Home > NEWS > மாமூல் அதிகாரிகளால் காலாவதி பொருட்கள் விற்பனை-தினமலர் செய்தி

மாமூல் அதிகாரிகளால் காலாவதி பொருட்கள் விற்பனை-தினமலர் செய்தி

2,January, 2016

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், மாமூல் வாங்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளால், காலாவதி பொருட்கள் விற்பனை, கனஜோராக நடக்கிறது.

பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் டவுன் பஞ்சாயத்துகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மளிகை, பெட்டி, ஓட்டல், டீ கடைகள் உள்ளன. அங்கு, காலாவதியான குளிர்பானம், மாவு பொருள், தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்டவை விற்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சோதனை என்ற பெயரில் மாமூல் பெற்று, கண்டுகொள்வதில்லை. ஆனால், பெட்டி கடைகளில் மட்டும், காலாவதி குளிர்பானம், பான்பராக், குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்கின்றனர். அந்த பொருட்களை, அந்த கடைக்காரர்களிடமே கொடுத்து, ஒரு கணிசமான தொகையை பெற்றுவிடுகின்றனர். பெரிய கடைகளில், குறிப்பிட்ட தொகையை வாங்கி விடுகின்றனர். இதனால் உணவு பாதுகாப்பு அதிகாரிகளை கண்டாலே, கடையை பூட்டி செல்லும் நிலைக்கு கடைக்காரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Categories: NEWS
  1. 4,January, 2016 at 6:29 pm

    What action taken by DO ?

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: