Home > NEWS > 214 லாரிகளில் தரமற்ற குடிநீர்

214 லாரிகளில் தரமற்ற குடிநீர்

19,December, 2015

சென்னை:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், குடிநீர் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளதால், அதில், ‘குளோரின்’ அளவை சரி பார்த்து வழங்க, உள்ளாட்சிகளுக்கு, சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில், விவசாய கிணறுகளில் இருந்து, தனியார் லாரிகளில் குடிநீர் எடுத்து, வினியோகம் செய்கின்றன. இந்த லாரிகளை மடக்கி, உணவு பாதுகாப்பு துறையினர், தர பரிசோதனை செய்கின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், ஒரு வாரத்தில், 1,400 லாரிகளை, அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், 214 தனியார் லாரிகளில், குடிநீர் தரமின்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.இந்த லாரி உரிமையாளர், ஊழியர்களை எச்சரித்த அதிகாரிகள், சரியான அளவு குளோரின் கலந்து, வினியோகத்திற்கு அனுப்பி வைத்தனர். குளோரின் அளவை பராமரிக்காத, 11 லாரிகளுக்கு, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Categories: NEWS
%d bloggers like this: