Archive

Archive for August, 2015

Public Notice for engagement of legal assistance for framing regulations for FSSAI. (Uploaded on: 31.08.2015)

31,August, 2015 Comments off

CLICK HERE TO DOWNLOAD PDF FILE

Food Safety and Standards Authority of India
(Legal Division)
FDA Bhawan, Kotla Road, New Delhi
Public Notice
(for engagement of legal assistance for framing regulations for FSSAI)
Dated, the 31st August 2015
In the light of recent judgements of various courts relating to food safety, FSSAI has decided to engage legal assistance for formulation of Regulations on an urgent basis to govern (i) product approvals, (ii) imports, and (iii) procedures of issuing guidelines and administrative instructions.
Interested Legal firms/ lawyers, who are not involved in litigation against the FSSAI in any manner, may apply to the Director (Legal) by 1.00 PM on 07.09.2015 with details of qualifications, experience, knowledge of food laws, number of legal professionals (with qualifications) at their disposal, expected remuneration etc. in the format given below.
The successful legal firm/ lawyer would have to undertake to not enter into any litigation/ legal advice against FSSAI, directly or indirectly, on food related matters at least for a period of five years from the date of notification of such regulations.
Sd/-
(Dr. Sandhya Kabra)
Director
Format of Application
Sr. No.
Subject
Description
1.
Name of the Applicant (Firm/ Lawyer)
2.
Address:
3.
Contact person and contact details
4.
Experience in drafting laws/ regulations/ legal research/ litigation (minimum 3 years)
5.
Professional experience in respect of the FSS Act, 2006 and regulations thereunder
6.
Details of Legal Professionals proposed to be deployed for the assignment
7.
Qualifications of the Legal Professionals
8.
Presently involved in any litigation against FSSAI, directly or indirectly
Yes/No
9.
Acceptance of the condition not to litigate/ tendering of legal advice against FSSAI for a period of 5 years
Yes/No
10.
Expected remuneration for drafting complete Regulation on each of the three subjects.

Categories: NEWS

ஆவின் பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி பொதுமக்கள் அதிர்ச்சி

31,August, 2015 1 comment

 

கோவை
கோவையில் ஆவின் பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி
கோவை மரக்கடை தியாகராஜ புதுவீதியில் மளிகை கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் ஆவின் பால் முகவர்கள் மூலமாக தினமும் காலை, மாலையில் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல ஆவின் பால் முகவர் அந்த மளிகை கடைக்கு பால் பாக்கெட்டுகளை கொடுத்து விட்டு சென்றார்.
இந்த பால் பாக்கெட்டுகள் 28.8.2015 என தேதியிட்டு சீல் வைக்கப்பட்டிருந்தன. இதில் அரை லிட்டர் பால் பாக்கெட்டை ஒருவர் வாங்கினார். அந்த பால் பாக்கெட்டிற்குள் ஏதோ மிதப்பது போல தெரிந்தது. உடனே அவர் கடைக்காரரிடம் கொடுத்து பாக்கெட்டில் ஏதோ மிதக்கிறது என்று கூறியுள்ளார்.
அதை ஊற்று பார்த்த போது, பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி மிதப்பது இருந்தது. இது குறித்து கடைக்காரர் பாலை வினியோகித்த முகவரிடம் புகார் தெரிவித்தார்.
பொதுமக்கள் அதிர்ச்சி
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:–
கோவையில் சமீப காலமாக ஆவின் பால் தொடர்பாக பல்வேறு புகார்கள் வருகின்றன. சில மாதங் களுக்கு முன்பு தடாகம் சாலையில் வினியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டு போயிருந்தன. ஒரு பாக்கெட்டில் புழு இருந்தது. ஒரு ஆவின் பூத்தில் வாங்கிய பால் கோவா கெட்டுப்போனதாக உணவு பாதுகாப்பு துறையிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் பால் கோவா ஆகியவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி ஒன்று கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரப்பான் பூச்சி இருப்பதை பார்க்காமல் பாலை குடித்திருந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும்.
எனவே ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு வினியோகிக்கும் பாலை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஆய்வு
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘ஆவின் பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி விழுந்தது பற்றி புகார் வந்துள்ளது. அதன் மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது பற்றி விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

பிளாஸ்டிக், பாலிதீன் கவர்களில் உணவு பண்டங்களுக்கு தடை? மத்திய அரசின் கருத்தை கேட்கிறது பசுமை தீர்ப்பாயம்

31,August, 2015 Comments off

புதுடில்லி: மருந்து மற்றும் உணவுப் பொருட்களை, பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதை, முழுமையாக தடை செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, அந்த நீதிமன்றம், மத்திய அரசின் கருத்தை கேட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, ‘ஹிம் ஜக்குருதி’ என்ற அமைப்பு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், ‘மருந்து மற்றும் உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகின்றன; இது, உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். எனவே, பிளாஸ்டிக் பொருட்களில் இவற்றை விற்பனை செய்வதற்கு, தடை விதிக்க வேண்டும்’ என, கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம், ‘நோட்டீஸ்’ அனுப்பியிருந்தது. இந்நிலையில், நீதிபதி ஸ்வந்தர் குமார் தலைமையிலான, ‘பெஞ்ச்’ முன், அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது;
அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:இது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. இது தொடர்பாக, உறுதியான முடிவு எடுக்கப்பட வேண்டியது அவசியம். பொதுநலன் கருதி, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பதில் மனு, பொறுப்பற்றதாக உள்ளது. மேலும், முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து, அமைச்சகத்தின் இணை இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரி, பதில் மனு தாக்கல் செய்துள்ளது, கண்டனத்துக்குரியது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னை குறித்து, அமைச்சகத்தின் முக்கியமான பதவியில் இருப்போர் தரப்பில் தான், பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். மருந்து மற்றும் உணவுப் பொருட்களை, பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு, முழுமையான தடை விதிப்பது குறித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுகாதார அமைச்சகம், மருந்து வாரியம், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆகியவை, பதிலளிக்க வேண்டும். இது தொடர்பாக, தனியார் அமைப்புகளும் கருத்து தெரிவிக்கலாம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை, செப்., 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ரசாயன கலப்பு?


‘ஹிம் ஜக்குருதி’ அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: ‘பிளாஸ்டிக் பாட்டில்களில், மருந்துகள் அடைக்கப்பட்டு உள்ளன; அந்த பாட்டில்கள், வீடு அல்லது கடையில் உள்ள சீதோஷ்ண
நிலையில் இருக்கும் போதே, அவற்றில், குரோமியம், ஆன்ட்டிமோனி, காரீயம் போன்ற ரசாயனங்கள் கலந்திருப்பது, உறுதி செய்யப்பட்டு உள்ளது’ என, சமீபத்தில் நடந்த, மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதியோர், குழந்தைகள் தான், மருந்து மற்றும் உணவுப் பொருட்களை, அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பிளாஸ்டிக் பாட்டில், பாக்கெட்டுகளில் இவை விற்பனை செய்யப்படுவதால், அவர்களின் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆய்வகம் சரியல்ல!


பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கூறியுள்ளதாவது:பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள மருந்து பொருட்களில், ரசாயன கலப்பு உள்ளதாக கூறப்படுவது உண்மையல்ல. இது தொடர்பான பரிசோதனையை நடத்திய ஆய்வகம், அங்கீகரிக்கப்பட்டது அல்ல; எனவே, இந்த பரிசோதனையை ஏற்க முடியாது. இவ்வாறு அந்த நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

மத்திய அரசுக்கு கண்டனம் :


* வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுப்பதற்காக, 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுதப்பட்ட டீசல் வாகனங்களை, டில்லியில் இயக்குவதற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
* இது தொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ’10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில், 7 சதவீத வாகனங்கள் தான், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன; அதுவும், இந்த வாகனங்களால், மிகக்குறைந்த மாசு தான் ஏற்படுவதாக, ஆய்வில் தெரியவந்து உள்ளது’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
* இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பசுமை தீர்ப்பாயம், ‘வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை அறிவதற்கு, எட்டுவிதமான சோதனைகள் உள்ளன; ஆனால், இதில் இரண்டு விதமான சோதனைகளை மட்டுமே, தற்போது மேற்கொள்ளப்படுகின்றன’ என, தெரிவித்து உள்ளது.

எந்த பொருட்களுக்கு சிக்கல் வரும்?


பிளாஸ்டிக் பாக்கெட் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் பொருட்கள்.
பால்,
ஹேர் ஆயில்
ஷாம்பூ
குளிர்பானங்கள்
பிஸ்கட் வகைகள்
மருந்துகள்

Categories: NEWS

குடிநீர் கேன்களின் தரம் குறித்த ஆய்வு உணவு பாதுகாப்பு துறை தீவிரம்

31,August, 2015 Comments off

கோவை:கோவை மாவட்டத்தில் கேன்களில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடிநீரின் தரம் குறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர்.கேன் குடிநீர் வினியோகம் செய்யும் ஒரு சில நிறுவனங்கள், போலி ஐ.எஸ்.ஐ., முத்திரைகளை பயன்படுத்தி, குடிநீர் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து, தர நிர்ணய துறை சார்பில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி, அந்நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்போது உணவு பாதுகாப்பு அதிகாரிகள், குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை உணவுப் பிரிவு நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், 70 குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகள் ஆய்வில் மூன்று நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ., முத்திரையை தவறாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.தற்போது பல நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ., தரச்சான்றுடன் செயல்படுகின்றன. இருப்பினும் அந்நிறுவனங்களின் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: NEWS

Draft Food Safety and Standards (Food Product Standards and Food Additives) Amendment Regulation, 2015 and Food Safety and Standards (Packaging and labelling) Amendment Regulation, 2015 dated 30.07.2015 with respect to the use of Phytosterols as Food Ingredient.

29,August, 2015 Comments off
Categories: DRAFT

Food Safety and Standards (Food Product Standards and Food Additives) Amendment Regulation, 2015 relating to levels of Trans Fatty Acid (TFA) in partially hydrogenated vegetables oils dated 04th August, 2015.

29,August, 2015 Comments off
Categories: GO&NOTIFICATION

The milk you drink is unsafe: Chennai lab

29,August, 2015 1 comment
 

Bengaluru: Caution! You better look into the quality of milk being delivered at your doorstep. The National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL) in Chennai has reported that one of the three randomly picked samples of Nandini Full Cream Milk in Chennai tested positive for a pesticide content.

The report said the presence of Cypermethrin, a pesticide, in the milk was 40% higher than the limit prescribed by the Food Safety and Standards Authority of India . The samples were sent by Gaurav Maheshwari, Founder, Wisetummy.com – which is an online nutritional start-up. It had earlier tested Maggi and other noodle samples and found them safe.

“I strongly feel that consumers should be informed about their food choices. Cypermethrin is a pyrethoid insecticide. The World Health Organisation classifies it as ‘moderately hazardous’,” Mr Maheshwari said.

“Dairy products should not contain hazardous content even in small quantities. Even if one sample has been tested positive, it is alarming as babies consume milk and its products the most,” said Dr Thuppil Venkatesh, professor emeritus, St John’s Medical College who is also the national chairman, Indian Society for Lead Awareness and Research.

KMF director: Is it our milk?

Ravikumar Kakade, Director (Marketing), Karnataka Milk Federation said, “It is a bolt from the blue for me and we are totally ignorant of this test. Such tests are subjected to a protocol. It should be done in the presence of the manufacturer. Is it even our milk?”

Categories: NEWS

Rs 2,05,000 fine imposed under Food Safety Act in Ganderbal

29,August, 2015 Comments off
 

Ganderbal:

The Court of Adjudicating officer under Food Safety Act (FSA)-2006 (Additional District Magistrate Ganderbal) Syed Shahnawaz Bukhari today imposed a fine as Penalty of Rs 2,05,000 on different food business operators, who were selling/manufacturing “misbranded and substandard” food items to the consumers.

Meanwhile, the Additional District Magistrate Ganderbal directed the concerned department to ensure routine market checking in the district, so that wholesome and quality food is made available to the general public.

Categories: NEWS

சேலம் அருகே உணவுக்கழக குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு மாதிரிகள் சேகரிப்பு

29,August, 2015 Comments off

சேலம், ஆக.29:சேலத்தை அடுத்த சேலத் தாம் பட்டி யில் இந் திய உண வுக் க ழக குடோன் கள் செயல் பட்டு வரு கி றது. இங்கு மொத் தம் ஏழு குடோன் கள் உள் ளன. இந்த குடோன் களில் 27 ஆயி ரம் டன் ரேஷன் அரிசி மூட்டை கள் உள் ளன. இங்கு இருப்பு வைக் கப் பட்டுள்ள உண வுப் பொ ரு ளில் வண் டு கள் இருப் ப தாக கூறி சேலம் கலெக் டர் சம் பத் துக்கு புகார் சென் றது. அவ ரது உத் த ர வின் பேரில் உணவு பாது காப் புத் துறை சேலம் மாவட்ட அலு வ லர் டாக் டர் அனு ராதா, அதி கா ரி கள் ஜெக நா தன், இளங் கோ வன், சிரஞ் சீவி உள் ளிட்டோர் நேற்று காலை குடோன் களை ஆய்வு செய் த னர். அப் போது குடோன் களில் வைக் கப் பட்டி ருந்த அரிசி மூட்டை களில் வண்டு, பூச் சு கள் இருப் பதை அதி கா ரி கள் கண் டுப் பி டித் த னர்.

இதை ய டுத்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் குடோன் மேலா ளர் வீர ம ணி யி டம், குடோனை எவ் வாறு பரா ம ரிக்க வேண் டும் என் பது குறித்து நோட்டீஸ் வழங் கி னர். மேலும் குடோன் களில் இருந்து அதி கா ரி கள் மாதி ரி களை சேக ரித் த னர். அவற்றை உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு ஆய் வுக்கு அனுப் பி யுள் ள னர்.

இது குறித்து உணவு பாது காப் புத் துறை சேலம் மாவட்ட அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறி ய தா வது: சேலத் தாம் பட்டி இந் திய உண வுக் க ழக குடோன் களில் உள்ள உண வுப் பொ ரு ளில் வண் டு கள் இருப் ப தாக வந்த புகா ரின் அடிப் ப டை யில் ஆய்வு செய் தேன். அப் போது குடோன் களில் வைக் கப் பட்டி ருந்த அரிசி மூட்டை களை பிரித்து ஆய்வு செய் த போது, வண் டு கள் இருப் பது கண் டுப் பி டிக் கப் பட்டது.

இதை ய டுத்து குடோன் மேலா ள ரி டம் நோட்டீஸ் வழங் கப் பட்டுள் ளது. மேலும் உண வுப் பொ ரு ளில் பூச் சிக் கொல்லி மருந்து அடிப் ப வர் கள் கவ சம் அணிந்து மருந்து அடிக்க வேண் டும். அரிசி மூட்டை களை அதிக நாட் களில் இருப்பு வைக் கக் கூ டாது.

முத லில் வரும் அரிசி மூட்டை களை முத லில் அனுப்பி வைக் க வேண் டும். மேலும் தரை யில் இருந்து அரை அடி உய ரத் தில் அரிசி மூட்டை களை அடுக்கி வைக்க வேண் டும். சுவற் றில் இருந்து மூன்று அடி இடை வெளி விட்டு மூட்டை களை வைத்து பரா ம ரிக்க வேண் டும். வண்டு, பூச் சி கள் புகாத அள வில் மூட்டை பாது காக்க வேண் டும் என்று அறி வு றுத் தப் பட்டுள் ளது.

இவ் வாறு டாக் டர் அனு ராதா கூறி னார்.

Categories: NEWS