Home > Coimbatore, DISTRICT-NEWS > தி இந்து’ செய்தி எதிரொலி: ரூ.10-க்கு சக்கைப் பால் விற்பனை விவகாரம் தனியார் பால் பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

தி இந்து’ செய்தி எதிரொலி: ரூ.10-க்கு சக்கைப் பால் விற்பனை விவகாரம் தனியார் பால் பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

2,September, 2015

கோவையில், தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் மூலமாக ரூ.10-க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பாலை வாங்கிச் சென்று, பால் வியாபாரிகள் ரூ.40-க்கு விற்கும் விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

கோவை, வாகாராயன் பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு ஆலை மூலமாக அனைத்து சத்துக்களும் உறிஞ்சப்பட்ட சக்கைப் பால் லிட்டர் ரூ.10-க்கு மாநகரில் பல்வேறு இடங்களில் வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படுவதாக ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ மூலமாக கிடைத்த தகவலை உறுதி செய்து செய்தி வெளியிடப்பட்டது.

கழிவாக கீழே செல்ல வேண்டிய பாலை வாங்கிச் சென்று, அதை சூடு செய்து ஆற வைத்து நல்ல பாலை அதனுடன் கலக்கி ரசாயனம் கலந்து விற்பது குறித்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சக்கைப் பால் விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மட்டும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவன் தலைமையில் ஆய்வாளர்கள் சந்திரன், சந்தோஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் பால் பண்ணையில் திடீர் ஆய்வு நடத்தினர்.

ஆய்வின்போது, கேன்களில் சக்கைப் பால் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பாலின் நிறம் வழக்கமாக இல்லாமல் தூய வெண்மை நிறத்துடன் இருந்ததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து, பால் பண்ணை நடத்தி வருபவரிடம் விசாரணை நடத்தினர். "கொழுப்பு இல்லாத சக்கைப் பாலை சிலர் கேட்பதாகவும் அதற்காகவே அந்த பாலை வாங்கி வந்து விற்பதாகவும்" பால் பண்ணை நடத்தி வருபவர் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு சக்கைப் பாலை விற்பனை செய்யும் நிறுவனம் குறித்த தகவலை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆய்வின்போது அலுவலர் கதிரவன் கூறும்போது, ‘பாலின் நிறம் வழக்கமாக இல்லை. சக்கைப் பாலை அவர்கள் பயன்படுத்துவது உறுதியாகியுள்ளது. அந்த பாலில் ஸ்டார்ச் போன்ற அயல் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. பால் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. சோதனை முடிவு இரு வாரங்களுக்குள் தெரிய வரும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

சக்கைப் பால் என்ன செய்யும்?

வாகனங்களில் கொண்டு வரும் பாலில் தண்ணீர் கலப்பது வாடிக்கையானது. தண்ணீர் கலப்பதால் பாலில் உள்ள சத்தின் அளவு குறையும். வேறு தீமை இல்லை. ஆனால் தண்ணீர் கலந்து விட்டு, பாலை அடர்த்தியாகக் காட்ட ஸ்டார்ச், மைதா மாவு, டிடர்ஜன்ட், யூரியா, சர்க்கரை, குளுகோஸ், பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படும்போது கலப்படமாகிறது.

பாலை அப்படி கெட்டியாகக் காட்டி, கெடாமல் இருக்கக் தவறான வழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது. அமோனியா, சோடியம் ஹைட்ராக்சைடு, கார்பன் ட்ரை ஆக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு இவற்றில் ஒன்று சேர்க்கப்படும். யூரியா எளிதில் கிடைக்கும்.

யூரியாவில் அமோனியா இருப்பதால் கலப்படம் செய்வோர் அதைப் பயன்படுத்துவார்கள். இதை அருந்துவதால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்

Categories: Coimbatore, DISTRICT-NEWS
%d bloggers like this: