Archive

Archive for 26,June, 2015

அடுத்த தலைமுறையை நோயின்றி வாழவிடுங்கள்!

26,June, 2015 Comments off

மேகி நுாடுல்ஸ்’ சர்ச்சை வந்த பின், உணவுப் பொருட்களில் காரீய நச்சுக் கலப்பு அபாயம் பற்றிய சிந்தனையும், அதைப் பற்றிய தகவல்களும் வந்து குவிகின்றன.இப்போது ஈயப் பாத்திரங்களில், சமைக்கும் வழக்கம் குறைந்திருக்கிறது. ஆனால் நாம் அதிகமாக பயன்படுத்தும் கருவிகள், பொருட்கள் மூலம் ஈயநச்சு கலக்கிறது.

பத்து லட்சம் துகள்களுக்கு, 2.5 துகள் ஈயநச்சு இருந்தால் பாதிப்பு இருக்காது என்றும், ஆனால், அது பத்து மடங்குக்கு மேல் அதிகமாக நாம் சாப்பிடும் பல உணவுப் பொருட்கள் மட்டும் அல்ல; மருந்துகள், சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியவற்றின் மூலமும் பரவுகிறது என்கின்றன ஆய்வுகள்.

பொம்மைகளில் உள்ள வண்ணத்தை நக்கும் குழந்தைகள், மண்ணில் நச்சு கலப்பு, பேட்டரிகளில் உள்ள நச்சு சுற்றுச்சூழலில் கலப்பு, மின்னணு கழிவுகளால் பாதிப்பு, பெட்ரோல் கசிவில் இருந்து கிளம்பும் வாயு, அதிக சிவப்பு கொண்ட மிளகாய் துாள், செயற்கை ரசாயன குங்குமம் என்று பல, இந்த நச்சுக்கு காரணமாகின்றன.

இதைக் கண்டறிய சிறந்த சோதனைகள், அதற்கு பின் அதைத் தடுக்க முற்றிலும் மாறுபட்ட உணவுகள் என்பதை, உடனடியாக அமல்படுத்த முடியாது. குறிப்பாக மிளகாய் பொடி, குறைவாக உள்ள சமையலுக்கு, நாம் மாறுவது எளிதானதல்ல. இதில் பணக்காரர்கள், ஏழைகள் என்ற பேச்சுக்கு இடமில்லை.அதே சமயம், நமது சராசரி ஆயுட்காலம், 64 வயதாக அதிகரித்திருப்பது மருத்துவ சாதனையின் அடையாளம்.

தமிழகத்தில், புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் மருத்துவ சேவைக்கு, 95 கோடி ரூபாயில் திட்டங்கள் துவங்கப்பட்டிருக்கின்றன. தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களில், மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் தரக் கட்டுப்பாட்டை கண்டறிந்து, அப்பொருட்களில் உள்ள கொலஸ்டிரால், கார்போஹைட்ரேட் அளவு உட்பட கலோரி தகவல்களுடன், தனி இலச்சினை பொறிக்கலாம். அதிக சோதனை ஆய்வுக்கூடங்கள், அதைக் கையாளும் தகுதியானவர்கள், இதை அமல்படுத்த தேவை.

இன்றைய நிலையில் அந்த சோதனைக் கூடங் களை வேளாண் கல்லுாரி, பெரிய மருத்துவ கல்லுாரிகளில் உள்ள அறிவியல் கூடங்களுடன் இணைத்து, அதைத் தரக்கட்டுப்பாடான பரிசோதனைக் கூடமாக்கி செயல்படுத்த புதிய நடைமுறைகளைக் கூட உருவாக்கலாம். உணவு பாதுகாப்பு தர நிர்ணயத்திற்கு, மத்திய அரசு புதிய நடைமுறைகளை உருவாக்கும் முன் வழிகண்டாக வேண்டும்.

இல்லாவிட்டால், சமுதாயத்தில் வாழும், 80 சதவீதம் பேர், ரத்த நாள, நரம்பியல் நோய்கள் ஆகியவற்றில் சிக்கி தவிப்பர் என்று மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிப்பது உண்மையாகலாம். அது நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லும் சொத்தாக மாறும் அபாயம் உள்ளது என்பதை யோசிக்க வேண்டும்.

Categories: NEWS

ஈரோட்டில் தனியார் பால் பண்ணைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

26,June, 2015 1 comment

ஈரோடு, ஜூன். 23–

ஈரோடு நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனியார் பால் பண்ணைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள கிருஷ்ணம்பாளையம் சின்னப்பா லேஅவுட் பகுதியில் உள்ள தனியார் பால் பண்ணையில் உணவு பாதுகாப்பு அதிகாரி கருணாநிதி தலைமையில் ஆய்வு நடந்தது.

