Home > Cuddalore, DISTRICT-NEWS > வடலுாரில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

வடலுாரில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

17,December, 2015

imggallery

வடலுார்: வடலுாரில் இறைச்சி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

வடலுார் உழவர் சந்தை பின் புறம் உள்ள மீன் இைறச்சி கடைகளில் அருகில் செல்லும் கால்வாய் தண்ணீர் பயன்படுத்தி சுகாதாரம் இன்றி இைறச்சி விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன், நல்லதம்பி, குணசேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது ஆடு, கோழி, மீன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவும், கோழி, ஆடுகளின் கால், முடி, இறக்கை, மீன் செதில்கள், தனியாக ஒரு கூடையில் சேகரித்து குழி தோன்டி புதைக்கவும், விற்பனை முடித்தவுடன் கடையை சுத்தப்படுத்தி கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும். காலை கடையை திறக்கும் போது நன்றாக சுத்தம் செய்து விட்டு கடையை திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள இறைச்சிகள் மீது ஈக்கள் மெய்க்காமல் இருக்க வலைகளால் மூடி வைக்க வேண்டும் என எச்சரித்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS
%d bloggers like this: