Home > DISTRICT-NEWS, Kanniyakumari > ஓட்டல்களில் காலாவதி உணவு பொருட்கள் அழிப்பு

ஓட்டல்களில் காலாவதி உணவு பொருட்கள் அழிப்பு

25,December, 2015

குமரி ஓட்டல்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் காலாவதி உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் ஆகும். இதனால் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கடற்கரையோரங்களில் திடீர் ஓட்டல்கள் மற்றும் நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டல்கள் மற்றும் கடைகளில் சுகாதாரமற்ற முறையிலும், காலாவதியான, கெட்டுப்போன உணவுகள் வழங்கப்படுவதாகவும் குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவானுக்கு புகார்கள் சென்றன. உடனே அவர் காலாவதி உணவு பொருட்களை கண்டுபிடித்து அழிக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சாலோடீசன் அறிவுறுத்தலின் பேரில், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரநாராயணன், பிரவின் ரகு மற்றும் அதிகாரிகள் கடற்கரை சாலை, காந்த மண்டபம் பஜார், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கெட்டுப்போன மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அதனை கீழே கொட்டி அழித்தனர். இந்த சோதனையின் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

%d bloggers like this: