Home > DISTRICT-NEWS, Ramanathapuram > உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்

உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்

13,December, 2015

கீழக்கரை:கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உணவுப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். கீழக்கரை நகராட்சி உணவுப்பாதுகாப்பு அலுவலர் நாகலிங்கம் தலைமை வகித்தார். கமுதி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துச்சாமி, முதுகுளத்தூர் வால்மீகி, கடலாடி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உண்வு பாதுகாப்பு, தர நிர்ணயச் சட்டங்கள், நுகர்வோரின் கடமைகள், கலப்படத்தை தடுக்கும் முறைகள் குறித்து மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர். வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் பாண்டி சசிகலா நன்றி கூறினார்.

%d bloggers like this: