Home > NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

29,December, 2015

thiruvarur

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மதிவாணன் அறிவுறுத்தலின் பேரில் தமிழக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட விளமல், பேருந்து நிலையம் , கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில்  திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள், தடைசெய்யப்பட்ட பான்மசாலா விற்பனை செய்யப்படுகிறதா என்று சோதனை செய்தனர். ஆய்வில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள், ரொட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆய்வை மேற்கொண்ட உணவு  பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த விற்பனையாளர்களை கடுமையாக எச்சரித்தார்.

Categories: NEWS
%d bloggers like this: