Archive

Archive for 5,August, 2015

Press Release-FSSAI-05.08.2015. (Uploaded on: 05-08-2015)

5,August, 2015 1 comment

FSSAI_Press Release_05_08_2015

Categories: NEWS

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது: எப்.எஸ்.எஸ். ஏ.ஐ . அறிவிப்பு

5,August, 2015 Comments off

புதுடில்லி: மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு தான் என உணவு பாதுகாப்பு தர நிர்ண ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வரும் தெரிகிறது.நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் உடலுக்கு கேடு விளைவிக்கும் எம்.எஸ்.ஜி. எனப்படும் மக்னீஸியம் சோடியம் குளுமனேட் எனப்படும் உப்பு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் இருப்பதாக உ.பி. மாநில உணவு பாதுகாப்பு தர ஆணையம் கடந்த ஜுன் மாதம்உறுதி செய்ததையடுத்து நாடு முழுவதும் மேகி நூடுல்சிஸ் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் மேகி நூடுல்சின் 5 மாதிரிகளை உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமான (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) ஆய்வுக்காக கோவா உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிற்கு (ஜி. டி.ஏ.)அனுப்பி வைத்தது. இதில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது தான் என தெரிவித்ததையடுத்து. நெஸ்லே நிறுவனத்திற்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. மீண்டும் மேகி நூடுல்ஸ் சந்தையில் விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது.

Categories: NEWS

தமிழக காய்களுக்கு கேரளா கட்டுப்பாடு

5,August, 2015 Comments off

கூடலூர்:தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இனி, நச்சுத்தன்மை குறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் சான்று பெற வேண்டும்.தமிழகத்தில் இருந்து தினமும் 300க்கும் மேற்பட்ட லாரிகளில் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக கேரளாவுக்கு காய்கறிகள் செல்கின்றன. இவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நச்சுத்தன்மை இருப்பதாக கேரள அரசு புகார் எழுப்பி உள்ளது.இந்நிலையில், ‘காய்கறி கொண்டு வரும் வாகனங்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் தரச்சான்று பெற்று வரவேண்டும். சான்று பெறாத வாகனங்கள் கேரளாவுக்குள் வர அனுமதியில்லை’ என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த சில தினங்களாக, தமிழக காய்கறி வாகன உரிமையாளர்கள், உணவு பாதுகாப்புத்துறையிடம் இருந்து சான்று பெறுவதில் மும்முரமாக உள்ளனர். ஒரு ஆண்டுக்கு செல்லுபடியாகும் வகையில் உணவு பாதுகாப்புத் துறை சான்று வழங்கி வருகிறது. இன்று முதல் கேரள ‘செக் போஸ்ட்’களில் காய்கறி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அனுப்பப்படும்.’முதலில் சான்றில் உள்ள உரிம எண்ணை பதிவு செய்து, காய்கறிகளை மாதிரி எடுப்பர். மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்தி, நச்சுத் தன்மை அதிகமாக இருப்பது தெரிந்தால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என கேரள தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories: NEWS

மேகி நூடுல்ஸ் மீதான தடை குஜராத்தில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

5,August, 2015 Comments off

அகமதாபாத், ஆக. 5-
குஜராத் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீட்டித்துள்ளது.
இதுகுறித்து, அம்மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணைய கமிஷனர் கூறுகையில், “நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் குறித்த பாதுகாப்பு தரவுகளை அந்நிறுவனம் சமர்ப்பிக்காததையடுத்து, உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகள் படி, அந்த உணவுப்பொருள் மீதான தடையை மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளோம்.
மேகி நூடுல்ஸ் பாதுகாப்பற்றது என்று தெரிய வந்ததும், அந்நிறுவனத்திடம் நாங்கள் இதுகுறித்து அறிக்கை கேட்டிருந்தோம். ஆனால், இன்று வரை தினம் தினம் அழிக்கப்பட்டு வரும் மேகி நூடுல்ஸ் பற்றிய தரவுகளை மட்டுமே அந்நிறுவனம் கொடுத்து வருகிறது. தங்கள் தயாரிப்பு பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க அவர்கள் தவறியதையடுத்தே தற்போது தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Categories: NEWS