Archive

Archive for 8,September, 2015

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

8,September, 2015 Comments off

08_09_2015_105_014_001கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

கடலுார், மஞ்சக்குப்பம் பகுதியில் குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு பொருள் மொத்த விற்பனைக் கடைகளில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, சம்பவ இடத்தில் உள்ள கடைகளில் நேற்று, ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, விற்பனைக்காக வைத்திருந்த காலாவதியான பொருள்கள், தேதி குறிப்பிடாத பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடலுார் நந்தகுமார், பண்ருட்டி செந்தில் ராஜ்குமார், சிதம்பரம் பத்மநாபன் உடனிருந்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS

HEALTH AT RISK – Only 16% of food adulteration cases in TN end in conviction

8,September, 2015 Comments off
 

As Awareness Spreads, Complaints Up, More Samples Tested

Just 16% food adulterators were con victed in the state over the past two years even though there has been a rise in the number of complaints of con taminated food in the market.

Statistics from Tamil Nadu food safety department shows it collected 3,531 food samples from across the state since 2013 and found 1,308 (37%) to be unsafe, substandard or misbranded. However, the department has succeeded in proving only 219 cases in court. In 2014-15 alone, food items like salt (177 samples), oil (169) and cereals (147) failed in quality tests conducted by the department.

While food safety officials say they collected fines of `40.69 lakh from violators over the past two years, consumer activists say most food adulterators go scot free after paying a meagre fine. “The low conviction rate is dis turbing,“ said Consumer Association of India representative G Santhanarajan. “Hazardous chemicals in food items pose severe health risks, in cluding cancers, but there are no efforts to punish violators. Consumers have become more aware after the Maggi saga.“

There has been an increase in the number of food samples tested by the department: 658 in 2013-14 to 2,873 in 2014-15.This is mainly because more customers have lodged complaints.

In Chennai, there are only 25 food safety officers (FSOs) to monitor more than 70,000 food businesses. According to Food Safety and Standards Act, each FSO has to collect at least four food samples every month, but an FSO in Chennai collects only one sample per month.This means the department collects an average of 300 samples a year.

Officials say they take random samples and conduct inspections based on complaints. “Many cases are pending before the courts, which delay the conviction of violators. In some cases, they find loopholes in the cases and get away,“ said an official.

Categories: NEWS

பிஸ்கெட்டில் பூச்சி உணவு பாதுக்காப்பு துறை அதிகாரியிடம் பழக்கடை வியாபாரி புகார்

8,September, 2015 Comments off
Categories: Coimbatore, DISTRICT-NEWS

வெள்ளை நிறத்தில் சவ்வரிசி தயாரிக்க பயன்படுத்தப்படும் ஈரப்பதமான மாவுப்பொருளுக்கு ஒரு வாரத்துக்குள் தடை விதிக்கவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

8,September, 2015 Comments off
சென்னை,

வெள்ளை நிறத்தில் சவ்வரிசியை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஈரப்பதமான மாவை தடை செய்வது குறித்து ஒரு வாரத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், கள்ளக்குறிச்சி வெள்ளாப்பட்டி விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ஆர்.சந்திரசேகரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

உடல் நலம் பாதிப்பு

எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சவ்வரிசி தயாரிக்க பயன்படுத்தப்படும் மரவள்ளிக்கிழங்கை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த மரவள்ளிக்கிழங்குகளை கொண்டு சவ்வரிசி தயாரிக்கும் நிறுவனங்கள் கடந்த சில காலமாக, சவ்வரிசி அதிக வெள்ளை நிறமாக இருக்கவேண்டும் என்பதற்காக ஆசிட் மற்றும் ரசாயனங்களை பயன்படுத்துக்கின்றன. இந்த வகை சவ்வரிசி உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுவதால், இதை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை. இதை தொடர்ந்து, மரவள்ளிக்கிழங்கிற்கு விலை இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

பரிசோதனை

சவ்வரிசியில் செய்யப்படும் கலப்படங்களை தடுக்கும் விதமாக அவற்றை ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு உகந்தது என்று உணவுத்துறை அதிகாரிகள் சான்றிதழ் அளித்திருந்தால், இதுபோன்ற நிலை வந்திருக்காது. இதுகுறித்து கடந்த ஆண்டு நவம்பர் 3–ந் தேதி தமிழக அரசுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கிற்கு தமிழக பொதுசுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்கவேண்டும். குறிப்பாக சேலம் மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நேரில் ஆஜராகவேண்டும்‘ என்று உத்தரவிட்டிருந்தனர்.

ஒப்படைப்பு

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா நேரில் ஆஜராகி இருந்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

மரவள்ளிக்கிழங்கை தோலை நீக்கி சவ்வரிசியை தயாரிக்கவேண்டும். ஆனால், சில நிறுவனங்கள் அவ்வாறு செய்யாமல் ரசாயனப் பெருட்களை பயன்படுத்துகின்றனர். மேலும் வெள்ளையாக இருக்கவேண்டும் என்பதற்காக வேறு ஈரப்பதமான மாவு போன்ற ரசாயனப் பொருட்களையும் இவர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த சவ்வரிசியை ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள், அதில் தரம் குறைந்த சவ்வரிசி உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், அந்த சவ்வரிசியை உற்பத்தி செய்த உற்பத்தியாளர்களிடமே மீண்டும் கொடுத்து விடுகின்றனர்.

மலிவு விலை

இதனால், இந்த தரம் குறைந்த சவ்வரிசியை மலிவு விலைக்கு உற்பத்தியாளர்கள் சந்தையில் விற்பனை செய்து விடுகின்றனர். எனவே, இவற்றை தடுக்கும் விதமாகவும், தரம் குறைந்த சவ்வரிசியை தயாரித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் விதமாகவும், தரம் குறைந்த சவ்வரிசியை உணவு தர கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், தரம் குறைந்த, வெள்ளை நிறத்தில் சவ்வரிசி தயாரிக்க ஈரப்பதமான மாவு பொருளை உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த மாவு பொருளை அரசு தடை விதிக்கவேண்டும். எனவே, ஆய்வில் தரம் குறைந்த சவ்வரிசி என்று தெரிய வந்தால், அவற்றை உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வெள்ளை நிறத்தில் சவ்வரிசியை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஈரப்பதமான மாவு பொருளுக்கு தடை விதிப்பது குறித்தும் ஒரு வாரத்துக்குள் அரசு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

உதவ வேண்டும்

மேலும், தரம் குறைந்த சவ்வரிசி தயாரிப்பு தொடர்பாக பதிவான கிரிமினல் வழக்குகளின் விவரங்களை அரசு வக்கீல் இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல, ஏதாவது சவ்வரிசி ஆலைகள் அதிகாரிகளால் ‘சீல்‘ வைக்கப்பட்டிருந்தால், அந்த ‘சீலை‘ இந்த ஐகோர்ட்டின் அனுமதியின்றி நீக்கக்கூடாது. இது சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும், எங்கள் முன்பு விசாரணைக்கு பட்டியலிடவேண்டும். இந்த வழக்கில் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் எங்களுக்கு (நீதிபதிகளுக்கு) உதவும் விதமாக செயல்பட வேண்டும். விசாரணையை வருகிற நவம்பர் 17–ந் தேதிக்கு தள்ளி வைக்கின்றோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Categories: NEWS

Sealed sago factories not to be reopened without permission:HC

8,September, 2015 Comments off
 

The Madras High Court today made it clear that when factories are sealed by Food Safety officer on account of adulterated sago, it should not be reopened without the permission of the court.

The First Bench comprising Chief Justice Sanjay Kishan Kaul and Justice T S Sivagnanam directed the Government that l sago which fails the tests must actually be handed over to the food safety department officer for appropriate action in accordance with law, as on return of it to manufacturers such sago is often sold at discounted price.

The bench gave the direction on a PIL filed by Kallakurichi Vellalapatti Vivasayigal Munnetra Sangam in Namakkal district.

The bench made it clear that wet starch is sold in the market, which also creates a problem, which is purchased by the manufactures at discounted value and then sold after adding the chemicals the sale of wet srarch should be banned.

Earlier a frist bench had directed the Officer, Food and Safety Department, Salem District, to be present in the Court after filing an affidavit to assist the court.

The Farmers association in its PIL alleged that the Tamil Nadu Tapioca Natural Sago Manufacturers Association of Salem who are predominant manufacturers in the entire country and suppliers of sago, was purchasing Tapioca from the farmers has started adding acid and other chemicals in order to make the sago look attractive which is highly harmful to public.

The petitioner said the states Maharashtra, Bihar, Madyapradesh,Rajasthan, Uttar Pradesh and Gujarat are the states. However, mixing of acid and other chemicals in Sago which resulted ultimately in reduction of demand.

Dr T Anuradha, Designated Officer, Food Safety Department, Salem, appeared in person today before the Bench as per the order of it.

She submitted that it emerges that when tapioca is to be processed, the skin has to be removed, but in some of the cases, the small manufacturers may not have the process to do so and without removing the skin, they process it and give it to the larger manufactures. Apart from that, the allegation is that, to whiten the sago, various harmful chemicals are used.

The sago is scrutinized by the Erode district collector through a nine-test process, and where the tests failed the sago is returned to the manufacturers.

The bench also directed the Assistant Public Prosecutor to hand over the list of cases which are already initiated and charge sheet filed to the registrar of the High Court, who will submit a report as to what steps have been taken to expeditiously deal with the cases and adjourned the case to November 17.

Categories: NEWS

Review of FSS Regulations silent on Product Approval, vocal on enforcement

8,September, 2015 Comments off
 

New Delhi

The recently-released draft recommendations by the committee doing comprehensive review of Food Safety and Standards Regulations, 2011, seemed to be silent on the crucial issue of Product Approval.

The proposed draft recommendations, accessed by FnB News, talk about five parts of amendment to the regulations. These talk about mainly enforcement issues that include qualification of the food safety officer and designated officer, time limit for making an appeal under Rule 2.4.6 (1), rules for destruction or release of confined food, time limit for test report from referral labs and storage and packaging of food article.

The committee suggestions include –

1. Qualification and eligibility condition of the designated officer and food safety officer may be rationalised. It further recommends training for the officers after recruitment.

2. The time limit of 30 days for making an appeal to the designated officer under rule 2.4.6 (1) be reduced to 15 days. Further the designated officer shall send the sample part to the referral labs within 15 days from the date of the receipt of appeal.

3. Rules should be prescribed for destruction of the food items or their release, if found or not found complying with the specified requirement (This appears a direct fallout of Maggi noodles case).

4. Time limit may also be specified for referral labs to submit their report. Further rules should be specified for sampling of the food that will be sent to referral labs.

5. The procedure of breaking open of package in which any article or food may be contained or any premise where food may be kept be also provided in the rules.

According to Union ministry of health and family welfare, suggestions, if any, could be made in this regard before September 24, 2015.

Meanwhile, a notification on the draft, released by ministry of health recently, stated that Central government intended to review and suitably amend the FSS Rules, 2011, to remove the deficiencies that were noticed during the operation of the rules. And subsequently, last December, a committee was constituted by the ministry to do a comprehensive review.

There were some 37 sections of the Act, the industry wanted a review of, among many key recommendations.

Categories: NEWS

மாகிக்கு விதித்த தடை தீர்வாகுமா?

8,September, 2015 Comments off
 

பூகம்பத்தின் தொடர் அதிர்வுகள் சில நாளைக்கு நீடிக்கும். இப்போது மாகிக்கு விதித்த தடையின் பாதிப்புகள் நெஸ்லேயை மட்டுமல்ல உணவு பதப்படுத்தும் தொழிலின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

மாகிக்கு தடை விதித்தது இந்திய உணவு பாதுகாப்பு, தரப்படுத்தல் ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஆகும். இந்த அமைப்பு எடுத்த தடை எனும் நடவடிக்கை மாகி நூடுல்ஸுக்கோ அதை தயாரித்த நெஸ்லே நிறுவனத்தை மட்டுமே பாதிக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை. இதனால் 2006-ல் இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு, தரப்படுத்தல் சட்டத்துக்கும் ‘இந்திய உணவு பாதுகாப்பு, தரப்படுத்தல் ஆணையம்’ என்ற அமைப்புக்கும் கூட கடும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.

மாகி நூடுல்ஸில், அனுமதிக்கப் பட்ட அளவுக்கும் அதிகமாக ரசாய னங்கள் கலந்திருப்பதாக சோதனைச் சாலை ஆய்வுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட முடிவு குறித்தும், நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை மீறப்பட்டது குறித்தும் மும்பை உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளால் அந்த பாதிப்புகள் தெரியவந்துள்ளன. மாகி போன்ற உடனடி உணவு பொருள்களை சாப்பிட்டால் பாதிப்போ என மக்கள் மத்தியிலும், உணவு பதப்படுத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.

இந்தியாவில் தரமான ஆய்வகங் களும், பயிற்சிபெற்ற நிபுணர் களும் இல்லாத நிலையில் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட் டதோ என அஞ்சுகின்றனர் உணவு பதப்படுத்தல் துறையில் உள்ளவர்கள்.

நெஸ்லே நிறுவனம் பன்னாட்டு நிறுவனமாதலால், அந்நிறுவனத் தயாரிப்புக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக பிற வெளிநாட்டு நிறுவ னங்கள் இத்துறையில் இறங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 44,000 கோடி ரூபாய் மதிப் புள்ள வேளாண் பொருள்கள் (தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவை) அழுகியும் கெட்டும் எவராலும் உண்ணப்படாமல் வீணாகின்றன. வீணாகும் அளவைக் குறைக்க பேருதவியாய் இருப்பது உணவு பதப்படுத்தல் துறை என்றால் அது மிகையல்ல. வேளாண் பொருள்களில் 10 சதவீதம் மட்டுமே உணவு பதப்படுத்தல் துறையில் பயன்படுத்தப்படுகிறது.

கிராமங்களில் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த வேலைகளை மட்டுமே நம்பியிருக்காமல் இத்துறை யில் ஈடுபடுவதன் மூலம் நிரந்தர வருமானத்துக்கு வழி ஏற்படுகிறது. உணவு பதப்படுத்தல் துறையானது ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கச் செய்வதுடன் லட்சக் கணக்கானோருக்கு உரிய உணவுப் பண்டங்களைப் பாதுகாப்பாகக் கிடைக்கச் செய்கிறது.

மேக் இன் இந்தியா

உணவு பதப்படுத்தலுக்கு வேண் டிய சாதனங்கள், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாகனங்கள், நீண்ட நாள்களானாலும் கெடாமல் பாதுகாப்பாக வைத்திருக்கும் பெட்டிகள் என்று பல துணைப் பொருள்களின் வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனைக்கும் வழியேற் படுகிறது. எல்லாவற்றையும்விட முக்கியம் சிறு, நடுத்தரத் தொழில் துறையில் இவற்றைச் செய்துவிட முடியும். ‘இந்தியாவிலேயே தயாரிப் போம்’ என்ற கோஷத்துக்கு ஏற்ற தொழில் இது.

சட்ட அமலால் தொழில் நசியாது

மாகி நூடுல்ஸ் விவகாரம் தொடர்பான விவாதங்களில் பெரும் பாலும் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும்தான் பேசினார்களே தவிர இந்தத் தொழில் எவ்வளவு பெரியது, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறது, இதை எப்படி மேம்படுத் தலாம் என்பதையெல்லாம் தீவிரமாகக் கவனிக்கவில்லை. இவற்றை யெல்லாம் தடை செய்துவிட்டால் உணவு பதப்படுத்தல் துறையை என்ன செய்வது?

எடை, தரம், சுவை, சுகாதாரம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் நுகர்வோரைப் பூர்த்தி செய்ய இத்துறையால் முடியும். தரமாகவும் சுவையாகவும் உணவுப் பண்டங் களைத் தயாரிக்கவும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கவும் முடியும்.

உலக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் தொழில்துறையில் அமெரிக்கா முன்னிலை வகிக் கிறது. அங்கே சட்டமும் கடுமை யாக இருக்கிறது. எனவே சட்டம் கடுமையாக இருந்தாலும் தரமாகவும் லாபகரமாகவும் தயாரிக்க முடியும் என்பதே உண்மை. வெளிப்படை யான, நன்கு வரையறுக்கப்பட்ட, அனைவராலும் எதிர்பார்க்கப்படக் கூடிய வகையில் உணவுப்பொருள் களுக்கான தரத்தை நிலைப் படுத்தலாம். அதிகார தோரணையில் தலையிட்டு பயமுறுத்தாமல், முறையாக, எளிதாக, நட்புணர்வோடு அடிக்கடி உணவு பதப்படுத்தும் நிலையங்களுக்குச் சென்று உணவுப் பண்டங்களைச் சோதிப் பதுடன் மேம்படுத்துவதற்கான யோசனை களையும் தெரிவித்துவிட்டு வரலாம். அத்துறையினரின் நியாயமான பிரச்சினைகளை அத்துறைக்கான தொழில்நுட்ப நிபுணர்களின் உதவி யோடு தீர்த்து வைக்கலாம்.

மாகிக்கு மட்டும் குறி ஏன்?

ஏராளமான நிறுவனங்கள் இத்த கைய உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும்போது மாகியின் நூடுல்ஸ்கள் மீது மட்டும் கவனம் சென்றதேன் என்ற கேள்வி எழுகிறது. இந்திய உணவுப் பண்டத்துறையில் எல்லோரும் மோசமானவர்கள் அல்ல என்றாலும் கலப்படம், ரசாயனக் கலப்பு, எடைக்குறைவு, தவறான லேபிள்களை ஒட்டுவது, தரத்தை சரியாக சோதிக்காமலேயே பாக்கெட்டில் அடைத்து அனுப்புவது என்பது போன்ற முறைகேடுகள் இல்லாமல் இல்லை. இவையெல்லாம் எப்போதோ நடப்பவை அல்ல, வழக்கமானதுதான் என்று சொல்கிற அளவுக்கு இருக்கிறது. எனவே ஒரேயொரு நிறுவனத்தைக் குறி வைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்றே கருதப்படுகிறது.

எந்த சோதனையையும் ஆய் வையும் முறையாகவும் குறிப்பிட்ட கால இடைவெளியிலும் செய்து வந்தால் துறையின் வளர்ச்சிக்கு அது பெரிதும் உதவும். எதேச்சதிகாரமாகச் சிலர் செயல்பட்டிருப்பதைத்தான் இது காட்டுகிறது. அதே நிறுவனத்தின் பாக்கெட்டுகளை வெவ்வேறு ஆய்வுக் கூடங்களில் சோதித்தபோது வெவ்வேறு முடிவுகள் கிடைத்ததும் வியப்பைத் தருகிறது.

இதன் உடனடி விளைவாக பல சகோதர நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளை சந்தையிலிருந்து விலக்கிக் கொண்டன. புதியவற்றை அறிமுகம் செய்வதை ஒத்திவைத்தன. இந்திய தரப்படுத்தல் நிறுவனமும் வெவ்வேறு பண்டங்களை இப்போது ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறது. ஆனால் இப்போதும் கூட இந் நடவடிக்கைகள் ஒழுங்காகவும் அறிவி யல் பூர்வமாகவும் அத்துறையின் வளர்ச்சிக்கு ஒத்திசைவாகவும் இல்லை என்பதே உண்மை.

அரசு முதலில் தன்னுடைய ஆய்வகங்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் உயர்த்த வேண்டும். அதன் ஆய்வாளர்கள் நல்ல பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். எல்லா பொருள்களையும் ஆய்வுசெய்ய வேண்டும். ஆய்வுகள் தொடர்ச்சியாகவும் வலிமை யானதாகவும் இருக்க வேண்டும். ஆய்வு முடிவுகளை முதலில் நிறுவனத்திடம் தெரிவித்து அதன் விளக்கத்தைப் பெற்று மேல் நடவடிக்கையை எடுக்க வேண்டும். தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அங்கீகாரம் முதலிலா, பிறகா?

உணவு பதப்படுத்தும் தொழி லில் உள்ள நிறுவனங்களும் தின்பண்டங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் அரசின் உரிய துறைக்கு விண்ணப்பித்து முதலி லேயே அங்கீகாரம் பெற வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. ஆனால் அப்படி அங்கீகாரம் பெறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. தாமதம் ஏன் என்பதற்கு விளக்கம் கிடையாது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இதைக் கேள்வி கேட்டு ரத்து செய்ய உத்தரவிட்ட பிறகு இந்நடைமுறை கைவிடப்பட்டிருக்கிறது.

சர்வதேச அளவில் எந்த உணவுப் பண்ட நிறுவனமும் புதிய பொருளை அறிமுகப்படுத்தும் முன் உரிய அரசு அமைப்பிடம் அனுமதி அல்லது அங்கீகாரம் பெற வேண்டியதில்லை. பொருள் தயாரிக்கப்பட்ட உடனேயே உரிய அத்துறை அதை நன்கு பரிசோதித்து அதன் தரத்தை உறுதி செய்துகொள்கிறது.

உணவுப் பதப்படுத்தல் துறையில் பண்டங்களை ஆய்வு செய்யக்கூடாது, வரம்புகளை விதிக்கக்கூடாது, எடையை ஆராயக் கூடாது என்றெல் லாம் யாரும் தடுக்கவில்லை. இவையெல்லாவற்றையும் நிறுவனங் களுக்கு இடையூறு இல்லாமல், கால தாமதப்படுத்தாமல், நல்ல தரமான கருவிகள் உதவியுடன், நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்டு செய்யுங்கள் என்பதுதான் கோரிக்கை. நுகர்வோரின் நலனும் முக்கியம், இத்துறை வளர்வதும் முக்கியம். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

Categories: NEWS

உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் தாமதமாகும் பரிசோதனை நடைமுறை: நவீன முறை இல்லாததால் பிடிபடுவோர் தப்ப வாய்ப்பு

8,September, 2015 Comments off
 

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பரிசோதனை நடைமுறையில் நவீன வசதிகளைக் கொண்டு வராததால், உணவில் கலப்படம் செய்வோர் வழக்கில் இருந்து எளிதில் தப்பிவிடுவதாகக் கூறப்படுகிறது.

உணவுப்பொருளில் கலப்படம், கெட்டுப் போன உணவுகள் விற்பனை, உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சுவையூட்டிகள் அதிகம் பயன்படுத்துதல், காய்களை வேகமாக பழுக்க வைப்பதற்காக பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள், காய்கறிகளில் நச்சுத்தன்மை கொண்ட உரங்களின் அதிக பயன்பாடு உள்ளிட்டவை மனித குலத்தின் ஆரோக்கியமான வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

இதனைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை, பரிசோதனை விஷயத்தில் தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப நவீன முறையைக் கையாளாததால் உணவுப் பொருட்கள் தொடர்பான குற்றத்தில் ஈடுபடுபவர்களை ஒன்றுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகரில் எதற்கும் பயன்படுத்த முடியாத அனைத்து சத்துக்களும் உறிஞ்சப்பட்ட, கழிவாகச் செல்ல வேண்டிய சக்கைப் பாலை லிட்டர் ரூ.10-க்கு பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், பால் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதும், அந்த பாலை வாங்கும் வியாபாரிகள் கெட்டித் தன்மைக்காக வேதிப் பொருட்களை கலக்கி விற்பனை செய்வது குறித்தும் ‘தி இந்து’ நாளிதழில் படங்களுடன் தொடர்ச்சியாக செய்திகள் பிரசுரமாயின.

சக்கைப் பாலை விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்து அந்த பால் விற்பனை தடையின்றி நடைபெற்று வருவதாக ‘தி இந்து’ வாசகர் வேதனை தெரிவித்துள்ளார்.

"சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து சக்கைப் பாலை கொண்டு வந்து அதே இடத்தில் வைத்து, பால் வியாபாரிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கிலான லிட்டர்கள் விநியோகம் செய்கின்றனர். ரூ.10-க்கு விற்கப்படும் அந்த பாலை வாங்கிச் சென்று கலப்படப் பொருளை கலக்கி ரூ.40-க்கு விற்பது எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பது கண்கூடு. இருப்பினும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து சக்கைப் பால் விற்பனை தங்கு தடையின்றி நடைபெறுகிறது" என்றார் அந்த வாசகர்.

இது குறித்து கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டம் கடந்த 2006-ம் ஆண்டில் நிறைவேறியது. இருப்பினும், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டுதான் இது தனித்துறையாகக் கொண்டு வரப்பட்டது.

தற்போதுள்ள நடைமுறைப்படி சந்தேகிக்கப்படும் ஒரு உணவு மாதிரியை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தால், குறைந்தபட்சம் 14 நாட்களாவது காத்திருக்க வேண்டி உள்ளது. ஆனால், கேரளம் போன்ற மாநிலங்களில் உணவுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பாலில் கலப்படம் என்றால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஆய்வக வசதியை உள்ளிடக்கிய பரிசோதனை வாகனத்தை கூடவே கொண்டு சென்றுவிடுவார்கள். பாலின் மாதிரியை அதே இடத்தில் எடுத்து அதிகபட்சம் அரை மணி நேரத்தில் அங்கேயே வைத்து கலப்படம் உள்ளதா எனக் கண்டுபிடித்து வழக்கே போட்டுவிடலாம். ஆனால், தமிழகத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. உணவு மாதிரியை எடுத்துச் சென்று பரிசோதனைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு துரித உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தததை அடுத்து அங்கு சென்று பரிசோதனை நடத்தி, உணவு மாதிரியை சோதனைக்காக எடுத்து வந்தோம். ஆய்வகச் சோதனையில் கெட்டுப்போன உணவுதான் என்பது உறுதியானது.

நீதிமன்றத்தில் அந்த வழக்கு சென்றபோது ‘அது தங்களுடைய உணவகத்தில் எடுக்கப்பட்ட உணவு மாதிரி இல்லை’ என சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிறுவனத்தினர் மாற்றிக் கூறிவிட்டார்கள். உணவு மாதிரிகள் பரிசோதனை விஷயத்தில் ஆய்வக முடிவுகளை உடனுக்குடன் கிடைக்குமாறு நவீன ஆய்வுக்கூட வசதியுடன் வாகன வசதி இருந்தால் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் எளிதில் தப்பிவிட முடியாது. சக்கைப் பால் விஷயத்திலும் பரிசோதனைக்காக பாலை எடுத்துச் சென்று சோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

Categories: NEWS

குடிநீர் வினியோக வாகனங்களுக்கு எச்சரிக்கை:சில்வர் கன்டெய்னரில் வழங்க அறிவுரை

8,September, 2015 Comments off

மதுரை:மதுரையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடச்சனேந்தல், ஊமச்சிகுளம், அழகர்கோவில் பகுதிகளில் இருந்து குடிநீர் ஏற்றிச் சென்ற 57 லாரி, வேன்களில் ஆய்வு செய்யப்பட்டன. குளோரின் இல்லாமல் சென்ற வாகனங்களுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுணா

எச்சரிக்கை விடுத்தார்.இதுகுறித்து அவரும், மற்றொரு அலுவலர் சரவணனும் கூறியது:

எந்த இடத்தில் தண்ணீர் பிடிக்கிறோமோ, அப்பகுதியிலேயே குடிநீரில் குளோரின் அளவு 0.2 பி.பி.எம்., ஆக இருக்க வேண்டும். குளோரின் இருந்தால், குடிநீரில் உள்ள இகோலி உட்பட நோய் பரப்பும் கிருமிகள் இறந்துவிடும்.வாகனங்களை ஆய்வு செய்ததில் எதிலும் குளோரினேற்றம் செய்யவில்லை. அந்த டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரம் லிட்டர் தண்ணீரில் 5 கிராம் வீதம் பிளீச்சிங் பவுடர் கலக்கப்பட்டு, வாகனங்களில் உள்ள தண்ணீரில் ஊற்றி குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டது. அதன்பின்பே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. குடிநீர் என்ற பெயரில் கொண்டு சென்றால் குளோரின் இருக்க வேண்டும்.சில்வர் கன்டெய்னரில் துரு பிடிக்காது. எளிதில் பாசி படியாது; உள்ளே இறங்கி சுத்தம் செய்வதும் எளிது என்பதால், சில்வர் கன்டெய்னரில் தான் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம், என்றனர்.

Categories: DISTRICT-NEWS, Madurai