Archive

Archive for 24,June, 2015

விரைவில் பீர், விஸ்கி, மதுபான வகைகள் மீதும் உணவுப் பாதுகாப்பு சோதனை

24,June, 2015 Comments off

நாட்டில் விற்பனையாகும் மதுபான வகைகளின் தரநிலைகளையும், பாதுகாப்பையும் சோதனைக்குட்படுத்தும் வரைவு அறிக்கை ஒன்றை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் 2 மாதங்களில் உருவாக்கவுள்ளது.
மேகி உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் நூடுல்ஸ் விவகாரம், பால்பொருட்களின் தரநிலைகளை கண்காணிப்பு வலைக்குள் கொண்டு வந்ததைப் போல் பீர், விஸ்கி உள்ளிட்ட மதுபான வகைகளின் தரமும் சோதனையின் கீழ் விரைவில் கொண்டு வரப்படுகிறது.
இது குறித்து உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “அடுத்த 2 மாதங்களில் மதுபான வகைகளைன் தரநிர்ணயத்தை பரிசோதிக்கும் வகையிலான வரைவறிக்கை தயாரிக்கப்படும். மக்கள் இது குறித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்” என்றார்.
பீர், விஸ்கி, வோட்கா, ஜின் அல்லாது பீர்களும் தரச் சோதனைக்குட்படுத்தப் படவுள்ளது.
மதுபானங்களுக்கான தரநிர்ணய நிலைகள் உறுதி செய்யப்பட்டவுடன், அனைத்து மாநிலங்களுக்கும் இது தெரிவிக்கப்படும். இதனையடுத்து அவர்கள் இதனைக் கவனித்து வரும் குறிப்பிட்ட துறையினருக்கு அறிவுறுத்தலாம் என்று கூறுகிறார் அந்த மூத்த அதிகாரி.
இதன்படி, மதுபான தயாரிப்பு, அவை பாதுகாத்து வைக்கப்படும் குடோன், விநியோக முறைகள் ஆகியவையும் பாதுகாப்பு பரிசோதனை வளையத்துக்குள் வரவுள்ளது.

Categories: NEWS

Draft Food Safety and Standards (Contaminants, Toxins and Residues) Amendment Regulation, 2015 regarding limits of heavy metals in food. (Uploaded on: 24.06.2015)

24,June, 2015 Comments off

 

Draft Food Safety and Standards (Contaminants, Toxins and Residues) Amendment Regulation, 2015 regarding limits of heavy metals in food. [Amendment in the Food Safety and Standards (Contaminants, Toxins and Residues) Regulation, 2011: Regulation 2.1]. (Uploaded on: 24-06-2015)

The objections or suggestions, if any, may be addressed as per the attached format to the Chief Executive Officer, Food Safety and Standards Authority of India, 03rd Floor, Food and Drug Administration Bhawan, Kotla road, New Delhi. 110002. The objections or suggestions may also be mailed to regulation@fssai.gov.in on or before 24.08.2015.

Categories: DRAFT

கேரள அரசின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை: இந்திய பயிர் பாதுகாப்பு கூட்டமைப்பு தகவல்

24,June, 2015 Comments off

சென்னை, ஜூன்.24-
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகளில் கூடுதலாக பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதாக கேரள அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றஞ்சாட்டியது. இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இதுதொடர்பாக அரசு சாரா அமைப்பான “இந்திய பயிர் பாதுகாப்பு கூட்டமைப்பு” (சி.சி.எப்.ஐ.) தலைவர் ரஜ்ஜூ ஷ்ராப், மக்கள் தொடர்பு மற்றும் கொள்கை ஆலோசகர் எஸ்.கணேசன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்து கேரளாவிற்கு அனுப்பி வரும் தமிழக விவசாயிகள் மீது கேரள வேளாண் பல்கலைக்கழகம் (கே.ஏ.யு.) மற்றும் கேரள உணவு பாதுகாப்பு ஆணையம் வேண்டுமென்றே அவதூறு கூறி தவறான பிரசாரம் செய்து வருகின்றன.
கேரள வேளாண் பல்கலைக்கழகம் அளித்த புள்ளிவிவரத்தை வைத்தே அந்த பல்கலைக்கழகம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் தெரிவித்த கருத்துகள் தவறானவை என்பது தெரியவருகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளதா என்பதை அறிவியல் அடிப்படையில் வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் அணுக வேண்டும்.
அவர்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. உண்மைக்கு புறம்பானவை. தவறான பிரசாரங்களை கேரள அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால், தமிழக விவசாயிகளுக்கும், கேரள நுகர்வோர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
இந்த குற்றச்சாட்டுகளை கேரள உணவு பாதுகாப்பு ஆணையாளர் மற்றும் கேரள வேளாண் பல்கலைக்கழகம் சட்டப்படி வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் விளைபொருட்களை தடை செய்யவோ அல்லது பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை கட்டுப்படுத்தவோ கேரள அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பயன்படுத்தி கேரளாவில் சிலர் வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதில் ஒருவர், “இதை புத்தகமாக எழுதி இருக்கிறார். மற்றொருவர், பூச்சிக்கொல்லி மருந்து இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை தான் தயாரித்த ரசாயனத்தில் கழுவினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Categories: NEWS

ஆனித்திருமஞ்சன விழா அன்னதான தயாரிப்பு கூடத்தில் உணவு அதிகாரி ஆய்வு

24,June, 2015 Comments off
 

சிதம் ப ரம், ஜூன் 23:

சிதம் ப ரம் ஸ்ரீந ட ரா ஜர் கோயி லில் கடந்த 15ம் தேதி முதல் ஆனித் தி ரு மஞ் சன திரு விழா நடந்து வரு கி றது. இத னை யொட்டி சிதம் ப ரம் மேல வீதி பெல் காம் சத் தி ரத் தில் கோவை சிவப் பி ர காச சுவா மி கள் சார் பில் பக் தர் களுக்கு 10 தினங் களுக்கு அன் ன தா னம் வழங் கப் ப டு கி றது. இந்த அன் ன தா னம் வழங் கும் இடத் தில் நேற்று கட லூர் மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி ராஜா தலை மை யி லான உணவு பாது காப்பு அலு வ லர் கள் திடீர் ஆய்வு மேற் கொண் டார் கள். பக் தர் களுக்கு வழங் கப் ப டும் உணவு தர மா ன தாக உள் ள தா? சமைக் கும் இடம் சுகா தா ர மாக உள் ளதா என் றும் ஆய்வு செய் த னர். ஆய் வின் போது உணவு பாது காப்பு அலு வ லர் கள் பத் ம நா பன், குண சே க ரன், ஏழு மலை, அருள் மொழி ஆகி யோர் உட னி ருந் த னர்.

சிதம் ப ரம் ஆனித் தி ரு மஞ் சன திரு வி ழா வில் மேல வீதி பெல் காம் மண் ட பத் தில் பக் தர் களுக்கு வழங் கப் ப டும் உணவை கட லூர் மாவட்ட உணவு அதி காரி ராஜா ஆய்வு செய் தார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

Minutes of the 13th Meeting of Central Advisory Committtee of FSSAI was held on 08th January 2015. (Uploaded on: 22-06-2015).

24,June, 2015 Comments off
Categories: MINUTES

சிதம்பரத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

24,June, 2015 Comments off

சிதம்பரம் மேலவீதியில் உள்ள அன்னதான கூடத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆய்வாளர்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனிதிருமஞ்சன தரிசன உற்சவத்தை முன்னிட்டு மேலவீதி பெல்காம் சத்திரத்தில் வள்ளலார் அறக்கட்டளை சார்பில் 10 நாள்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், அன்னதான கூடத்தில் திங்கள்கிழமை பங்கதர்களுக்கு வழங்குவதற்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா தலைமையில், ஆய்வாளர்கள் ஜே.பத்மநாபன் (சிதம்பரம்), அருண்மொழி (கீரப்பாளையம்), வி.குணசேகரன் (புவனகிரி), இ.ஏழுமலை (பரங்கிப்பேட்டை), சி.பழனிவேல் (திட்டக்குடி) ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது சமையல் கூடத்தை சுகாதாரமாக வைத்திருக்கவும், சமையல் செய்பவர்கள் சுகாதாரமாக இருக்கவும் வேண்டும் என உணவுப் பாதுகாப்பு அதிகாரி அறிவுரை வழங்கினார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS