Home > NEWS > மேகி நூடுல்ஸ்’ தடை நீட்டிப்பில்லை: அரசு முடிவால் இனி தாராள விற்பனை

மேகி நூடுல்ஸ்’ தடை நீட்டிப்பில்லை: அரசு முடிவால் இனி தாராள விற்பனை

5,September, 2015

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் உள்ளதாக, ‘மேகி’ உட்பட, ஆறு நிறுவன நுாடுல்ஸ்களுக்கு, தமிழக அரசு விதித்த மூன்று மாத தடை முடிந்தது. ‘தடை நீட்டிப்பில்லை’ என, அரசு அறிவித்துள்ளதால், இனி தாராளமாக விற்பனை நடக்கும்.

‘நெஸ்லே’ நிறுவன தயாரிப்பான, ‘மேகி நுாடுல்ஸ்’சில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் உள்ளதாக சர்ச்சை எழுந்தது; அதனால், இதன் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்தது. தமிழகத்தில், உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய பரிசோதனையில், மேகி உட்பட, ஆறு நிறுவன நுாடுல்ஸ்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, காரீயம் அதிகம்

இருந்தது தெரிய வந்ததால், அவற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசும் தடை விதித்தது.அரசு விதித்த மூன்று மாத தடை, இம்மாதம், 3ம் தேதியுடன் முடிந்தது. ‘தடை மேலும் நீட்டிக்கப்படலாம்’ என, நுகர்வோர் எதிர்பார்த்தனர். ஆனால், நுாடுல்ஸ் விற்பனைக்கு அனுமதி

அளிக்கும் வகையில், தடையைநீட்டிப்பது இல்லை என, அரசு முடிவு செய்துள்ளது.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆறு நிறுவன நுாடுல்ஸ்கள் மீதான தடை, இம்மாதம், 3ம் தேதியுடன் முடிவடைந்தது; தடை மேலும் நீட்டிக்கப்படவில்லை. ஏதேனும் புகார்கள் வந்தால், உரிய ஆய்வு நடத்தி, நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’

 

ஆறு வகை
என்ன?மேகி நுாடுல்ஸ், வாய் வாய் எக்ஸ்பிரஸ் நுாடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா நுாடுல்ஸ், கிரைன் சக்தி வெஜ் ஆட்டா நுாடுல்ஸ் மற்றும் நியூ எக்ஸ்ட்ரா டெலிசியஸ் சிக்கன் நுாடுல்ஸ் ஆகியவற்றின் விற்பனைக்குத் தான் அரசு தடை விதித்திருந்தது.

Categories: NEWS
  1. Kovairam
    5,September, 2015 at 10:34 pm

    When there is ban on noodles by the central Govt., how the Tamilnadu Govt. alone can release the ban order. Why the Tamilnadu Govt.,is not taking interest in saving the younger generation from consuming this poisonous noodles.It is a curse for the Tamilnadu children.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: