Archive

Archive for 16,September, 2015

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

16,September, 2015 Comments off

Categories: DISTRICT-NEWS, Salem

Spices committee broadens scope of Codex in setting standards: FSSAI chief

16,September, 2015 Comments off
Mumbai

The Codex Committee for Spices and Culinary Herbs (CCSCH), under the joint aegis of WHO and FAO of the United Nations, which India is hosting, has broadened the scope of the global food safety standard setting body Codex Alimentarius Commission, according to Ashish Bahuguna, chairperson, Food Safety and Standards Authority of India. He made these observations while inaugurating the second session of the CCSCH at Canacona in Goa recently.

Bahuguna observed that the importance of CCSCH is discernible from the increasing number of new work proposals coming in from spices producing and consuming countries for setting quality standards. FSSAI, which is the national Codex point in India, is working in close liaison with the Spices Board India, the host organisation of CCSCH, in working towards setting standards.

Welcoming delegates from nearly 40 countries, Dr A Jayathilak, chairman, Spices Board India, said that India had taken up the task of standard setting as a challenge. “There has been a renewed surge in India in getting establishments and products certified under FSSAI which is the link to the international Codex standards. This will pave way for harmonisation of national and international standards. Exports of Indian spices could buck the recessionary trends and have been rising for the past many years owing to the very stringent quality control mechanism the board had established for exports,” he stated.

The session was attended by delegates from the US, Canada, Peru, Chile, Paraguay, Mexico, Argentina, Cameroon, Nigeria, Morocco, Libya, Algiers, Egypt, Kenya, Equatorial Guinea, Ghana, Tanzania, Grenada, Iran, Algeria, the European Union, Germany, Italy, the Netherlands, Luxembourg, Malaysia, Thailand, Indonesia, Japan, South Korea, Australia, Bangladesh, Nepal, Sri Lanka and China. Ten new work proposals were mooted for consideration which include dry ginger, dry garlic, dry chillies, nutmeg, saffron, coriander, basil, cloves besides the already proposed standards for cumin, black, white and green pepper, thyme and oregano.

Dr M R Sudarshan, the chair of the CCSCH, struck a note of confidence in the participation of the member countries in the committee proceedings. Dr P S Sreekantan Thampi, organising secretary, CCSCH, proposed vote of thanks.

Categories: NEWS

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு கணினி பயிற்சி

16,September, 2015 Comments off

IMG_984020150916_094919-1

Categories: Cuddalore, DISTRICT-NEWS

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

16,September, 2015 Comments off

விழுப்புரத்தில் பெட்டிக் கடைகளில் இருந்து அரசு தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, புகையிலை பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, புகையிலைப் பொருள்கள் பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எம்.லட்சுமிக்கு  புகார்கள் வந்தன. 

அவரது உத்தரவின் பேரில் பயிற்சி உதவி ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் வரலட்சுமி மற்றும் அதிகாரிகள் காமராஜ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

இக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை கைப்பற்றி பறிமுதல் செய்து அழித்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்தால் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதுபோன்ற சோதனைகள் இனிமேல் அடிக்கடி நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram

பாக்கெட் பேரீச்சம்பழத்தில் புழுக்கள்: உணவு பாதுகாப்பு துறை விசாரணை

16,September, 2015 Comments off

சேலம்: சேலம், ஐந்து ரோடு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய, பாக்கெட் பேரீச்சம்பழத்தில், புழுக்கள் உயிருடன் நெளிந்ததால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்து, உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.

சேலம், ஜாகீர்ரெட்டிபட்டியை சேர்ந்த தட்சணாமூர்த்தி, சேலம், ஐந்து ரோட்டில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வழக்கமாக, வீட்டிற்கு தேவையான அனைத்து உணவு பொருட்கள் வாங்குவது வழக்கம். அதன்படி, கடந்த, 8ம் தேதி, சூப்பர் மார்க்கெட்டில், வீட்டிற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கினார். அதில், 200 கிராம் எடையுள்ள, ‘லயன்’ கம்பெனி பேரீச்சம்பழம் பாக்கெட் வாங்கியுள்ளார். பின், வீட்டிற்கு சென்று, பேரீச்சம் பழம் பாக்கெட்டை திறந்து பார்த்த போது, அதில் புழுக்கள் மற்றும், வண்டுகள் உயிருடன் நெளிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் கடைக்கு சென்று, விளக்கம் கேட்டுள்ளார். கடையினர், ‘இந்த பாக்கெட் விற்பனை தேதி முடியவில்லை; டீலர்கள் கொடுப்பதை விற்பனைக்கு வைத்துள்ளோம்’ என, தெரிவித்துள்ளனர். பின்னர், அவர், சம்பந்தப்பட்ட டீலரிடம், ஃபோன் மூலம் விளக்கம் கேட்டார். அவர்கள், ‘இது இயற்கை உணவு என்பதால், பூச்சிகள் வரத்தான் செய்யும்; ஒரு சில பாக்கெட்களில் தவறு நடந்திருக்கலாம்; ஒன்றும் செய்ய முடியாது’ என, அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். விரக்தியடைந்த தட்சணாமூர்த்தி, இதுகுறித்து, நேற்று, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதாவிடம் புகார் செய்தார். இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில், ”சம்மந்தபட்ட சூப்பர்மார்க்கெட்டில் ஆய்வு செய்து, உணவு பொருட்களை ஆய்வுக்கு அனுப்பவுள்ளோம்; ஆய்வு முடிவை வைத்து, நடவடிக்கை எடுக்கபடும்,” என்றார்.
*இதேபோல், சேலம், அம்மாபேட்டை, சடகோபன் நகர் பகுதியை சேர்ந்த விநோத்குமார் என்பவர், கடந்த, 10ம் தேதி, இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், தன் குழந்தைகளுக்கு குவாக்கர் ஓட்ஸ் வாங்கியுள்ளார். அதில், புழுக்கள் மற்றும் சிறுசிறு வண்டுகள் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக, சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூபதி மூலம், உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் வினோத்குமார் புகார் செய்துள்ளார்.

Categories: DISTRICT-NEWS, Salem