Home > DISTRICT-NEWS, Virudhunagar > ஸ்ரீவில்லிபுத்தூரில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்

8,January, 2016

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில், நகரில் பல்வேறு இடங்களில் காலாவதியான உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை குறித்து வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு  மேற்கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன், ஒன்றிய அலுவலர் கருப்பையா, வத்திராயிருப்பு அலுவலர் சீனிவாசன், ராஜபாளையம் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.காலாவதியான குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதனை வைத்திருந்த கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் இனிமேல் இதுபோன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்ற உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெறப்பட்டது.நகராட்சி ஆணையாளர் பழனிவேல் கூறுகையில் இதுபோன்ற ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்றார்.

%d bloggers like this: