Home > DISTRICT-NEWS, The Nilgiris > கூடலூரில் கிறங்கடிக்குது போதைப்பாக்கு விற்பனை

கூடலூரில் கிறங்கடிக்குது போதைப்பாக்கு விற்பனை

5,January, 2016

கூடலூர்:  கூடலூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகள்  விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கம்பம் அருகே உள்ள கூடலூரில் தடைசெய்யப்பட்ட போதைப்பாக்கு, புகையிலைப் பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். புற்றுநோய்க்கு புகையிலையும் ஒரு காரணம் என அறிந்திருந்தும், இதன் விற்பனை கூடலூரில் பன்மடங்காக அதிகரித்துள்ளது.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பாக்கு மற்றும் புகையிலை விற்பது சட்டப்படி குற்றம். மீறி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. அண்டை மாநிலமான கேரளத்தில் போதைப்பாக்கும், புகையிலையும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கூடலூர் பகுதியில் தாராளமாக விற்பனை செய்கின்றனர். அதிகாரிகளின் சோதனை கண்துடைப்பாக உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். பள்ளி, கல்லூரி அருகே உள்ள போதைப்பாக்கு, தடைசெய்யப்பட புகையிலைப் பொருட்களின் விற்பனை அதிகமாக உள்ளது. எனவே, நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூடலூரில் போதைப் பாக்கு, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

%d bloggers like this: