Archive

Archive for 26,September, 2015

உணவு பாதுகாப்பு அதிகாரியை சமாதானப்படுத்த முயற்சி

26,September, 2015 Comments off

சேலம்: சேலத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த, வின் ஸ்டார் இந்தியா நிறுவன அதிபர் தலைமறைவாகி விட்டார். அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், ஆதரவு வக்கீல்களும், நேற்று, அதிகாரியின் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேலம் மாவட்டத்தில், வின் ஸ்டார் இந்தியா நிறுவனம் சார்பில், நெல்லிக்காய் ஜூஸ், கற்றாழை ஜூஸ் ஆகியவை பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதற்கான ஆலை, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில், ‘ஏ1 அக்ரோ புட்ஸ்’ என்ற பெயரில் உள்ளது. அந்நிறுவனம் விற்பனை செய்யும் ஜூஸில், ரசாயனம் அதிகம் கலந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. அதையடுத்து, மாவட்டம் முழுவதும், ஜூஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், வின் ஸ்டார் இந்தியா நிறுவனத்துக்கான, ‘டிவி’யில் நேரடி நிகழ்ச்சி ஒன்றில், தடை போட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவை, அதன் நிறுவனரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சிவகுமார், தகாத வார்த்தைகளிலும், அநாகரீகமாகவும், பேசியதாக தெரிகிறது. அதேபோல், அவர் அலுவலகத்தில் இருந்தபோது, சிவகுமாரும், அவருடைய உதவியாளர் சுரேஷ் என்பவரும், மொபைலில் தொடர்பு கொண்டு, பெண் என்றும் பாராமல் ஆபாசமாக பேசியுள்ளனர். அதையடுத்து, கலெக்டரிடம் தகவல் தெரிவித்த அனுராதா, போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தார். இந்த தகவல் தெரியவந்ததும், சிவகுமார் தலைமறைவாகி விட்டார். அவருடைய உதவியாளர்கள், நான்கு பேரை பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர். தலைமறைவான சிவகுமாரை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிவக்குமார் நிறுவனத்தை சேர்ந்த சிலரும், அவரது வக்கீல்களும், உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.

உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது: வின் ஸ்டார் நிறுவனம் விற்பனை செய்யும், ஜூஸ்களில் ரசாயனம் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. கடந்த, 14ம் தேதி, மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு தடை போட்டேன். 30ம் தேதிக்குள், நச்சுத்தன்மை இல்லையென்பதை உறுதி செய்யும் வகையில் ஜூஸ் கொண்டு வரவேண்டும். அது ஆய்வில் சரியானது என தெரியவந்தால், விற்பனைக்கு அனுமதிப்பேன் என, கூறியுள்ளேன். அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனத்தில் கூறி, இரண்டு தனியார், ‘டிவி’களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட விளம்பரத்தை நிறுத்துமாறு கூறியுள்ளேன். அந்நிறுவனத்தினர் நேரில் வந்து பேசினர். தரமான பானமாக இருந்தால் மட்டுமே விற்பனைக்கு அனுமதிப்பேன் என, கூறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்குகளை கவனிக்க அரசு வக்கீல் நியமனம்: சேலம், சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில், உணவு மாதிரிகளை ஆய்வு செய்யும் பகுப்பாய்வுக் கூடம் உள்ளது. தற்போது, உணவு பாதுகாப்பு அலுவலருக்கு உதவியாக, அது தொடர்பான வழக்குகளை நடத்த, அரசு வக்கீல் ஒருவர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டத்துக்கான அரசு வக்கீலாக, திருப்பூரைச் சேர்ந்த ரேவதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சேலம் உடையாப்பட்டியில் உள்ள பகுப்பாய்வு கூடத்தில், தனி அலுவலகம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

Categories: DISTRICT-NEWS, Salem

தேனி நகரில் உள்ள ஓட்டல்களில் உணவு பொருட்கள் தயாரிக்க வைத்திருந்த தரமற்ற இறைச்சி பறிமுதல்

26,September, 2015 Comments off

 

தேனி,

தேனி நகரில் உள்ள சில ஓட்டல்களில் உணவு பொருட்கள் தயாரிக்க வைத்திருந்த தரமற்ற இறைச்சியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பழைய இறைச்சி

தேனி நகர் பகுதிகளில் உள்ள சில ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த பணிகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில், தேனி வட்டார அலுவலர் பாண்டியராஜன், நகர் அலுவலர் கண்ணன் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.

தேனி நேரு சிலை சிக்னலில் இருந்து மதுரை சாலை வரை மற்றும் பாரஸ்ட்ரோடு பகுதியில் உள்ள ஓட்டல்கள், உணவுப் பொருட்கள் விற்பனை கடைகள், குளிர்பான கடைகள், பழக்கடைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சில ஓட்டல்களில் உணவு பொருட்கள் தயாரிக்க தரமற்ற இறைச்சியை அதிக அளவில் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

காலாவதி குளிர்பானம்

மேலும் சில கடைகளில் பழச்சாறு தயாரிப்பதற்காக வைத்திருந்த அழுகிய பழங்கள், காலாவதியான குளிர்பானங்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின் போது சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான பொருட்கள் மற்றும் கெட்டுப்போன இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

கடைகளில் குளிர்பானங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த போது, காலாவதியான குளிர்பானங்களை பெரியகுளத்தை சேர்ந்த நபர் ஒருவர் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை தேனிக்கு வரவழைத்து அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் அவருடைய விற்பனை உரிமத்தை ரத்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Categories: DISTRICT-NEWS, Theni

Food sector bodies demand refund of Rs 80 crore from FSSAI

26,September, 2015 Comments off
 

A joint committee of food sector’s nine organisations has demanded refund of Rs 80 cr collected by regulator FSSAI for product approvals since 2013.

NEW DELHI: A joint committee of food sector’s nine organisations has demanded refund of Rs 80 crore collected by regulator FSSAI for product approvals through advisories since 2013.

The panel, National Joint Action Committee, said that the advisories issued by the Food Safety Standards and Authority of India (FSSAI) since 2013 should be withdrawn immediately to give respect to Supreme Court’s order of August 19, which hold that these directives do not have the force of law.

"About Rs 80 crore have been collected by FSSAI for product approval through advisory and since advisory has no locus standi, the said fund should either be refunded to persons from whom it is collected or should be used for Clean India drive of Prime Minister," a statement, issued by the Confederation of All India Traders (CAIT), which is a member of the committee, said today.

"Nine national organisations of stakeholders of food industry have join hands together and formed a National Joint Action Committee to launch a nationwide campaign against autocratic attitude of FSSAI and to make a strong public advocacy in the country for review and overhauling of Rules and Regulations of Food Safety & Standards Act," it said.

"Since 2013 the FSSAI has issued about 15 advisories which are in public domain and with order of Supreme Court, all such advisories tend to be redundant and as such liable to be withdrawn," it added.

Food safety regulator FSSAI was established under Food Safety and Standards Act, 2006, which consolidates various acts and orders that hitherto handles food related issues.

Organisations including CAIT, Indian Drugs Manufacturers Association, Indian Hotel & Restaurant Association, Protein Food & Nutrition Development Association, Federation of Pharma Entrepreneurs, All India Food Processors Association, Retail Druggist & Chemists Association, All India Transport Welfare Association and Bhartiya Kisan Morcha are the members of the committee.

Categories: NEWS