Archive

Archive for 22,September, 2015

ஊட்டி பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு

22,September, 2015 Comments off
ஊட்டி:ஊட்டியில் உள்ள சில பேக்கரிகளில் சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள் தயாரிக்கப்படுவது, அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்தது.ஊட்டியில், இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அலுவலர் டாக்டர் ரவி மற்றும் ஊழியர்கள், ஓட்டல், பேக்கரி, டீக்கடைகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி உள்ள சில பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பாம்பே கேசில் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்படுவதும், பேக்கரியின் அடுப்பு அமைக்கப்பட்டு புகை மண்டி இருப்பதும் தெரிய வந்தது. அத்தகைய தின்பண்டங்களை பறிமுதல் செய்து, அப்புறப்படுத்திய அலுவலர்கள், சுகாதாரமான முறையில் தின்பண்டங்களை தயாரிக்க அறிவுரை வழங்கினர். உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி கூறுகையில்,“ ஓட்டல், பேக்கரிகளை சுகாதாரமாக பராமரிக்கவில்லை எனில், அதன் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.