இங்கு சுகாதாரமற்ற முறையில் பால்பண்ணை செயல்பட்டது தெரிய வந்தது. மேலும் பின்தேதியிட்டு பாலை விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதேபோல் பாலில் 6 சதவீத கொழுப்பு சத்தும், 9 சதவீத இதர சத்தும் இருக்க வேண்டும். ஆனால் இந்த பால் பண்ணையில் கொழுப்பு சத்து குறைவாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது.

அப்பண்ணையிலிருந்து பால் மாதிரி எடுக்கப்பட்டு கோவை உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முறைகேட்டையொட்டி அந்த தனியார் பால் பண்ணைக்கு அதிகாரிகள் முதல்கட்டமாக நோட்டீசு கொடுத்தனர்.

உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்ட பால் சோதனை செய்யப்பட்டு அதில் வேறு ஏதேனும் முறைகேடு செய்திருப்பின் அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அதிகாரிகள் மூலப்பாளையம், சாஸ்திரி நகர், ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள பால்பண்ணை உள்பட 5 பால் பண்ணைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 3 பண்ணைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

FOOD 1

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பால், தண்ணீரை பரிசோதிக்க வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு விட்டதை தொடர்ந்து ஈரோட்டில் இன்று தனியார் பால் பண்ணைகளில் அதிரடி சோதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories: NEWS

கேரள சோதனைச் சாவடிகளில் உணவு பொருள் தர பரிசோதனைக்கூடம்: பொருட்களை ஆய்வு செய்ய நடவடிக்கை

26,June, 2015 1 comment

திருவனந்தபுரம், ஜூன்.25-

உணவு பொருட்களின் தர பரிசோதனைக்காக நாட்டிலேயே முதல் முறையாக கேரள சோதனைச்சாவடிகளில் நடமாடும் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளில் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி நச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசிடம் சமீபத்தில் கேரளா தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் தங்கள் மாநிலத்துக்கு வரும் பால், எண்ணெய், குடிநீர் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட சமையல் பொருட்களை பரிசோதனை செய்வதற்காக நடமாடும் ஆய்வுக்கூடங்களை கேரள அரசு அமைக்கிறது. இந்த நடமாடும் ஆய்வுக்கூடங்கள் மாநிலத்தின் குறிப்பிட்ட சில சோதனைச்சாவடிகளில் அமைக்கப்படுகின்றன. எனினும் இதற்கான இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 3 நடமாடும் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த ஆய்வுக்கூடங்களை அமைக்கும் நிறுவனத்தை தேர்வு செய்யும் பொறுப்பு கேரள மாநில மருத்துவப்பணிகள் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்த நடமாடும் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்யும் உணவு மாதிரிகளில் அதிகப்படியான மாசுக்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அடுத்தகட்ட பரிசோதனைக்காக பின்னர் அவை, அருகில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனினும் பால், எண்ணெய், பால் பொருட்கள் மற்றும் குடிநீர் போன்ற சமையல் பொருட்கள் மட்டுமே இந்த நடமாடும் ஆய்வுக்கூடங்களில் பரிசோதிக்கப்படும். காய்கறிகள் போன்ற பொருட்கள் இந்த ஆய்வுக்கூடங்களில் பரிசோதிக்க முடியாது என்று கேரள மாநில உணவு பாதுகாப்பு இணை கமிஷனர் அனில் குமார் தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் இந்த நடமாடும் உணவு ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுவதாக கூறிய அவர், அந்த வகையில் உணவு பாதுகாப்பு விஷயத்தில் பிற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக கேரளா திகழ்வதாகவும் தெரிவித்தார்.

Categories: NEWS

குழந்தைப் பால் மா­வைத்­ திரும்பப்பெற உத்தரவு

26,June, 2015 Comments off

பெய்ஜிங்: சீனாவில் குழந்தைகளுக்கான பால் மாவு தயாரிக்கும் மூன்று நிறுவனங்கள் உடனடியாக அவற்றின் பால் மாவினை திரும்பப் பெறுமாறு அங்குள்ள உணவு பாதுகாப்பு கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.

அந்த மூன்று நிறுவனங்கள் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பால் மாவு வகைகளில் அதிக அளவு நைட்ரேட் சேர்க்கப்பட்டிருப்பதால் அவற்றை விற்பதை அந்நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்று சீனாவின் உணவு பாதுகாப்பு கண்காணிப்புக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

சட்டவிதிமுறைகளை அந்நிறுவனங்கள் மீறியிருந்தால் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Categories: NEWS

பண்ருட்டி பஸ் நிலைய கடைகளில் உணவுபாதுகாப்பு அதிகாரி ஆய்வு

26,June, 2015 1 comment

பண்ருட்டி : பண்ருட்டி பஸ் நிலைய கடைகளில் உணவுபாதுகாப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கந்தசாமி, ஏழுமலை,செந்தில்ராஜ்குமார் ஆகியோர், டீக்கடைகளில் தரமான டீத்தூள் பயன்படுத்தப்படுகின்றதா என ஆய்வு செய்தனர்.மேலும், கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் தயாரிப்பு தேதி இல்லாத உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Categories: NEWS