Court, which on June 12 declined to give any interim relief over ban of Maggi noodles.

The court has scheduled the next hearing for June 30 and has directed FSSAI and the Maharashtra Food and Drug Administration (FDA) to file affidavits within two weeks over concerns raised by Nestle.

Categories: NEWS

சிதம்பரம் பஸ் நிலைய கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

15,June, 2015 Comments off

 

சிதம்பரம்,

சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

பஸ் நிலையம்

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பஸ் நிலையத்தில் இருந்த குளிர்பான கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது காலாவதியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து கடை உரிமையாளர்களிடம் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தெரிவித்தார். அப்போது அவருடன் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஏழுமலை, குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவனுக்கு மயக்கம்:உணவு பாதுகாப்பு அதிகாரி விசாரணை

15,June, 2015 Comments off

imggallery

கடலுார்:கடலுார் அருகே, நுாடுல்ஸ் சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சிறுவனின் குடும்பத்தாரிடம் உணவு பாதுகாப்பு அதிகாரி விசாரணை செய்தார்.கடலுார் முதுநகர் அடுத்த நடுதிட்டு கிராமத்தை சேர்ந்தவர் சத்தியசீலன். இவரது மகன் அருண்குமார் (10). இவரது தாய் நேற்று மாலை 3:00 மணியளவில், அருகில் உள்ள கடையில் இருந்து நுாடுல்ஸ் வாங்கி வந்து சமைத்து கொடுத்தார். அதனை சாப்பிட்ட சற்று நேரத்தில் அருண்குமாருக்கு இழுப்பு வந்து, வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார்.உடன், அவருக்கு கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.தகவலறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, வட்டார பாதுகாப்பு அதிகாரி நல்லதம்பி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று, சிறுவனின் பெற்றோரிடம் விசாரித்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS