Archive

Archive for 19,June, 2015

உணவகங்களில், உணவு வகைகளை வரைமுறைப்படுத்த குழு அமைப்பு

19,June, 2015 Comments off

துரித உணவு வகைகளின் ஆதிக்கம் மேலோங்கிவரும் நிலையில், ஹோட்டல்கள், உணவகங்களில் பரிமாறப்படும் உணவு வகைகளில், உப்பு, சர்க்கரை, கொழுப்புகளின் அளவை வரைமுறைப்படுத்த, 11 பேர் கொண்ட குழுவை, இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் அமைத்துள்ளது.
தொடர்ச்சியாக சர்ச்சைகள்
மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமான ரசாயனம், நெஸ்லே குழந்தைகள் உணவில் பூச்சிகள், கே.எப்.சி சிக்கனில் புழு என, அடுத்தடுத்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து, அனைத்து இந்திய உணவு வகைகளிலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க, உணவு பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
11 பேர் கொண்ட குழு
இதற்காக, எய்ம்ஸ் உள்ளிட்ட பிரபல மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு விரிவான ஆய்வினை மேற்கொண்டு, உணவு வகைகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்புகளின் அளவை வரைமுறைப்படுத்தும் நெறிமுறைகளை வகுக்கும். அதனடிப்படையில், உணவு பொருட்கள் மற்றும் உணவகங்களில் இவற்றின் அளவை பராமரிக்க, புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். 
இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம்
துரித உணவு வகைகளில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் அதிக அளவிலான உப்பு, காரம், கொழுப்பு பயன்பாட்டை கட்டுப்படுத்தவே, இந்த ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக, இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories: NEWS

Now, eating joints under FSSAI radar over salt, fat and sugar content

19,June, 2015 Comments off
 

The Food Safety Standards Authority of India will issue guidelines to regulate salt, sugar and fat in all Indian food products sold or served at eating joints.

The Food Safety Standards Authority of India, the central food safety regulator, will issue guidelines to regulate salt, sugar and fat in all Indian food products sold or served at eating joints and has also formed an expert group to look into this matter.

The FSSAI said that the adverse effects of junk food — usually high in fat, sugar and salt content — are a matter of serious concern.

“The High Court of Delhi has directed the FSSAI to issue directions or guidelines on the subject (with respect to) school children…”

“While the said guidelines are being issued separately, it has been observed that the subject needs deeper examination (with respect to) all foods. It has, therefore, been decided to constitute an expert group on salt, sugar and fat in food products in India,” FSSAI said in its latest order.

The 11-member expert panel formed by FSSAI comprises doctors, dieticians and others from AIIMS, Ram Manohar Lohia Hospital and various other institutions.

The panel will recommend FSSAI on prescriptions of regulations for display of fat, sugar and salt on food products sold and served in eating joints or catering facilities, the order said.

On June 5, 2015, the FSSAI had banned Nestle’s Maggi saying it was “unsafe and hazardous” after tests found presence of lead and monosodium glutamate above permissible limits.

Nestle India had also withdrawn the instant noodles brand from the market.

Following the Maggi fiasco, FSSAI had ordered testing of noodles, pastas and macaroni brands such as Top Ramen, Foodles and Wai Wai sold and manufactured by seven companies, to check compliance with the norms.

Categories: NEWS

ரசாயன கல் வைத்து பழுக்க வைத்த 2 டன் மாம்பழம், சாத்துக்குடி பறிமுதல்

19,June, 2015 1 comment
 

வேலூர், ஜூன் 19:

வேலூர் மாந க ராட்சி பகு தி களில் ரசா யன கற் கள் மூலம் மாங் காய், சாத் துக் குடி உள் ளிட்ட வை களை பழுக்க வைத்து விற் பனை செய் வ தாக உணவு பாது காப்பு துறை யி ன ருக்கு புகார் வந் தது.

இதை ய டுத்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் செந் தில் கு மார், மாந க ராட்சி சுகா தார அலு வ லர் வசந்த் திவா கர் மற் றும் அதி கா ரி கள் வேலூர் மாங் காய் மண் டி யில் உள்ள 15 கடை களில் நேற்று அதி ர டி யாக சோதனை செய் த னர்.

அப் போது 7 கடை களில் ரசா யன கற் கள் மூலம் மாம் ப ழங் கள் பழுக்க வைத் தி ருப் பது தெரி ய வந் தது. இதை ய டுத்து அவற்றை பறி மு தல் செய் த னர். இது கு றித்து தக வ ல றிந்த கலெக் டர் நந் த கோ பால் விரைந்து சென்று பறி மு தல் செய் யப் பட்ட 1 டன் மாம் ப ழங் கள் மற் றும் 1 டன் சாத் துக் கு டி களை பார் வை யிட்டார்.

இதன் மதிப்பு ₹70 ஆயி ரம் ஆகும். இதை ய டுத்து மாந க ராட்சி ஊழி யர் கள், பறி மு தல் செய்த பழங் களை வாக னத் தில் ஏற் றிச் சென்று அழித் த னர். மேலும் ரசா யன கற் கள் மூலம் பழங் களை பழுக்க வைத்த கடை உரி மை யா ளர் களுக்கு நோட்டீஸ் வழங் கப் ப டும் என அதி கா ரி கள் தெரி வித் த னர். சோத னை யின் போது தாசில் தார் பால கி ருஷ் ணன் உடன் இருந் தார்.

Categories: DISTRICT-NEWS, Vellore

புளிப்பு பால்பேடா: அரசு நிறுவனமான ஆவினுக்கும் வந்தது சிக்கல்!

19,June, 2015 Comments off
 

கோவை: தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எதுவும் இல்லாமல், மோசமான தரத்தில் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் பால்பேடா மீது புகார் எழுந்துள்ளது.

மேகி நூடுல்ஸ், நெஸ்லே பால் பவுடர், செர்லக், காம்ப்ளான் என அடுத்தடுத்த உணவு பொருட்கள் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் உணவு பொருளும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத் துறையிடம் ஆவின் நிறுவனம் மீது புகார் தெரிவித்துள்ளார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் புஸ்பானந்தம்.

கோவை, இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் புஸ்பானந்தம். இவர் நேற்று (17-ம் தேதி) தடாகம் ரோட்டில் உள்ள ஆவின் பால் பூத்தில் பால் பேடா ஒன்றை வாங்கியிருக்கிறார். வீட்டுக்கு சென்று சாப்பிட்ட போது, அதன் சுவை புளிப்பாக இருந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து பால்பேடாவின் தரமும் மோசமானதாக இருந்ததை உணர்ந்த புஸ்பானந்தம், அதன் காலாவதி தேதியை பார்த்த போது, அதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எதுவுமே இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து ஆவின் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கவும், கோவை மாவட்டத்தில் விற்பனையாகும் பால் பேடாவை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக புஸ்பானந்தம் கூறுகையில், "நேற்று இரவு தடாகம் ரோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ரூ.40க்கு பால்கோவா வாங்கினேன். வீட்டுக்கு வந்து சாப்பிட்ட போது ரொம்ப மோசமா இருந்துச்சு. இனிப்புக்கு பதிலா புளிச்சது. அதனால சாப்பிடாம அப்படியே வைச்சுட்டு, பாக்கெட்டுல காலாவதி தேதியை சரிபார்த்தேன். ஆனா அதுல விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எதுவுமே இல்லை. எனவே, இதை உடனே தடை செய்யணும். இதை விற்பனை செய்த கடை நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

ஆனால், இந்த புகார் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அரசு நிறுவனமான ஆவின் மீதான புகார் என்பதால், இந்த புகார் மீது அடிப்படையான நடவடிக்கைகளை கூட அதிகாரிகள் எடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

ஆவின் நிறுவன பொருளை எப்படி ஆய்வுக்குட்படுத்துவது? ஆவின் கடையில் எப்படி ஆய்வு நடத்துவது என தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

Categories: NEWS

காலாவதியான உணவு பொருட்கள் விழுப்புரம் பகுதியில் பறிமுதல்

19,June, 2015 1 comment

imggallery

விழுப்புரம்:குழந்தைகள் சாப்பிடும் காலாவதியான வத்தல் பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் எம்.ஜி., ரோடு மற்றும் அமிர்தராஜ் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் குழந்தைகள் சாப்பிடும் மக்காச்சோளம் வத்தல்கள் காலாவதி தேதிக்கு பின்பும் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையில் அலுவலர்கள் அங்கு சோதனை செய்தனர். அப்போது, மூன்று மாதங்களுக்கு முன் காலாவதியான வத்தல் பாக்கெட்டுகளை கடந்த 13ம் தேதி முதல் விற்பனை செய்தது தெரிய வந்தது.

பின்னர், 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான பாக்கெட்டுகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அப்போது, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், சமரேசன், முருகன், கதிரவன், சரவணக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram

நெய்வேலியில் மீண்டும் ‘காம்ப்ளான்’ மாவில் புழு, வண்டுகள்: குடித்த 2 சிறுவர்களுக்கு மயக்கம்!

19,June, 2015 1 comment

 

complan-plain-refill-500gm-tall-pack

நெய்வேலி, ஜூன் 18 – ‘காம்ப்ளான்’ குடித்த 2 சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே மேல்பாதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர், அருகில் உள்ள மருந்துக்கடையில் ‘காம்ப்ளான்’ வாங்கியுள்ளார்.

இதனை தனது, இரு மகன்களுக்கும் பாலில் கலந்து கொடுத்தார். அதனைக் குடித்த சிறிது நேரத்தில் சிறுவர்கள் இருவருக்கும் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் தனது மகன்கள் இருவரையும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

சிறுவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர், சிறுவர்கள் குடித்த பாலில் கலக்கப்பட்ட பொருளால் தான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதைக் கேட்டு, பாலமுருகன் உடனடியாக வீட்டிற்கு வந்து, காம்ப்ளான் மாவை எடுத்துப் பார்த்தார்.

அப்போது அதில் அதிக அளவில் புழுக்கள் மற்றும் வண்டுகள் நெளிந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சம்பந்தப்பட்ட மருந்துக் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், நெய்வேலி ஆர்ச்கேட் அருகே மாருதி நகரில் உள்ள காம்ப்ளான் நிறுவனத்திற்கு நேரில் சென்று அங்கு காலாவதியான காம்ப்ளான் பொருட்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தார். இதே போன்று கடலூர் போடிச்செட்டித் தெருவில் உள்ள காம்ப்ளான் கிடங்கிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கிடையே, பாலமுருகன் வீட்டில் வாங்கி வைத்திருந்த ‘காம்ப்ளான்’ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள கிங்ஸ் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கிருந்து வரும் முடிவின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுச் சட்ட விதிகளின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

காய்கறிகளில் அதிகமான பூச்சிகொல்லி மருந்துகள் தமிழக அரசுக்கு கேரள உணவு பாதுகாப்பு ஆணையர் கடிதம்

19,June, 2015 Comments off

 

திருவனந்தபுரம்,
தமிழகத்தில் விளையும் காய்கறிகளில் அதிகமான பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தபடுகின்றன இதனை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு கேரள அரசின் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியுருந்ததாவது:
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும் 80 சதவீதம் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில் அதிக அளவு பூச்சிகொல்லிகள் பயன்படுத்தபட்டு வருகின்றது. இதனால் நீரிழிவு நோய்,புற்றுநோய்,உடல் பருமன் ஆகிய நோய்கள் இதனால் வர வாய்ப்பு உள்ளது. கேரள அரசு உணவு அதிகாரிகள் தமிழகத்தில்  உள்ள 9 மாவட்டங்களில் விளையும் காய்கறிகளை நேரிடையாக சென்று ஆய்வு செய்தனர். அதில் அளவுக்கு அதிகமான பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தபட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் என்று கூறினார். இவ்விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையீட்டு தீர்வு காண வேண்டும் என்று கேரள உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அனுபமா டிவி கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரளாவில் ஓணம் பண்டிகை வர இருக்கிறது இந்த பண்டிகையின் போது கேரள மக்கள் தங்களது வீடுகளிலேயே காய்கறிகளை பயிரிட வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி உம்மண் சாண்டி கேட்டுகொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories: NEWS

விருத்தாசலம், திட்டக்குடியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

19,June, 2015 Comments off

imggallery

விருத்தாசலம்:விருத்தாசலம், திட்டக்குடி பகுதி களிலுள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்த குழந்தைகள் சாப்பிடும் உணவு பொருட்களை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமை யிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.அவர், நிரூபர்களிடம் கூறுகையில், நெய்வேலியில் புழு, பூச்சிகளுடன் இருந்த காம்பளான் உணவை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உடல் நலம் பாதித்தனர்.
இதையடுத்து, திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளிலுள்ள பலசரக்கு கடைகள், பஸ் நிலைய கடைகளில் விற்கப்படும் குழந்தைகள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு, காலவதி தேதி, தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.பொது மக்கள் உணவுப் பொருட்களை கடைகளில் வாங்கும்போது கவனமுடன் வாங்க வேண்டும்.காம்ப்ளான், ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற உணவுப் பொருட்களை வாங்கி, பிரித்து சிறிதளவு பிளேட்டில் கொட்டி புழு, பூச்சி உள்ளதா எனப் பார்த்து, பின்னர், கண்ணாடி பாட்டில்களில் பாதுகாப்பாக வைத்து, சாப்பிட வேண்டும்’ என்றார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS