Home > Dindigul, DISTRICT-NEWS > கடைகளில் காலாவதி பொருட்கள் பறிமுதல் பஸ் ஸ்டாண்டு பகுதியில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

கடைகளில் காலாவதி பொருட்கள் பறிமுதல் பஸ் ஸ்டாண்டு பகுதியில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

29,September, 2015

திண்டுக்கல், :  திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு துறையினர் பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டியில் திண்டுக்கல் மாநகராட்சி இடம் பெறுகிறது. அதற்காக உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் நகர் பகுதிகளில் ஹோட்டல், டீக்கடைகள, மருந்துக்கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று உணவு பாதுகாப்பு துறையினர் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். காலாவதியான பொருட்கள், மனித உடல்களுக்கு தீங்கு ஏற்படுத்த கூடிய உணவு பொருட்கள், அழுகிய பழங்கள் விற்பனை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தினர்.மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சாம்இளங்கோ, திண்டுக்கல் நகர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செல்வம், பாண்டியராஜ் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சாலையோர கடைகளில் அதிக சிவப்பு பொடிகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 15 கிலோ பொறிக்கப்பட்ட சிக்கன்களை பறிமுதல் செய்து அழித்தனர். மருந்துகடைகளில் காலாவதியான பொருட்கள், டீக்கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் உரிமையாளர்கள் மீது ரூ.1 முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி சட்ட ரீதியான சீல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Categories: Dindigul, DISTRICT-NEWS
%d bloggers like this: