Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

31,October, 2015

imggallery

கடலுார்: கடலுார் நகர இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் இனிப்பு மற்றும் பலகார கடைகளில் சுகாதாரமான முறையில் உணவுப் பொருள் தயாரிக்கப்படுகிறதா என்பதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, கடலுார் லாரன்ஸ்ரோடு, புதுப்பாளையத்தில் உள்ள இனிப்பு, பலகார கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடலுார் நந்தகுமார், பண்ருட்டி நல்லதம்பி, குறிஞ்சிப்பாடி சுப்ரமணியன், புவனகிரி குணசேகரன் ஆகியோர் நேற்று, ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, தரமான மாவு, தரமான எண்ணெய் கொண்டு இனிப்பு, பலகாரம் தயாரிக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. செயற்கை வண்ணங்களை சேர்க்கக் கூடாது. பொட்டலப் பொருட்களில் தயாரிப்பு தேதி, பயன்பாடு காலம் குறிப்பிட வேண்டும். உணவுப் பொருள் தயாரிக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டுமென, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS
%d bloggers like this: