Home > NEWS > புது உணவுப் பொருளாகிறது:சர்க்கரை கலந்த கரும்பு வெல்லம்

புது உணவுப் பொருளாகிறது:சர்க்கரை கலந்த கரும்பு வெல்லம்

8,January, 2016

மதுரை:’விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் போது சர்க்கரையை சேர்த்து தயாரிப்பதால், தரம் மாறுகிறது. இதை விற்கும் வியாபாரிகள் குற்றவாளிகளாக கருதப்படுவதை தடுக்க, சர்க்கரை கலந்த வெல்லத்தை புது உணவுப்பொருளாக அறிவிக்க வேண்டும்,’ என, உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர். இதுகுறித்து மத்தியமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டாவிடம் சங்கத் தலைவர் ஜெயபிரகாசம், செயலாளர் வேல்சங்கர் மனு அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது: வெல்ல உற்பத்தியின் போது இனிப்பு, நிறம், வடிவம், கட்டிக்காக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் வெல்லத்தை விற்கும் வணிகர்கள் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காண, வெல்லம் – சர்க்கரையை புதிய உணவுப்பொருளாக அறிவிக்க வேண்டும். மைசூரு மத்திய உணவு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி புதிய தரத்தை நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடமும், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணைய சேர்மன் ஆஷிஷ் பகுகுணாவிடம் வலியுறுத்தினோம்.

இதுகுறித்து முடிவு எடுக்க வணிகர் சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் நடத்தப்படும் என பகுகுணா தெரிவித்தார், என்றனர்.

Categories: NEWS
%d bloggers like this: