Home > NEWS > காலாவதி உணவுப் பொருட்களை களைய மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

காலாவதி உணவுப் பொருட்களை களைய மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

28,December, 2015

உணவுப் பொருட்கள் காலாவதி ஆகும் காலத்தை சுட்டிக்காட்ட பாக்கெட்டுக்களில் குறிப்பிட்ட தேதியை மட்டுமே அச்சிட வேண்டும் என்பதை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. 
உணவுப் பொருட்கள் காலாவதி ஆகும் காலத்தை குறிப்பிட்ட தேதியை பாக்கெட்டுக்களில் அச்சிடுவது அல்லது இத்தனை நாட்களுக்குள் சாப்பிடுவது சிறப்பானது என அச்சிடுவது ஆகிய இரண்டு நடைமுறைகள் தற்போது கடைபிடிக்கப்படுகின்றன. 
லேபிள்களில் இவ்வாறு இருவேறு குறிப்புகள் காணப்படுவது நுகர்வோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் தெரிவித்து இருந்தது. இது சம்பந்தமாக உணவுத்தர நிர்ணய மற்றும் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது. 
இந்நிலையில் இது குறித்து ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உணவுப்பொருட்களின் பாக்கெட்டுக்களில் காலாவதியாகும் காலத்தை குறிப்பிட்ட தேதி மூலமே சுட்டிக்காட்ட வேண்டும் என கூறினார். 
இதனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை குறித்து விவாதிக்க தமது அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்ட உள்ளதாகவும் ராம் விலாஸ் பஸ்வான் கூறினார். 
ஒவ்வொரு நகரத்திலும் சாலையோர உணவுப் பொருள் கடைகளை அமைப்பதற்கென்றே தனியாக இடம் ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

Categories: NEWS
%d bloggers like this: